February

பெப்ரவரி 08

இதோஉலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20). இந்த ஜீவியத்தின்மாறுதல்களையும், சந்தர்ப்பங்களையும் பயத்தோடே எதிர்பார்க்காதே. உன்னை ஆட்கொண்டகர்த்தர் எற்ற வேளையில் உன்னை விடுவிப்பார் என்று முழு நம்பிக்கையோடு அவைகளை நோக்கு.அவருடைய கரத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள. அவர் உன்னை எல்லாக் காரியங்களிலும்பத்திரமாய் நடத்தியிருக்கிறார். இன்னும் நடத்துவார். நீ நிற்கமுடியாதபோது உன்னைத் தமதுகரங்களில் ஏந்துவார். நாளைஎன்ன சம்பவிக்குமோ என்று கவலைகொள்ளாதே. இன்று உனக்காகக் கவலைப்படும் மாறாத பிதாநாளையும், ஒவ்வொரு நாளும் உன்னைக் கவனித்துக்கொள்வார். உன்னைக் கஷ்டத்திலிருந்துகாப்பார். அல்லது…

February

பெப்ரவரி 07

என்ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் (சங்.43:5). நாம்துக்கித்து இருக்க என்ன நியாயமுண்டு? இரண்டே காரணங்கள் உண்டு. நாம் இதுவரைமனந்திரும்பாவிட்டால் துக்கிக்கவேண்டும். இன்னும் பாவத்தில் ஜீவித்தால்துக்கிக்கவேண்டும். இவை இரண்டையும் தவிரதுக்கிக்க ஒரு காரணமுமில்லை. மற்ற யாவற்றையும் ஸ்தோத்திரத்தோடு கூடிய வேண்டுதலாககர்த்தருக்கு முன்பாக ஜெபத்தில் ஏறெடுக்கலாம். நம்முடைய சகல தேவைகளுக்கும், கர்த்தரின்வல்லமையின்பேரிலும், அவர் அன்பின் பேரிலும் உள்ள விசுவாசத்தைப் பயன்படுத்தலாம். நீகர்த்தரில் நம்பிக்கையாயிரு. இதை நினைவுகூருங்கள். எல்லா வேளைகளிலும், கர்த்தர்பேரில்நம்பிக்கையை வைக்கலாம். நம்முடைய தேவை எதுவாயிருந்தாலும், நம் தொல்லைகள் எத்தனைபெரிதாயிருந்தாலும்,…

February

பெப்ரவரி 06

கடலை உலர்ந்த தரையாக மாற்றினார். ஆற்றைக் கால் நடையாய்க் கடந்தார்கள். அங்கே அவரில் களிகூர்ந்தோம் (சங்.66:6). வெள்ளத்தைக் கடக்கையில் அங்கே அவரில் களிகூர்ந்தோம் என்றுசங்கீதக்காரன் சொல்லுகிறான். நடுக்கமும் பயமும் வேதனையும் கொள்வார்களென நாம் எதிர்பார்க்கக்கூடிய இடம் அது. ஆனாலும் அவர்கள் களிகூர்ந்தார்கள். இவ்விதமாகதங்கள் அனுபவத்தில் கண்டவர்கள் அநேகருண்டு. துக்கமும் கலக்கமுமான காலங்களில் அவர்கள்அவற்றை மேற்கொள்ளவும் மகிழவும் கூடியவர்களாயிருக்கிறார்கள். உடன்படிக்கை செய்வதில் கர்த்தர் எத்தனை சமீபமாயிருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் எத்தனைபிரகாசமாய்த் தோன்றுகின்றன. நாம் சுகமாய் இருக்கும் நாட்களில் இந்த…

February

பெப்ரவரி 05

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை (ஏசா.54:12). அமர்ந்திருப்பதிலுள்ளஆச்சரியமான சக்தியை நாம் அறிந்திருக்கறோம் என்று சொல்லமுடியாது. நாம்அவசரப்படுகிறோம். தேவன் கிரியை செய்ய இடம் கொடாமல் நாம் வேலைசெய்துகொண்டே இருக்கிறோம்.தேவன் தாம் ஏதாவது செய்ய முயலும்போதுதான் அமர்ந்திரு, சும்மா இரு, ஒன்றும் செய்யாதேஎன்று சொல்லுகிறார். இதுவே நம் கிறிஸ்தவ ஜீவித்திலுண்டாகும்சங்கடம். அவர் நம்மில் கிரியை செய்ய நாம் இடங்கொடுக்கவேண்டிய வேளையிலே, நாமேகிறிஸ்தர்களாயிருக்க வேண்டும் என்பதால் ஏதாவது செய்ய முயற்சிக்கிறோம். உன் உருவச்சித்திரம் சித்தரிக்கப்படுகையில் நீ எவ்வளவு அசைவின்றி அமர்ந்திருக்க வேண்டுமென்றுஉனக்குத் தெரியாதா?…

February

பெப்ரவரி 04

பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறி இருக்கும்படி பண்ணி…. (ஏசா.58:14). ஆகாய விமானத்தில்பறப்பவர்கள், காற்று முகமாக விமானத்தைத் திருப்பிக் காற்றுக்கு எதிர்த்துப் பறப்பதேஅவர்கள் படிக்கும் முதல் பாடம் என்று சொல்லுகிறார்கள். காற்று விமானத்தை அதிகஉயரத்திற்குப் தூக்குகிறது. இதை அவர்கள் எப்படி அறிந்தார்கள். இதைப் பட்சிகளிடமிருந்தேகற்றுக்கொண்டார்கள். ஒரு பறவை தன் இன்பத்திற்காகப் பறக்கும்போது காற்றோடு செல்லும்.ஆனால் உயர எழும்பி உயர சூரியனுக்கு நேரே ஆபத்தைச் சந்திக்கும்போதே எதிர்த்து பறக்கும். கஷ்டங்கள் கர்த்தருடையகாற்றுகள். நமக்கு எதிர்முகமாக வீசும் அவருடைய காற்று…

February

பெப்ரவரி 03

உடனே ஆவியானவர் அவரைவனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார் (மாற்.1:12). இது தெய்வ தயவிற்குஅத்தாட்சியான ஒரு விந்தையாய் தோன்றிற்று. உடனே எப்போது? வானங்கள் திறந்துதெய்வீகச் சாந்தி புறாவைப்போலிறங்கி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில்பிரியமாயிருக்கிறேன் என்ற சப்தமும் கேட்டவுடன், இது இயற்கைக்கு மாறானதல்ல, என்:ஆத்துமாவே! நீயும் இவ்வழி சென்றிருக்கிறாய். நீ ஆனந்தமாய் உயரப்பறக்கும்சந்தர்ப்பத்தை அடுத்து உனக்கு அதிக மனத்தாங்கல் உண்டானதில்லையா? நேற்று நீ சந்தோஷத்தின்செட்டையை விரித்து, ஆகாயத்தில் பறந்து காலையில் மகிமையாய் பாடினாய். இன்று செட்டைகள்மடங்கி, உன் பாட்டு அடங்கியிருக்கிறது. பகலில்…

February

பெப்ரவரி 02

தமது கரத்தின் நிழலினால்என்னை மறைத்து என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியில்மூடிவைத்தார் (ஏசா.49:2). எப்போதாவது ஒரு சமயத்தில்நிழலில் செல்லத்தான் வேண்டும். பகலின் வெளிச்சம் அதிகப் பிரகாசமாய் இருக்கிறது.அதனால் நமது கண்கள் நலிவுற்றுள்ளன. ஆகையினால் நிறங்களின் துல்லிய ரகங்களைநோயாளியின் அறையிலும் துக்கம் நிறைந்த வீட்டிலும் ஒளியிழந்த வாழ்விலும் உள்ளவைகளைப்பார்க்க முடியாதவர்களாயிருக்கிறோம். ஆனால் பயப்படத்தேவையில்லை!அது தேவனின் கரத்திலுள்ள நிழலே. அவர் உன்னை நடத்துகிறார். நிழலில் மட்டுமே நாம்கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்களுண்டு. அவருடைய முகரூபம் இருட்டறையில்தான்பதிவு செய்யக்கூடும். ஆனால்…

February

பெப்ரவரி 01

என்னால் இந்தக் காரியம் நடந்தது (1.இராஜா.12:24). வாழ்க்கையின் ஏமாற்றங்கள் உண்மையின் அன்பினால் அருளப்படுபவையே! என் அன்பிற்குரிய பிள்ளையே! இன்று உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். இதை மெதுவாக உன் காதில் சொல்கிறேன். இச்செய்தி இருண்ட மேகங்களைப் பிரகாசிக்கச் செய்யவும், நீ நடக்க நேரிடும் கரடு முரடான பாதைகளைச் சமமாக்கவும் வல்லது. இது நான்கு வார்த்தைகள்கொண்ட சின்னச் செய்திதான். ஆனால் அதை உன் இருதயத்தின் ஆழத்தில் பொதிந்துவை. அதை நீ களைத்து இருங்குங்கால் உன் தலைக்குத் தலையணையாக உபயோகப்படுத்து.…