May

மே 31

மே 31

தானியம்ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல….. (யோபு 5:26).

உடைத்தெடுக்கப்படும்கப்பல்களிலிருந்து எடுக்கப்படும் மரம் உயர்ந்த தரமாயிருப்பதன் காரணம் அவைகளின்வயதுமட்டுமல்ல, கடலில் அக் கப்பல்கள் செல்கையில் அலைகளால் அடிபட்டு அலைகளின் அழுத்தம்,இழுவை ஆகியவைகளுக்குட்பட்டு வலுவடைவதுமே என்று பழைய கப்பல்களிலிருந்தெடுக்கும் மரங்களைஏலத்தில் எடுக்கும் ஒருவர் கூறுகிறார். அவ்விழுவைகளும், முறுக்கங்களும் அழுத்தங்களும்அம்மரங்களிலுள்ள நார்கள வலுவுறச் செய்கின்றன. அவற்றுள் ஊறிவிடும் கடல் நீரால் ஏற்படும்இரசாயன மாற்றங்களும், அவை ஏற்றிச்செல்லும் பொருள்களும் அவற்றின் வலுவுக்கும் உயர்வுக்கும்காரணமாகலாம்.

எண்பது வயதான ஒருகப்பலிலிருந்து எடுக்கப்பட்ட பலகைகளும், பலகை ஒட்டுகளும், சில ஆண்டுகளுக்கு முன்னர்நியூயார்க் நகரின் பிராட்வே பகுதியிலள்ள ஒரு மரச்சாமான் கடையில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தன. அவைகளின் அழகான வர்ணங்களும் அமைப்பும் அனைவரையும் கவர்ந்தன. 60ஆண்டுகள் கடலில் சென்ற ஒரு மரக்கலத்தின் உத்தரங்களும்கூட அநேக மக்களைக் கவர்ந்தன. அம்மரங்களிலிருந்த சிறுசிறு துளைகள் காலத்தால் அடைபட்டுவிட்டன. கடல் நீரில் கிடந்ததால்மரத்தின் வண்ணம் சிறப்படைந்தது. அது ஒரு பெட்டியாகச் செய்யப்பெற்று ஒரு தனவந்தரின் இல்லத்தில்அழகுக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது.

தங்களது வாழ்க்கையைத்தன்னலமான, ஒழுங்கற்ற முறையில் வாழ்ந்த முதியவர்களுடைய வாழ்க்கைக்கும், பிறர்க்குபணிபுரிந்து, எல்லா வகைகளிலும் துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்த ஆண்டவருடையபணியாள்களானவர்களாக வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் பலவுண்டு.

வாழ்க்கையின் இறுக்கங்களும்,முறுக்கங்களும், அழுத்தங்களும் போன்ற துன்பங்கள் மட்டுமல்ல, அவ் வாழ்க்கைகள் சுமந்துசென்ற இனிய பண்புகளாகிய பொருள்களும் அவ் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகட்கும் சென்றுஅவ் வாழ்க்கையை அழகு செய்து வளப்படுத்துகின்றன.

கதிரவன் மாலையில்தொடுவானத்திற்கு கீழ் இறங்கிவிட்ட பொழுது அது முற்றிலுமாக மறைந்து விடுவதில்லை. பின்னும்ஒரு மணிநேரத்திற்கு அதன் ஒளி அந்தி வானத்தை அழகுறச் செய்யும். நல்லவரான பெரியவர்ஒருவர் மறைந்து நெடுநாள்களானாலும், இவ்வுலகுக்கு அழகூட்டிக்கொண்டேயிருக்கும். அத்தகையமனிதர் இறந்து விட்டாரெனக் கூறலாகாது. அவர் தன்னில் ஒரு பகுதியை விட்டுத்தான்சென்றிருக்கிறார்.

எண்பது வயது தாண்டியவிக்டர் கியூகோ என்னும் பெரியவர் தனது விசுவாசத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். என்வருங்காலத்தைப்பற்றிய உணர்வுகள் எனக்கு உண்டு. அடுத்தடுத்து வெட்டி வீழ்த்தப்பட்ட ஒருகாட்டைப் போல நான் இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் வரும் புதிய துளிர்கள்,முன்வந்தவற்றைவிட அதிகச் சிறப்பானவைகளாக உள்ளன. உயர உயரமாக நான் வளருகிறேன்.சூரிய ஒளி என் சிரத்தை அலங்கரிக்கிறது. நிலம் எனக்கு நல் ஊட்டம் தருகிறது.அறியப்படாது உலகங்களின் ஒளியால் விண்ணுலகம் என்னை நிரப்புகிறது.

உடலாற்றல்களின் தொகுப்புமுடிவே, ஆன்மாவெனக் கூறுகிறீர்கள். அவ்வாறானால், என் உடல் ஆற்றல் குறைந்திடும்பொழுதுஎவ்வாறு என் ஆன்மா பிரகாசிக்கும்? என் தலையின்மீது மாரிகாலமாக இருக்கிறது. இந்தவயதிலும் கூட நான் லைலாக்கு, வயலட், ரோஜா போன்ற மலர்களின் நறுமணத்தை என் இருபதாவதுவயதில் முகர்ந்ததுபோலவே முகர்ந்து மகிழ்கிறேன். என்னை அழைக்கும் இனிய உலகின் இன்னிசைதனைஎன் நேரம் நெருங்க நெருங்க, நான் மிகத் தெளிவாகக் கேட்கிறேன். இது எளிமையானதுதான்,ஆனால் அற்புதமானது.