ஏப்ரல் 22
ஏப்ரல் 22 நான் போகும் வழியை அவர் அறிவார் (யோபு 23:10). விசுவாசியே! இது எத்தனை மகிமையான நிச்சயம். நீ போகும் வழி கோணலாய், கஷ்டங்கள் நிறைந்ததாய் இருக்கலாம். அதை அவர் அறிவார். சோதனைகள், கண்ணீர் நிறைந்ததாயிருக்கலாம். சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டடிருக்கலாம். கர்த்தரே அதைச் சூடாக்கினார். நம்முடைய வழி மாராவின் தண்ணீரைப்போல் கசப்பாயிருந்தாலும், ஏலீம் போல சந்தோஷமும், உற்சாகமும் உள்ளதாயிருந்தாலும், அதை அறிந்து நமது காலடிகளை நடத்தும் சர்வ வழிகாட்டி ஒருவர் உண்டு. எகிப்தியருக்கு இருட்டாயிருந்த…