October

மாற்றத்திற்கு இடம் கொடுத்தல்

October 7

“Brethren, I count not myself to have apprehended.” (Phil. 3:13)

The Apostle Paul did not think that he had arrived, and neither should we. We are all in need of change. Liu Shao-chi said, “Men should regard themselves as being in need of and capable of being changed. They should not look upon themselves as something unchanging, perfect, holy, and beyond reform… Otherwise men cannot make progress.”

The trouble is that most of us resist change in ourselves. We are desperately anxious to see others change. Their personality quirks annoy us and we wish they would reform. But we are either oblivious to our own idiosyncrasies or satisfied to perpetuate them. We want to remove the splinter from someone else’s eye but rather admire the pole in our own. Their faults and failures are hideous whereas ours are darling.

The problem lies in our own will. We can change if we really want to. If we face up to the fact that we have some undesirable traits in our character, we have made a start toward becoming better persons.

But how can we know what changes are needed? One way is for us to let the Word of God act as a mirror. As we read and study it, we see what we should be, and how far we fall short of the standard. When the Bible condemns something of which we are guilty, we should face the fact bravely and determine to do something about it.

Another way to learn ways in which we are unChristlike is to listen carefully to our relatives and friends. Sometimes their suggestions come in a velvet glove; sometimes they come like a sledgehammer. Whether the remarks are veiled or blatant, we should get the message and accept it gratefully.

In fact, it is a very good practice to cultivate the loving criticism of friends. For instance, we could say, “I hope you will feel free to let me know of any undesirable traits in my personality or any ways I have that prove irritating to others.” A real friend will do just that.

It is sad to think of people who go through life, making pests of themselves in the church, in the home, and in society, just because no one was willing to level with them or they were not willing to change.

If we take the time and trouble to find out the areas where we rub people the wrong way, and if we then take positive steps to eliminate these areas, we will be better people to live with.

ஒக்டோபர் 7

சகோதரரே அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. பிலிப்பியர் 3:13

மாற்றத்திற்கு இடம் கொடுத்தல்

தான் அடைந்துவிட்டதாக அப்போஸ்தலனாகிய பவுல் எண்ணவில்லை. நாமும் அடையவில்லை என்றே எண்ணவேண்டும். நம் அனைவருக்கும் மாற்றம் தேவையாக இருக்கிறது. ‘தங்களுக்கு மாற்றம் தேவை என்றும், தாங்கள் மாறக்கூடியவர்கள் என்றும் மனிதர்கள் தங்களைக் குறித்து அறிந்து கொள்ளவேண்டும். மனிதர்கள் தங்களைக் குறித்து மாற்றம் அடையக்கூடாதவர்கள், நிறைவானவர்கள், தூய்மையானவர்கள், சீர்திருத்தம் அடையத் தேவையற்றவர்கள், என்று எண்ணலாகாது…. அவ்வாறு எண்ணுவோமாகில் முன்னேற்றம் அடைய முடியாது” என்று லியூ சாவோ சி என்பார் கூறியுள்ளார்.

நமக்குள்ளாக மாற்றம் ஏற்படுவதை, நம்மில் பலர் எதிர்த்து நிற்கிறோம் என்பதே பிரச்சனை. மற்றவர்கள் மாற்றம் அடைய வேண்டும் என்று நாம் ஆர்வத்தோடு தவிக்கிறோம். ஆனால், நம்முடைய சுயபோக்கைக் குறித்து அசட்டையாயிருக்கிறோம். அல்லது அதே நிலையில் தொடர்ந்து செல்வதில் மனநிறைவு அடைகிறோம். பிறருடைய கண்களில் உள்ள துரும்பை அகற்ற நாம் விரும்புகிறோம். ஆனாலும் நமது கண்ணில் இருக்கிற துரும்பை அகற்ற விரும்புவதில்லை. அவர்களுடைய தவறுகளும், தோல்விகளும், அருவருப்பாகத் தோன்றுகின்றன. ஆனால் நம்முடைய தவறுகளும் தோல்விகளும் நமக்கு இன்பமளிக்கிறன.

நமது சொந்த சித்தமே இதற்குக் காரணமாக இருக்கிறது. உண்மையாகவே நாம் மாற்றம் அடைய விரும்பினால் நம்மால் மாற இயலும். நமது நடத்தையில் விரும்பத்தகாத பண்புகள் சில இருக்கின்றன என்னும் உண்மையை எதிர் கொள்ள ஆயத்தப்படுவோமாயின், இன்னும் சிறந்த மனிதர்களாக மாற விரும்புகிறோம் என்பது பொருளாகும்.

ஆயின், என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதை அறிவது எப்படி? தேவனுடைய வார்த்தையானது ஒரு கண்ணாடியாகச் செயல்படுவதற்கு நாம் இடங்கொடுக்க வேண்டும். இது ஒரு வழியாகும். நாம் அதனைப் படித்து, ஆராய்ந்து பார்க்கிற வேளையில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அதில் காண்கிறோம். நம்முடைய தகுதியில் எவ்வளவாகக் குறைவுடையவராக இருக்கிறோம் என்பதையும் அறிகிறோம். சிலவற்றில் நாம் குற்றமுடையவர்கள் என்று வேதம் குற்றம் சுமத்துகிறபோது, அவ்வுண்மையை நாம் துணிவுடன் எதிர்கொண்டு அதைக் குறித்து செயல்பட சில முடிவுகளை எடுக்கவேண்டும்.

நாம் என்னென்ன நிலைகளில் கிறிஸ்துவின் சாயலற்றவர்களாக இருக்கிறோம் என்பதை நமது நண்பர்களும் உறவினர்களும் கூறுவதைக் கவனத்துடன் கேட்பது மற்றுமொரு வழியாகும். சிலவேளைகளில் அவர்களுடைய ஆலோசனை அழகிய மிருதுவான உறையில் இடப்பட்டுத் தரப்படும். இன்னும் சில வேளைகளில் அது சம்மட்டியைப் போல நம்மை நோக்கி வரும். ஆகவே, நம்மைப் பற்றிய குறைகள் மூடி மறைக்கப்பட்டோ வெளிப்படையாகவோ எவ்வாறு வந்தாலும் அவற்றை நாம் நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையில், நண்பர்கள் அன்புடன் குறைகளைக் கூறுதல் மிகச்சிறந்த பழக்கமாகும். அதனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘விரும்பத்தகாத பண்புகள் என்னிடத்தில் இருக்குமென்றாலும், அதை நீங்கள் சொல்லத்தயங்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று நம் நண்பர்களிடம் கூற வேண்டும். உண்மையான நண்பன் அதனை அவ்வாறே கூறுவான்.

சபையிலும், இல்லத்திலும், சமுதாயத்திலும், தொல்லை தருபவர்களாகச் சிலர் விளங்குவது வருத்தத்திற்குரியதாகும். பிறர் தகுதியானவர் என்று அவர்கள் கருதுவதில்லை. தாங்கள் மாற்றம் அடையவேண்டியவர்களே என்பதையும் அவர்கள் விரும்புவதில்லை.

மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் என்னென்ன செய்கிறோம் என்பதை அறிந்து, அவற்றை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போமென்றால், மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்குச் சிறந்த மனிதர்களாக நாம் விளங்குவோம்.

7. Oktober

»Brüder, ich denke von mir selbst nicht, es ergriffen zu haben.« Philipper 3,13

Der Apostel Paulus war nicht der Meinung, dass er schon am Ziel angekommen wäre, und das sollten wir von uns auch nicht meinen. Wir alle haben es nötig, an uns zu arbeiten. Liu Shao-chi hat gesagt: »Die Menschen sollten sich immer als Wesen betrachten, die es nötig haben, verändert zu werden, und die auch anders werden können. Sie sollten sich nicht für unveränderlich, vollkommen, heilig und unverbesserlich halten … Sonst können sie keinerlei Fortschritte machen.«

Das Schwierige daran ist nur, dass wir uns meistens gegen Veränderungen in uns selbst energisch sträuben. Wir sind stets darum bemüht, dass sich die anderen ändern. Ihre persönlichen Eigenheiten ärgern uns, und wir wünschen, dass sie sich doch endlich ändern. Aber dabei vergessen wir, dass wir auch selbst unangenehme Eigenarten haben, sind vielleicht sogar stolz auf sie. Wir wollen jemand anderem den Splitter aus dem Auge ziehen und bewundern gleichzeitig den Balken in unserem eigenen Auge. Die Fehler und Schwächen anderer finden wir scheußlich, unsere eigenen dagegen geradezu liebenswert.

Das eigentliche Problem liegt in unserem Willen begründet. Wir können uns wohl verändern, wenn wir es nur wollen. Wenn wir uns der Tatsache stellen, dass wir einige unliebsame Charakterzüge haben, dann haben wir schon einen Anfang gemacht auf dem Weg, ein besserer Mensch zu werden.

Aber wie erfahren wir überhaupt, welche Veränderungen bei uns notwendig sind? Ein Weg besteht darin, dass wir uns durch das Wort Gottes einen Spiegel vorhalten lassen. Wenn wir es lesen und darüber nachdenken, sehen wir, wie wir eigentlich sein sollten und wie weit wir von diesem Maßstab noch entfernt sind. Wenn die Bibel ein Verhalten verurteilt, dessen wir uns schuldig gemacht haben, dann sollten wir dieser Tatsache mutig ins Auge sehen und uns entschließen, etwas dagegen zu unternehmen.

Ein anderer Weg, auf dem wir erfahren, in welcher Weise wir uns nicht so verhalten, wie Christus es gerne hätte, ist der, aufmerksam auf das zu hören, was unsere Verwandten und Freunde uns sagen. Manchmal geben sie uns nur sehr versteckte Hinweise sozusagen durch die Blume; manchmal sagen sie es uns auch sehr direkt auf den Kopf zu, und zwar mit der Wucht eines Schmiedehammers. Ob ihre Beobachtungen nun verschleiert oder überdeutlich geäußert werden, wir sollten jedenfalls auf den Inhalt achten und ihn dankbar zu Herzen nehmen.

Es ist tatsächlich eine sehr gute Praxis, liebende, positive Kritik an Freunden zu äußern, und ein wahrer Freund wird sowohl die Kritik annehmen wie auch umgekehrt durch Korrektur helfen.

Es ist traurig, wenn man daran denkt, dass es Leute gibt, die ihr ganzes Leben lang eine Plage für andere sind, in der Gemeinde, zu Hause und in der Gesellschaft allgemein, nur weil sich niemand bemüht hat, ihnen das in Liebe zu sagen, oder aber, weil sie nie bereit waren, sich zu ändern.

Wenn wir uns die Zeit nehmen und die Mühe nicht scheuen, die Bereiche herauszufinden, wo wir bei anderen anecken, und wenn wir dann positive Schritte unternehmen, um ein solches Verhalten zu vermeiden, dann werden wir bestimmt zu Menschen, mit denen es sich besser leben lässt.