October

ஞானமுள்ள பெற்றோர்

October 31

“A wise son maketh a glad father: but a foolish son is the heaviness of his mother.” (Prov. 10:1)

What determines whether a son turns out to be wise or foolish? What are the factors that determine whether he becomes a John or a Judas?

Parental training is certainly one important consideration. This includes a thorough grounding in the sacred Scriptures. The sanctifying influence of the Word cannot be overemphasized.

It includes a home that is fortified by prayer. The mother of an outstanding evangelical preacher attributed his preservation from moral and doctrinal evil to the fact that she “wore out her knees in prayer for him.”

It means the use of firm discipline so that the .child learns to obey and to submit to authority. We hear loud outcries today against strict discipline, but more lives have been wrecked by indulgence than by the use of the rod (Prov. 13:24; 23:13, 14).

It means providing the child with the security of knowing he is loved. Discipline must be administered as an act of love and not of temper.

It means that the parents must provide a living example of what they profess. Hypocrisy in religion has proved a stumbling block to many children of Christian parents.

But then the child’s will is also involved. When he leaves home, he is free to make his own decisions. Often children brought up in the same home under the same conditions turn out differently.

Two facts of life have to be faced. One is that most people have to get a taste of the world for themselves. The other is that most people prefer to learn through shame and disgrace rather than through wise counsel.

Wise parents do not pressure their children into making a profession of faith. If children want to come to the Lord, they should be encouraged. But if they are talked into a false profession, then abandon that profession in later years, they are harder to win for Christ.

If Christian parents have done their best to raise a child in the fear and admonition of the Lord, only to have the child later make shipwreck, what then? For one thing they should remember that the last chapter hasn’t been written. No case is too difficult for the Lord. By continuing earnestly in prayer and by keeping channels of communication open many have lived to see their prodigal return. In other cases, the prayers of parents have been answered after they themselves have gone home to be with the Lord.

ஒக்டோபர் 31
ஞானமுள்ள மகன் தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான். மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். நீதிமொழிகள் 10:1
ஞானமுள்ள பெற்றோர்
ஞானமுள்ளவன் அல்லது மூடன் என்பதை எது நிர்ணயிக்கின்றது? ஒரு மகன் யோவானாக மாறப்போகிறானா, யூதாசாக மாறப்போகிறானா என்பதை வகையறுக்கும் கூறுகள் எவை?
நிச்சயமாக, பெற்றோர்கள் தருகின்ற பயிற்சி இன்றியமையாதது, அது மிகுந்த கவனத்திற்குரியது. புனித வேதத்தில் அவர்களை ஊன்றக் கட்டுவது அதனுள் அடங்கும். ஒருவனைப் பரிசுத்தவானாக மாற்றும் திருமறையின் தாகத்தை நாம் வலியுறுத்திச் சொல்லவேண்டிய அவசியமில்லை.
ஜெபம் என்னும் கோட்டையினால் வலுப்படுத்தப்பட்ட இல்லம் இதனுள் அடங்கும். புகழ்வாய்ந்த நற்செய்திப் பணியாளர் ஒருவர், தான் நன்னெறி ஒழுக்கத்திலும், திருமறைக் கோட்பாடுகளிலும், தவறாது காக்கப்படுவதற்குத் தனது தாயின் ஜெபமே காரணம் என்று உரைத்துள்ளார். ‘எனக்காக என் தாயின் முழங்கால்கள் களைத்துப்போயின.”
குழந்தையானது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து தன்னை சமர்ப்பிப்பது அப்பயிற்சியின் ஒரு கூறாகும். கண்டிப்பான ஒழுக்கத்தில் நடத்துவது என்பது இதன் பொருளாகும். கண்டிப்பான ஒழுக்கப் பயிற்சிக்கு எதிரான இன்றைய நாட்களில் பெருங்கூக்குரல் தொனிக்கிறது. பிரம்பை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய விருப்பப்படி செல்லவிடுவதினால் பலரது வாழ்க்கைகள் சீர்குலைந்து போயிருக்கின்றன (நீதி.13:24, 23:13-14).
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்புபாராட்டுகிறார்கள் என்னும் அறிவு, அந்தப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. கோபத்தின் மிகுதியால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், அன்பின் மிகுதியால் அதைச் செலுத்த வேண்டும்.
தாங்கள் அறிக்கை செய்கிறதற்கு ஏற்றபடி பெற்றோர்கள் மாதிரிகளாக வாழ வேண்டும் என்பதும் இதன் பொருளாகும். கிறிஸ்தவப் பெற்றோர்களின் மாய்மாலம், பல பிள்ளைகளுக்குப் பெரும் தடையாக மாறியிருக்கிறது.
என்றாலும், பிள்ளைகளின் சித்தமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. வீட்டை விட்டு அவன் வெளியில் செல்லுகிறபோது, அவனே தீர்மானங்களை எடுக்கிறான். ஒரே வீட்டில் ஒரேவிதச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், வெவ்வேறு குணங்களுடையவர்களாக மாறிப் போவதை அவ்வப்போது நாம் காண்கிறோம்.
வாழ்க்கையின் இரண்டு உண்மைகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும். முதலாவது, உலகினைப் பலர் தாங்களாகவே ருசித்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். தொடர்ந்து அதை அவர்கள் அவமானத்தினாலும், இழிவினாலும் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். ஞானமுள்ள ஆலோசனையினால் அதைப்பெற இத்தகையோர் விரும்புவதில்லை.
ஞானமுள்ள பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளை விசுவாச அறிக்கை செய்யும்படி கட்டாயப்படுத்தமாட்டார்கள். கர்த்தரிடத்தில் பிள்ளைகள் வரவிரும்பினால், அவர்கள் ஞானமுள்ள பெற்றோர்கள் உற்சாகப்படுத்துவார்கள். விசுவாச அறிக்கை செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிற பிள்ளைகள் பிற்காலத்தில் தங்களுடைய விசுவாசத்தை விட்டொழிப்பர். பின்னர் அவர்களைக் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்வது கடினம்.
தங்களால் இயன்றமட்டும் சிறந்த முறையில், கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்திலும், போதகத்திலும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் வளர்த்த பின்னரும், அவர்கள் பின்னர் விசுவாசக் கப்பலை உடைத்துப் போட்டவர்களாகக் காணப்படுவார்களானால் என்னவென்று கூறுவது? ஒன்றை அவர்கள் நினைவுகூர வேண்டும். இறுதி அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லை. எந்த ஒரு செயலும் கர்த்தருக்குக் கடினமல்ல. தொடர்ந்து ஊக்கமாக மன்றாடி, பிள்ளைகளோடு தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள் எனில், தங்களுடைய கெட்டகுமாரர்கள் மனந்திரும்பி மீண்டும் வருவதைக் காண்பார்கள். இன்னும் பல சூழ்நிலைகளில், பெற்றோர்கள் தங்களுடைய விண்ணுலக வீட்டினைச் சென்றடைந்த பின்னர், அவர்கள் முன்னர் செய்த ஜெபத்தின் விளைவாகப் பிள்ளைகள் மனம் மாற்றம் அடைவதைக் காண்கிறோம்.

31. Oktober

»Ein weiser Sohn erfreut den Vater, aber ein törichter Sohn ist der Kummer seiner Mutter.« Sprüche 10,1

Wodurch wird es eigentlich bestimmt, ob ein Sohn sich als weise oder als töricht erweist? Welche Faktoren beeinflussen es, ob er ein Johannes oder ein Judas wird?

Die Erziehung durch die Eltern ist sicherlich ein wichtiger Gesichtspunkt. Dazu gehört auch eine gründliche Ausbildung in der Heiligen Schrift. Der heiligende Einfluss des Gotteswortes kann gar nicht genug betont werden.

Dazu gehört auch ein Elternhaus, das durch das Gebet gestärkt wird. Die Mutter eines berühmten evangelikalen Predigers sah einen Grund für dessen Bewahrung vor
allem moralisch und lehrmäßig Bösen darin, dass sie »sich die Knie wund gerieben hatte« im Gebet für ihren Sohn.

Das bedeutet auch den Einsatz strenger Disziplin, so dass das Kind rechtzeitig lernt, zu gehorchen und sich einer Autorität unterzuordnen. Wir hören heute zwar laute Aufschreie gegen strenge Strafen, aber durch allzu große Nachsichtigkeit sind schon mehr Leute in ihrem Leben gestrandet als durch den Gebrauch der Rute (siehe dazu Sprüche 13,24; 23,13.14).

Doch es ist auch nötig, dem Kind die Sicherheit zu geben, dass es geliebt wird. Selbst die Strafe muss als ein Handeln aus Liebe erfolgen, nicht als Ausbruch blanken Zorns.

Weiter gehört zu einer guten Erziehung, dass die Eltern ein lebendiges Beispiel für das sein müssen, was sie bekennen. Heuchelei in religiösen Dingen hat sich schon oft als ein Stolperstein für Kinder christlicher Eltern erwiesen. Aber außerdem spielt auch der Wille des Kindes eine Rolle. Wenn es das Elternhaus verlässt, ist es frei und kann seine eigenen Entscheidungen treffen.
Und oft entwickeln sich Kinder, die in derselben Familie unter den gleichen Bedingungen großgeworden sind, ganz unterschiedlich.

Zwei Tatsachen im Leben muss man außerdem berücksichtigen. Einmal ist es die, dass die meisten Menschen erst einmal selbst eine Kostprobe von der Welt nehmen wollen. Die andere zeigt uns, dass die meisten Menschen es vorziehen, durch eigene Erfahrungen zu lernen, sei es auch in Schimpf und Schande, anstatt durch die klugen Ratschläge eines anderen.

Kluge Eltern drängen ihre Kinder nicht dazu, ein Bekenntnis zu Christus abzulegen. Wenn Kinder gerne zum Herrn kommen wollen, dann sollte man sie dazu ermutigen. Aber wenn man ihnen so lange zuredet, bis sie schließlich ein unaufrichtiges Bekenntnis ablegen, und sie sich in späteren Jahren davon wieder abkehren, sind sie viel schwerer für Jesus Christus zu gewinnen.

Aber was ist, wenn christliche Eltern ihr Bestes getan haben, um ihr Kind in der Furcht zum Herrn aufzuziehen, und dann doch erleben müssen, dass es später Schiffbruch erleidet? Zunächst einmal sollten sie sich immer daran erinnern, dass das letzte Kapitel noch nicht geschrieben ist. Kein Fall ist dem Herrn zu schwierig. Viele haben weiter ernsthaft gebetet und alle Wege des Gesprächs offen gehalten und schließlich doch noch erlebt, dass ihr verlorener Sohn nach Hause zurückgekehrt ist. In anderen Fällen sind die Gebete von Eltern auch erst erhört worden, nachdem sie selbst schon heimgegangen waren, um beim Herrn zu sein.