July

யூலை 10

யூலை 10

…. அவரைக் கூப்பிட்டேன்,அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை (உன்.5:6).

ஆண்டவர் நமக்கு சிறந்தஆழமான விசுவாசத்தைத் தரும்பொழுது, அதை நீண்ட தாமதங்களால் சோதித்தறிகிறார். வெண்கலவானத்தினின்று எதிரொலியாய் அவருடைய ஊழியக்காரரின் குரல்கள் அவர்கள் செவிகளில் வந்துவிழச்செய்கிறார். பொற் கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள். கீல்கள்துருப்பிடித்துவிட்டதுபோல் அவை அசையாதிருக்கின்றன. ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிஉம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர் என்று கதறுகிறார்கள். தூயவர்களாகிய மக்கள் பதிலின்றிநெடுங்காலம் பொறுமையாகத் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். இது அவர்களது ஜெபங்கள்உணர்ச்சி ஆற்றலற்றவையாயிருப்பதனாலல்ல. அல்லது அவைகள் கேட்கப்படாததாலல்ல.அரசாணையுள்ள ஆண்டவர் தமது விருப்பப்படியே தருகிறதினால்த்தான் அவர்கள் காத்திருக்கநேருகிறது. நம்முடைய பொறுமையைச் சோதிக்க சித்தங் கொண்டவர் தம் பிள்ளைகளிடம்அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாதோ?

எந்த ஜெபமும் கேட்கப்படாமல்போவதில்லை. ஜெபமுயற்சி என்றும் வீணாவதில்லை. ஆண்டவரால் பதில் தரப்படாத ஜெபம்என்றோ, அவரால் கவனிக்கப்படாத ஜெபம் என்றோ, ஒன்றுமில்லை, மறுப்புகள் என்று நாம்கருதும் ஜெபங்கள் தாமதமாகும் ஜெபங்களே.

நமது ஜெபங்களைஉயிருள்ளவைகளாக்குவதற்கெனவும், நமது விசுவாசத்தின் ஆழத்தைத் தெரிந்துகொள்ளவும்கிறிஸ்து நாதர் சில சமயங்களில் நமது ஜெபங்களுக்கான பதிலைத் தாமதப்படுத்துகிறார். நமதுபடகில் அலைகள் வந்து மோதுகின்றன. ஆனால் அவரோ தூங்கிக்கொண்டிருக்கிறார். அவர்விழித்திடுவார். படகு மூழ்கடிக்கப்படமாட்டாது. அவர் தூங்குகிறார். ஆனால் அளவுக்குமிஞ்சியல்ல, தாமதித்தல் அவரிடம் உண்டு. ஆனால் ஒரேயடியாயல்ல.

துக்கிக்கும் ஆன்மாவே, அமர்ந்திரு,

துக்கத்தில் நீ கதறியழ வேண்டாம்.

உன்உள்ளக் கிடக்கையை ஆண்டவரின்

உலகமாளுமாண்டவருக்குப் புலப்படுத்த

காத்திரு உன் இருண்ட மனமடிவிலும்,

காத்திரு உன் பெரும் ஏமாற்றத்திலும்

கர்த்தர் வந்திடுவார், ஒளி தருவார்.

கர்த்தர் நிரப்புவார் பெருவாழ்வாலுன்னை