மே 22
மே 22 அவரே காரியத்தைவாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5). உன் வழிகளைக் கர்த்தருக்குஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்ற இவ்வசனத்தையெங் என்பவர், உன் வழியை யேகோவாவின்மேல் உருட்டிவிடு, அவரையே நம்பியிரு. அவர்செயலாற்றுகிறார் என்று மொழிபெயர்த்திருக்கிறார். நாம் நமதுபாரங்களனைத்தையும், அவைகள் கவலைகளாயிருக்கலாம், கஷ்டங்களாயிருக்கலாம், உடலுக்கானதேவைகளாயிருக்கலாம், அருமையான ஒருவனுடைய மனந்திரும்புதலைப்பற்றியபெருங்கவலையாயிருக்கலாம், எல்லாவற்றையும் கர்த்தருக்கு ஒப்புவித்து அல்லது அவர்மேல்உருட்டிவிட வேண்டும். அப்போது உடனடியாகவே அவருடைய செயலாக்கத்தைக் காணலாம். அவர் செயலாற்றுகிறார்.எப்பொழுது? இப்பொழுதே. அவர் நமது நம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறார். நாம், அவர்செய்யவேண்டுமென்று கூறியதை,…