March

மார்ச் 29

காட்டுப் புஷ்பங்கள்எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள் (மத்.6:28).

ஆதிகாலத்து சந்நியாசிஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். கர்த்தாவே, இதன்மெல்லிய வேர்கள் குடித்து இம்மரம் பெரிதாக இதற்கு மழை தேவை. ஆகவே, சிறு தூறலை அனுப்பும்என்று ஜெபித்தார். தேவன் மழையைப் பெய்யச் செய்தார். ஆண்டவரே, என் மரத்திற்கு சூரியவெப்பம் வேண்டும். சூரியனை அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன் என்றார். மழையால் நனைந்தமேகங்களினூடே சூரியன் பிரகாசித்தது. இப்பொழுதும் அதன் பாகங்கள் உறுதிபடக் கடும் பனிவேண்டும் என்றார். இதோ, அந்தச் சின்ன மரத்தில் பனித்துளிகள் மின்னின. ஆனால் அந்தச்செடி சாயங்காலத்தில் வாடிப்போயிற்று.

அந்தச் சந்நியாசிதன்னைப்போலொத்த மற்றொரு சந்நியாசியிடம் சென்ற தன் கதையைச் சொன்னார். அதைக்கேட்ட சந்நியாசி, நானும் ஒரு சின்ன மரம் நட்டேன். இதோ, பாரும் அது செழித்துவளர்ந்துள்ளது. நான் என் மரத்தை தேவனிடம் நம்பிக்கையாய் விட்டு வைத்தேன். அதைஉண்டாக்கினவர் இதற்கு இன்னது தேவை என்பதை என்னை விட நன்றாய் அறிவார். நான் ஒருநிபந்தனையும் வைக்கவில்லை. வழிவகைகளை நான் வரையறுக்கவில்லை. தேவனே! அதற்குப் புயலோ,வெயிலோ, காற்றோ, மழையோ, எது தேவையோ அதை அனுப்பும். சிருஷ்டியாகிய நீர் அதன்தேவைகளை அறிவீர்! என்று ஜெபித்தேன் என்றார்.

அவரிடம் ஒப்பவித்துவிடு

காட்டு மலர்களும்அவ்விதமே செய்கின்றன

அவைகள் வளர்கின்றன.

மழையிலும் வளர்கின்றன,

பனியிலும் வளர்கின்றன,

ஆம், அவை வளர்கின்றன.

இரவின் இருட்டில்மறைந்து வளர்கின்றன

ஒளியால் வெளிப்பட்டுவெளியில் வளர்கின்றன.

இன்னும் அவைவளர்கின்றன

ஆம் அவரிடமேவிட்டுவிடு

காட்டு மலரைவிடஅவரிதயத்திற்கு

நீ அதிக நேசமாம்என்பதை அறிவாய்

பனியின் கீழ்ப்பூக்கும் இனிய மலரினும் உனை நேசிக்கிறார்.

உன் தேவை எதுவாயிருப்பினும்,ஜெபத்திலே கேள். அவர் உன்னை விசாரிக்கிறவரானதால் அவரிடம் விட்டுவிடு, நீ, நீயே இதைஅறிவாய்.