September

பொருத்தனை

September 8

“When thou vowest a vow unto God, defer not to pay it; for he hath no pleasure in fools: pay that which thou hast vowed.” (Eccl. 5:4)

We have all heard of the man who, when he finds himself in a tight spot, makes a vow to God. He promises that if God delivers him, he will trust, love and serve Him forever. But when he escapes from the crisis, he forgets all about the vow and goes on living the same old life.

What place do vows have in the life of a Christian, and what guidelines are given in the Word on this subject?

First of all, it is not necessary to make vows. They are not commanded, but are generally voluntary promises made to the Lord in gratitude for His favors. Thus we read in Deuteronomy 23:22 NIV: “But if you refrain from making a vow, you will not be guilty.”

Second, we should be careful not to make rash vows, that is, vows that we won’t be able to fulfill or that we might later regret. Solomon warns us, “Be not rash with thy mouth, and let not thine heart be hasty to utter any thing before God: for God is in heaven, and thou upon earth: therefore let thy words be few” (Eccl. 5:2).

But if we do make a vow, we must be careful to keep it. “If a man vow a vow unto the Lord, or swear an oath to bind his soul with a bond; he shall not break his word, he shall do according to all that proceedeth out of his mouth” (Num. 30:2). “When you make a vow to the Lord your God, you shall not delay to pay it; for the Lord your God will surely require it of you, and it would be sin to you.” (Deut. 23:21 NKJV).

It is better not to vow than to vow and not pay. “Better it is that thou shouldest not vow, than that thou shouldest vow and not pay” (Eccl. 5:5).

There may be exceptional cases where it would be better to break a vow than to continue in it. Before his conversion, a man may have taken vows in a false religion or in a secret fraternal order. If it would be contrary to God’s Word to fulfill those vows, then he must obey the Scriptures, even at the cost of breaking the vows. If they were simply vows not to divulge certain secrets, then he could remain silent concerning them the rest of his life, even after severing his ties with the order.

Perhaps the vow that is most commonly broken today is the marriage vow. Solemn promises made in the presence of God are treated as of no great importance. But God’s verdict stands: “The Lord your God will surely require it of you and you will be guilty of sin” (Deut. 23:21 NIV).

செப்டெம்பர் 8

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே. அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை. நீ நேர்ந்துகொண்டதைச் செய். பிரசங்கி 5:4.

பொருத்தனை

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சிக்குண்ட வேளையில் தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்ட மனிதனைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த இக்கட்டிலிருந்து தன்னை தேவன் விடுவிப்பாராயின், அவரை நம்புவதாகவும், அவரிடத்தில் அன்பு செலுத்தி அவருக்கு எப்பொழுதும் சேவைபுரிவதாகவும், வாக்களிக்கின்றான். அந்த இக்கட்டிலிருந்து அவன் தப்பித்த பிறகு, அவன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுகிறான். முந்தின வாழ்க்கையை மீண்டும் தொடருகிறான்.

கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் பொருத்தனைகளுக்குத் தரவேண்டிய இடம் என்ன? இப்பொருளைக் குறித்து வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற வழி காட்டும் நெறிமுறைகள் யாவை?

முதலாவது, கிறிஸ்தவர்கள் பொருத்தனை செய்ய வேண்டிய தேவையில்லை. அவர்களுக்கு அவ்வகையான கட்டளை கொடுக்கப்படவில்லை. கர்த்தரிடத்திலிருந்து நன்மையைப் பெற்ற நன்றியுணர்வோடு சிலர் பொருத்தனைகள் பண்ணுகிறார்கள். உபாகமத்தில், ‘நீ பொருத்தனை பண்ணாதிருந்தால் உன்மேல் பாவம் இல்லை” என்று நாம் படிக்கிறோம். (23:22).

இரண்டாவதாக, முன்யோசனையன்றி பொருத்னை செய்யக்கூடாது. இதில் நாம் கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். நாம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும், பின்னர் நாம் வருத்தப்பட வேண்டியதாகும். ஆகவே முன்யோசனையின்றிப் பொருத்னை செய்யக் கூடாது. ‘தேவ சமூகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார். நீ பூமியியிருக்கிறாய். ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக” என்று சாலோமோன் நம்மை எச்சரிக்கிறான்.

ஆனால் நாம் பொருத்தனை பண்ணினால், அதைச் செய்து முடிக்க கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம். ‘ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆனையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்” (எண்.30:2). ‘நீ என் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ் செய்யாதே, உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார். அது உனக்குப் பாவமாயிருக்கும்” (உபா.23:21).
பொருத்தனை செய்து, அதைச் செலுத்தாமல் இருப்பதைக்காட்டிலும், பொருத்தனை செய்யாமலிருப்பதே மேலாகும். ‘நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்” (பிர.5:5).

இதற்கு விதிவிலக்கு உண்டு. பொருத்தனையை நிறைவேற்றுவதில் தொடர்வதைக் காட்டிலும் அதை மீறுவது அவ்வேளைகளில் சிறந்ததாயிருக்கும். மன மாற்றத்திற்கு முன் தவறான மதக்கொள்கையின் அடிப்படையிலோ தான் சார்ந்;திருந்த நிறுவனங்களின் இரகசிய கட்டளையின்படியோ ஒருவன் ஒரு பொருத்தனை செய்திருக்கலாம். அந்தப் பொருத்தனைகளை நிறைவேற்றுவது திருமறை எழுத்துகளுக்கு எதிரானவையாக இருப்பின், பொருத்தனையை மீறி திருமறைக்குக் கீழ்படிவதே மேல். சில இரகசியங்களைச் சொல்லக்கூடாது என்று ஒருவேளை பொருத்தனை செய்திருந்தால், தனது எஞ்சிய வாழ்நாட்கள் முழுவதிலும் அமைதியைக் காத்துக்கொள்ளலாம.; ஆனால் அந்த நிறுவனத்தோடு கூடிய எல்லாத் தொடர்புகளையும் விட்டொளிக்க வேண்டும்.

இன்றைய நாட்களில் திருமணநாளில் செய்யும் ஆணையை பொதுவாகப் பலர் மீறுகின்றனர். தெய்வ பயத்தோடு தேவனுடைய சமூகத்தில் சொன்ன வாக்குறுதிக்கு முக்கியத்துவம் தராமல் விட்டுவிடுகின்றனர். ஆயின் தேவனுடைய தீர்ப்பு நிலைநிற்கும், ‘உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்., அது உனக்குப் பாவமாகும்” (உபா.23:21).

8. September

»Wenn du Gott ein Gelübde ablegst, zögere nicht, es zu erfüllen! Denn er hat kein Gefallen an den Toren. Was du gelobst, erfülle!« Prediger 5,3

Wir haben alle schon von Menschen gehört, die Gott dann hoch und heilig etwas versprechen, wenn sie in der Klemme sitzen. Dann geloben sie, dass sie Gott für immer vertrauen wollen, Ihn lieben und Ihm dienen werden, wenn Er sie nur aus dieser schlimmen Lage befreit. Aber wenn sie durch die Krise hindurch sind, vergessen sie ihr Versprechen und führen weiter ihr gewohntes Leben.

Welchen Platz nehmen Gelübde im Leben eines Christen ein, und welche Richtlinien gibt es dafür im Wort Gottes?

Zuerst einmal ist es gar nicht notwendig, feierliche Versprechen abzugeben. Das ist gar nicht erforderlich; es sind im Allgemeinen freiwillige Gelübde, die man dem Herrn gegenüber ausspricht aus Dankbarkeit für Seine Güte. So lesen wir beispielsweise in 5. Mose 23,23: »Wenn du es aber unterlässt, etwas zu geloben, wird keine Sünde an dir sein.«

Zweitens sollten wir uns hüten, vorschnelle Versprechen zu geben, das heißt Versprechen, die wir gar nicht halten können oder die uns später vielleicht Leid tun. Salomo warnt uns hier: »Sei nicht vorschnell mit deinem Mund, und dein Herz eile nicht, ein Wort vor Gott hervorzubringen! Denn Gott ist im Himmel, und du bist auf der Erde, darum seien deine Worte wenige« (Prediger 5,1).

Aber wenn wir ein Gelübde ablegen, müssen wir es auch sorgfältig erfüllen. »Wenn ein Mann dem Herrn ein Gelübde ablegt oder einen Eid schwört, ein Enthaltungsgelübde auf seine Seele zu nehmen, dann soll er sein Wort nicht brechen: nach allem, was aus seinem Mund hervorgegangen ist, soll er tun« (4. Mose 30,3). »Wenn du für den Herrn, deinen Gott, ein Gelübde ablegst, sollst du nicht zögern, es zu erfüllen. Denn der Herr, dein Gott, wird es unbedingt von dir fordern, und Sünde würde an dir sein« (5. Mose 23,22).

Es ist besser, gar nichts zu versprechen, als etwas zu versprechen und dann nicht zu halten: »Besser, dass du nicht gelobst, als dass du gelobst und nicht erfüllst« (Prediger 5,4).

Es kann aber auch Ausnahmefälle geben, in denen es besser ist, ein Gelübde zu brechen, als es noch weiter zu halten. Ein Mann kann beispielsweise vor seiner Bekehrung feierliche Versprechen in irgendeiner falschen Religion abgelegt haben oder in einem geheimen Bruderorden. Wenn es gegen Gottes Wort wäre, diese Gelübde zu erfüllen, dann muss er der Schrift gehorchen, selbst wenn er damit seine Schwüre bricht. Wenn es aber einfach das Versprechen ist, bestimmte Geheimnisse nicht auszuplaudern, dann kann er für den Rest seines Lebens darüber schweigen, auch nachdem er alle Verbindungen zu einem solchen Orden abgebrochen hat.

Heute ist wahrscheinlich das Gelübde, das am meisten gebrochen wird, das Eheversprechen. Feierliche Schwüre, die man in der Gegenwart Gottes abgelegt hat, werden so behandelt, als wären sie bedeutungslos. Aber Gottes Urteilsspruch darüber bleibt bestehen: »Denn der Herr, dein Gott, wird es unbedingt von dir fordern, und Sünde würde an dir sein« (5. Mose 23,22).