May

மே 10

மே 10

நானோ….விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போயிருப்பேன் (சங்.27:13).

சோர்ந்துபோகாதே

இந்த நிலையில் வரும்சோதனை எத்தனை பெரியது. அதில் ஆன்மா துவண்டு போகிறது. இதயம் நோய்வாய்ப்படுகிறது.நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களினாலும் இழப்புகளினாலும் ஏற்படும் போராட்டங்களினால்,நமது விசுவாசம் ஆடிப்போகிறது.

இனி நான் இதைத்தாங்கமாட்டேன். இச் சோதனையால் எனக்கு மயக்கமே ஏற்பட்டுவிடும். யாது செய்வேன்.சோர்ந்து போகாதே என்று ஆண்டவர் கூறுகிறார். ஆனால், சோர்ந்து மயக்கமாகும் நிலையில்உள்ளவன் என்னதான் செய்யமுடியும்?

உடல் நலம் குன்றி நீசோர்வு அடையும்பொழுது நீ செய்வதென்ன? உன்னால் யாதும் செய்யமுடியாது. உன் பணிகளைநிறுத்திவிடுகிறாய். உனது சோர்வு அடைந்த மயக்க நிலையில் நீ ஓய்வெடுக்கிறாய்.அமைதியாயிருந்து நம்பிக்கையோடிருக்கிறாய் அல்லவா?

துன்பங்கள்தொல்லைகளினால் நாம் ஆன்மச் சோர்வு அடையும்பொழுது அதேபோல்தான். அப்பொழுது ஆண்டவர்நமக்குத் தரும் செய்தி, நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், என்பதல்ல. ஏனெனில்,அவர் நமது தைரியமும் பெலனும் ஒழிந்து விட்டதென அறிவார். அவர் கூறும் சொற்கள், நீங்கள்அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள் என்பதே.

பிரபல அருட்பணியாளரானகட்சன் டெய்லர் தன் ஆயுளின் இறுதி நாட்களில் மிகவும் பெலவீனமான நிலையில் இருந்தார்.அப்பொழுது தமது அருமை நண்பருக்கு அவர் எழுதிய செய்தி, எழுதக்கூட இலயாதபடி நான் பெலக்குறைவுஅடைந்திருக்கிறேன். என் வேதாமகத்தை வாசிக்கக்கூட எனக்குப் பெலனில்லை. ஜெபிக்கக்கூடஎன்னால் இயலவில்லை. நான் செய்யக்கூடியதெல்லாம் என்னால் இயலவில்லை. நான்செய்யக்கூடியதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப்போல என் அண்டவருடைய கரங்களில் விழுந்துஅமர்ந்திருப்பதே என்பது.

இந்த அற்புதமானதேவமனிதனும்கூட, மிகுந்த ஆன்மீக வலிமையுள்ளவராயிருந்தபோதிலும், தனது உடல்நலக்குறைவினால், அமரிக்கையுடன் நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆண்டவர் தம்அருமைப்பிள்ளையாகிய உன்னிடம் வேண்டுவதெல்லாம், நீ உனது துன்பதொல்லைகளில்அவதிப்பட்டுச் சோர்ந்து போகையில் அவர்மேல் சாய்ந்து நம்பிக்கையுடன் இருப்பதையே. பெலன்நிறைந்தவனாக இருக்க முயற்சியாதே. நீ அமர்ந்திருந்து அவரே ஆண்டவர் என்று அறிந்து கொள்.அவர் உன்னைத் தூக்கித் தாங்கி முற்றும் உன்னை நடத்துவார்.

நாம் மிகவும் சோர்ந்துபோகும் நேரங்களில், நமக்குத் தந்திடவே ஆண்டவர் தமது தலை சிறந்த ஊக்கந்தரும்உணவுவகைகளை வைத்திருக்கிறார். உன் இருதயத்தில் பலங்கொண்டு தைரியமாயிரு (சங்.27:14).

கடந்தநாள்களிலெல்லாம் உன்னைக்

கர்த்தர்கைவிட்டதில்லை – திடனுடனிரு.

இன்றுமுன் இருக்கத்தில்அவர் உன்னை

என்றும் விட்டிடுவாரோ?இல்லையே!

தம் செட்டையின்மறைவில் அவர்

தப்பிடாமலுன்னைக்காத்திடுவார்,

அங்கு அவர்பாதுகாப்பிலமைதியாய்

பங்கமேதுமின்றிப்பாடிடுவாய்.