March

மார்ச் 3

அப்பொழுது அது (அசுத்தஆவி) சத்தமிட்டு அவனை மிகவும் அலைக்கழித்துப்புறப்பட்டுப்போயிற்று (மாற்.9:26). தீமைபோராட்டமில்லாமல் நம்மை விட்டுப்போகாது சந்தோஷமான வனபோஜனத்திற்குரியஅனுபவத்தினால் நாம் பரிசுத்த ஆவியானவரின் சுதந்திரத்தைப் பெறமுடியாது. எப்போதும்போர் செய்தே பெறவேண்டும். ஆத்துமாவின் இரகசிய பீடத்தில் இப்படியே நடந்து வருகிறது.நமது உள்ளத்தில் ஒவ்வொரு சக்தியும் மிகுந்த துன்பத்தின் மூலமாகவே ஆவிக்குரிய விடுதலையைஅடைகிறது. மரியாதையான விண்ணப்பத்தினால் அப்போலியோனை (மோட்சப்பயணம் என்னும்நூலில் கிறிஸ்தியானை எதிர்த்த பிசாசை) அப்பால் போகச் செய்ய இயலாது. அவன் வழியைமறைத்து காலை விரித்துக்கொண்டிருக்கிறான். நாம் முன்னேறிச் செல்லும் வழியில்…

March

மார்ச் 2

விடியற் காலத்தில் நீ ஆயத்தமாகி, மலையில் உச்சியில் என்சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது (யாத்.34:23). காலையில்தியானிப்பது வெகு அவசியமானது. நீ கர்த்தரைப் பார்க்குமுன் அந்த நாளைப் பார்க்காதே.கர்த்தரின் முகத்தைக் காணுமுன் மற்றவரின் முகத்தைப் பார்க்காதே. உன் சுய பலத்தைக்கொண்டேநீ ஒரு நாளைத் தொடங்கினால் நீ வெற்றியை எதிர்பார்க்க முடியாது. உன் இருதயத்தில்கர்த்தரைத் தியானித்து அவரோடு சில நிமிடங்களேனும் அமைதியாய்த் தரிந்திருந்து அதனால்ஏற்படும் சிற்சில யோசனைகளின் சக்தியோடு உன் அன்றாட வேலையைத் தொடங்கு. உன்மேன்மையுள்ள…

March

மார்ச் 1

தேவனுடைய செயலைக் கவனித்துப் பார். அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்? (பிர.7:13). அடிக்கடிகர்த்தர் தமது பிள்ளைகளைத் தப்ப வழியில்லாதபடி இடுக்கத்தில் நிறுத்துகிறார். முன்பேஆலோசனை கேட்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட இடுக்கண்களுக்கு மனுஷீக தீர்ப்பு ஒருபொழுதும் இடங்கொடுத்திராது.மேகங்களே அவர்களை இந்நிலைமைக்கு வழி நடத்துகின்றன. ஒருவேளை இந்த நேரத்தில் நீஅப்படிப்பட்ட நிலைமையிலிருக்கலாம். அது நம்மைக் கலங்கச்செய்வதாயும், வெகு கவலைக்கிடமாக்குவதாயுமிருக்கலாம். ஆனால் அது சரியான காரியமே. அதன்பயன் உன்னை இவ்வழிக்கு நடத்தியவர் செய்தது சரி என்று காட்டக்கூடும். அது அவருடைய சர்வவல்லமையுள்ள ஆற்றலையும் கிருபையும்…

February

பெப்ரவரி 28

அவருடைய நாமத்தைத்துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குசெலுத்தக்கடவோம் (எபி.13:15). ஒரு நகரத்தில் ஊழியம்செய்து வந்து ஓர் உத்தம சுவிசேடகர் ஒரு தினம் ஓர் எளிய பெண்ணின் குடிசைக்குச் சென்றார்.அவளுடைய குடிசைக்குச் செல்லும் பாதை இருண்டு குப்பை கூளம் நிறைந்திருந்தது. அவர் உள்ளேநுழையும் சப்தத்தைக் கேட்டுக் குடிசை மூலையில் படுத்துக்கொண்டிருந்த நீக்ரோ பெண் தன்னைத்தேடி எவரோ ஒரு பெண்மணி வந்திருக்கிறாளென நினைத்து கண்மணி! நீ யாரம்மா? என்று மிகவும்கனிந்த குரலில் கேட்டாள். சுவிசேடகர்…

February

பெப்ரவரி 27

அப்பொழுது ஒரு புருஷன் பொழுதுவிடியுமளவும் அவனுடனே போராடி….(ஆதி.32:24). தனித்திருந்தான்.நம்முடைய மனதில் இவ்வார்த்தைகள் வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டுவரலாம். சிலருக்கு அதுயாருமின்றித் தனித்திருத்தலாகும். வேறு சிலருக்கு அமைதலும், ஓய்வும் என்று தோன்றும்.கர்த்தரின்றித் தனித்திருத்தல், சொல்லக்கூடாத நிர்பந்த நிலைமை, ஆனால் அவரோடுதனித்திருத்தல், பரலோக மாட்சிமையை முன்ருசித்தலாகும். அவரைப் பின்பற்றுகிறவர்கள் இன்னும்அதிக நேரம் அவரோடு தனித்திருந்தால் நமக்குள் ஆவிக்குரிய இராட்சதர்கள் இருப்பார்கள். நமது எஜமான் முன்மாதிரிகாட்டினார். அவர் எத்தனை தடவை பிதாவோடே தனித்திருக்கச் சென்றார் என்பதைக் கவனி. நீஜெபம்பண்ணும்போது உன் அறை வீட்டில்…

February

பெப்ரவரி 26

என் கிருபை உனக்குப்போதும் (2.கொரி.12:19) ஒருநாள் சாயங்காலம், நாள்முழுவதும் கடினமாக வேலை செய்துவிட்டு, என் குதிரையிலேறி வீடு திரும்பினேன். நான்அதிகமாய்க் களைத்துச் சோர்ந்திருப்தாக உணர்ந்தேன். அச்சமயத்தில், மின்னல் வேகத்தில்என் கிருபை உனக்கப் போதும் என்கிற திவ்ய வசனம் என் மனதில் தோன்றிற்று. நான் வீடுசென்று வேத புத்தகத்தில் அவ்வசனத்தை வாசித்தேன். என் கிருபை உனக்குப் போதும்என்றெழுதியிருப்பதை வாசித்தேன். அப்போது நான் ஆம், ஆண்டவரே அது சரிதான் என்றுநினைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பூரிப்படைந்து சிரித்தேன். ஆபிரகாமின்பரிசுத்தச் சிரிப்பு இன்னதென்று…

February

பெப்ரவரி 25

உங்கள் காலடிமிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசு.1:3) கிறிஸ்துவுக்காக ஆதாயம்செய்யப்படாத நாடுகளன்றி, உரிமையாக்கிக் கொள்ளப்படாத, தெய்வீக வாக்குத்தத்தங்களும்உண்டு. கர்த்தர் யோசுவாவுக்குக் கொடுத்த வாக்கு என்ன? உங்கள் காலடி மிதிக்கும்எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் என்பதே. அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டபூமியின் எல்லையை வரையறுக்கிறார். அவைகள் யாவும் ஒரு நிபந்தனையின்பேரில்அவர்களுடையதாகும். அதன் நீளத்தையும், அகலத்தையும் நடந்து கடக்க வேண்டும். அதன் அளவைஅவர்கள் பாதங்களால் அளக்க வேண்டும். அவர்கள் அந்தப் பூமியில்மூன்றில் ஒரு பாகம்தான் நடந்தார்கள். ஆகையால் அவர்களுக்கு அவ்வளவிற்குமேல்கிடைக்கவில்லை. அவர்கள் அளந்த…

February

பெப்ரவரி 24

யோவான் ஒருஅற்புதத்தையும் செய்யவில்லை. ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம்மெய்யாயிருக்கிறது (யோ.10:41). நீ உன்னைக் குறித்து வெகுஅதிருப்தியுடையவனாயிருக்கலாம். நீ ஒரு கவிஞன் அல்ல, உன்னதமானவர்களில் ஒருவனல்ல,யாதொரு பெரிய காரியமும் நீ செய்யாதிருக்கலாம். ஒன்றிலும் நீ சிறந்தவனல்ல,சாதாரணமானவனே. உன் வாழ்க்கை ஒரே தன்மையுடையதாய் ருசிகரமற்றதாய் இருக்கலாம். ஆகிலும்நீ உன்னத ஜீவியம் நடத்தலாம். யோவானும், ஓர் அற்புதமும்செய்யவில்லை. ஆனால் இயேசு அவனைக் குறித்து, ஸ்திரீகளிடம் பிறந்த மனிதரிலே இவனைவிடப்பெரிய மனிதன் இதுவரை தோன்றினதில்லை என்று சொன்னார். யோவானின் முக்கிய வேலைஒளியைக் குறித்துச்…

February

பெப்ரவரி 23

ஒரு முறை ஒரு சிங்கமும்…….வந்தது. (1.சாமு.17:34) வாலிபனான தாவீது கர்த்தரைநம்புவதைப்பற்றி நாம் அறியும்போது நமக்கு அது உற்சாகத்தையும், பெலனையும் கொடுக்கிறது.கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையினால், அவன் ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும், பின்புபலவானான கோலியாத்தையும் வென்றான். சிங்கம் மந்தையை அழிக்கவந்தபோது அது தாவீதிற்குஒரு சிறந்த தருணமாயிற்று. அத்தருணத்தில் அவன் பயந்தோ அல்லது தவறியோ போயிருந்தால்,இஸ்ரவேலின் அரசனாக அவன் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கமாட்டான். ஒருமுறை அங்கு சிங்கம்வந்தது. ஒரு சிங்கம் வருவதுதேவனிடத்திலிருந்து வரும் ஒரு விசேஷித்த ஆசீர்வாதம் என்று யாரும் எண்ணமாட்டார்கள்.…

February

பெப்ரவரி 22

நீ விசுவாசிக்கக் கூடுமானால்ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்.9:23). எங்களுடைய கூட்டங்கள்ஒன்றில் ஒரு வாலிபன் எழுந்து அவசியமான உதவி செய்யக் கர்த்தரை எப்படி எதிர்பார்க்கலாம்?என்று கேட்டான். அக்கேள்விக்கு வயதான ஒரு நீக்ரோ பெண் அளித்த பதில் அதிக விசேஷமானது.விசுவாசம் இன்னது என்பதை இதைவிட நன்றாய் விளக்கமுடியாது. அவள் எழுந்து அந்த மனிதனுக்குநேரே தன் விரலை நீட்டி அழுத்தம் திருத்தமாய், அவர் செய்துவிட்டார் என்று நம்பவேண்டும்.அப்போது அது செய்யப்படும் என்றாள். தேவனை நமக்காய் ஒரு காரியம் செய்யும்படிவேண்டிக்கொண்டபின் அதை…