February

பெப்ரவரி 18

நீங்கள்ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம்என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்.11:24).

என் மகன் பத்துவயதாயிருக்கும்போது, அவனுடைய பாட்டி அவனுக்குக் கிறிஸ்மஸ் பரிசாகத் தபால் பில்லைகள்சேர்த்துவைக்கும் ஒரு புத்தகம் கொடுப்பதாக வாக்களித்தார். கிறிஸ்மஸ் வந்தது.பாட்டியிடமிருந்து அப் புத்தகம் வரவில்லை. அதைக் குறித்து ஒரு செய்தியும் வரவில்லை.நாங்கள் அக்காரியத்தைக் குறித்து ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. நாங்கள் அக்காரியத்தைக் குறித்துப் பேசவுமில்லை. அவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதிகளைப் பார்க்க, அவனுடையசிநேகிதர் வந்தபோது, அவனுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெகுமதியைiயும் பேர் பேராகச் சொல்லி,கடைசியில் பாட்டியிடமிருந்து தபால் பில்லைகள் புத்தகம் ஒன்று என்று சொன்னபோது எனக்குஅச்சரியமாயிருந்தது.

இப்படி அநேகமுறை அவன்சொல்லக் கேட்டேன். பின்பு அவனை நான் அழைத்து, ஐhர்ஜ்! பாட்டியிடமிருந்து உனக்கப்பரிசு எதுவும் வரவில்லையே, என வந்ததாகவே சொல்கிறாய் என்று கேட்டேன்.

நான் அவ்வாறு கேட்பதுஅவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததுபோல் அவன் முகக்குறி காட்டிற்று. அவன் என்னைப்பார்த்து அம்மா, பாட்டி வாக்களித்தார்கள். ஆகையால் அது வந்ததுபோல்தானே என்றான்.அவனுடைய விசுவாசத்தைத் தடைபண்ண என்னால் ஒரு வார்த்தையும் சொல்ல முடியவில்லை.

ஒரு மாதம் கழிந்தது. இன்னும்அப்புத்தகத்தைக் குறித்து ஒரு செய்தியும் வரவில்லை. கடைசியாக என்னுள்ளத்தில் ஏன்அப்புத்தகம் வரவில்லை என்று வினவிக்கொண்டு பையனுடைய விசுவாசத்தைப் பரீட்சிக்க எண்ணி,ஐhர்ஜ், உன் பாட்டி உனக்குத்தான் கொடுத்த வாக்கை மறந்து விட்டார்கள் என்றுநினைக்கிறேன் என்றேன். உடனே அவன் அதற்குப் பதிலாக உறுதியுடன் அப்படியல்ல அம்மா!அவர்கள் மறக்கவில்லை என்றான். அவன் முகம் நான் சொன்னது சரியே என்று யோசிப்பதுபோலசிறிது நேரம் காட்சியளித்தது. கடைசியாக அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றிற்று.அவன் என்னை நோக்கி, அம்மா நான் பாட்டிக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதினால்நன்மை உண்டாகுமா என்று கேட்டான்.

நான் அது எனக்குத்தெரியாது. நீ செய்து பார்க்கலாம் என்றேன். என்னுள்ளத்தில் ஒரு பெரிய ஆவிக்குரியசத்தியம் புலப்பட்டது. சில நிமிடத்தில் அவன் ஒரு பெரிய கடிதம் எழுதித் தபாலில்போட்டான். தன் பாட்டியின் பேரிலுள்ள நம்பிக்கையால் சந்தோஷமாக சீழ்க்கை அடித்துச்சென்றான். வெகு சீக்கிரம் ஒரு கடிதம் வந்தது.

என் பிரிய ஜார்ஜ், நான்உனக்கு தபால் பில்லைகள் புத்தகம் தருவதாக வாக்களித்தேன். அதை மறந்துபோகவில்லை. நீவிரும்பிய புத்கத்தை வாங்கப் பிரயாசப்பட்டேன். ஆனால் அவ்விதமான புத்தகம்கிடைக்கவில்லை. நீயூயார்க் பட்டணத்திற்கு எழுதியிருந்தேன். அங்கும் நீ விரும்பினதுபோலகிடைக்கவில்லை. வேறோன்று அனுப்பும்படி எழுதினேன். அது இதுவரை வராததால் நீயே சிக்காகோசென்று வாங்கிக்கொள். உனக்கு மூன்று டாலர் அனுப்புகிறேன். இப்படிக்கு உன் அன்புள்ள பாட்டிஎன்று எழுதியிருந்தது.

அக்கடிதத்தை அவன்வாசித்தபோது அவன் முகம் ஒரு வெற்றி வீரனின் முகம்போல் விளங்கியது. பாட்டியின்வாக்கை ஒருபோதும் சந்தேகியாத அவன் பார்த்தீர்களா அம்மா! நான் உங்களுக்குச்சொல்லவில்லையா? என்றான். அவன் நம்பிக்கைக்கு இடம் இல்லாதபோதும் நம்பினான். அவன்நம்பிக்கைகொண்டியிருக்கையில் பாட்டி அவனுக்காகப் பிரயாசம் எடுத்துக்கொண்டார்கள்.எற்ற வேளையில் விசுவாசம் காணும் பொருளாக மாறிற்று.

கர்த்தருடைய வாக்கைமுன்னிட்டுச் செல்கையில் உறுதிக்கு அடையாளம் காணத்தேடுவது மனித இயற்கை. இரட்சகரைப்பின்பற்றின சந்தேகிகளில் ஒருவரான தேமாவைப் பார்த்து அவர் காணாமல் விசுவாசிக்கிறவன்பாக்கியவான் என்றார்.