பெப்ரவரி 11
ஆசாரியர்கள் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலேபட்டமாத்திரத்தில்….. தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் (யோ.3:13). வழி திறக்கும்வரை ஜனங்கள்தங்கள் கூடாரங்களில் காத்திராமல் விசுவாசத்துடன் நடக்கவேண்டியதாயிருந்தது. ஆற்றில்வழி பிறக்குமுன் அவர்கள் கூடாரங்களை அவிழ்த்துச் சாமான்களைக் கட்டி முன்னேறிச் செல்லவரிசையாய் நின்று ஆற்றங்கரைக்கும் செல்லவேண்டும். அவர்கள் ஆற்றங்கரைக்குச்சென்று ஆற்றினுள் இறங்கு முன் தண்ணீர் ஓட்டம் நின்று குவியக் காத்திருப்பார்களானால் அதுவீணாய்க் காத்திருப்பதாகும். ஆனால் தண்ணீர் குவியுமுன் அவர்கள் ஆற்றினுள் அடி எடுத்துவைக்கவேண்டும். நாம் முன்னேறிச் செல்லும்வழியை அறியாவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தையையே நம்பி…