ஐனவரி 12
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்பொது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக்.1:2-3). தேவன் தம் ஜனத்தைப் பாதுகாக்க அவர்களைச் சுற்றி ஒரு வேலியை ஏற்படுத்துகிறார். ஆனால் அவர்கள் அதைத் தவறாக அர்த்தப்படுத்தி அவருடைய செயலை அறியாதிருக்கிறார்கள். யோபினுடைய அனுபவமும் இதுவே (யோபு 3:23). ஆனால் சாத்தான் அந்த வேலியின் உபயோகத்தை அறிந்திருந்தான் (யோபு 1:10). துன்பங்களாகிய இலைகள் ஒளியை ஓரளவு மறைத்தாலும் அவற்றினிடையே ஒளிவர வழியுண்டு.…