பெப்ரவரி 01
என்னால் இந்தக் காரியம் நடந்தது (1.இராஜா.12:24). வாழ்க்கையின் ஏமாற்றங்கள் உண்மையின் அன்பினால் அருளப்படுபவையே! என் அன்பிற்குரிய பிள்ளையே! இன்று உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். இதை மெதுவாக உன் காதில் சொல்கிறேன். இச்செய்தி இருண்ட மேகங்களைப் பிரகாசிக்கச் செய்யவும், நீ நடக்க நேரிடும் கரடு முரடான பாதைகளைச் சமமாக்கவும் வல்லது. இது நான்கு வார்த்தைகள்கொண்ட சின்னச் செய்திதான். ஆனால் அதை உன் இருதயத்தின் ஆழத்தில் பொதிந்துவை. அதை நீ களைத்து இருங்குங்கால் உன் தலைக்குத் தலையணையாக உபயோகப்படுத்து.…