October

பற்றிக் கொள்ள வேண்டிய வாக்குறுதிகள்

October 5

“Every place that the sole of your foot shall tread upon, that have I given unto you, as I said unto Moses.” (Joshua 1:3)

God had given the land of Canaan to the people of Israel. It was theirs by divine promise. But they still had to make it their own. They had to occupy it. The rule of possession was, “Every place that the sole of your foot shall tread upon, that have I given unto you.”

God has given us many great and precious promises. The Bible is full of them. But we must appropriate them by faith. Only then are they really ours.

Take, for instance, the promises concerning salvation. The Lord repeatedly promises that He will give eternal life to those who repent of their sins and receive Jesus Christ as Lord and Savior. And yet the promise does us no good until we claim it by trusting the sinners Savior.

Let us go a step further! A person may genuinely believe on the Lord Jesus Christ and yet not enjoy the assurance of salvation. For instance, he may think that it is presumption to say that he is saved. And so he may go on in doubt and darkness. The Word promises that those who believe on the Name of the Son of God have eternal life (1 John 5:13), but this must be appropriated by faith in order to be enjoyed.

God loves to be trusted. He is pleased when we take Him at His Word. He is honored when we claim the most improbable promises and reckon on them as being fulfilled.

One day when Napoleon was reviewing his troops, his horse bolted so violently that the Emperor was in danger of being thrown. A private rushed forward, seized the reins and quieted the horse.

Fully aware that his helper was a lowly private, Napoleon said, “Thank you very much, Captain!’”Taking him at his word, the private replied, “Of which regiment, sir?”

Later, when the former private rehearsed the incident to his friends, they mocked his confidence in thinking he was now a Captain. But it was true! The Emperor had said so, and he had claimed the promotion on the spot.

The believer’s situation is somewhat similar. He can be a Captain or remain a private. He can enjoy the riches that are his in Christ Jesus or live in virtual poverty. “We can have as much of God as we wish. Christ puts the key of the treasure-chamber in our hand, and bids us take all that we want. If a man is admitted into the bullion vault of a bank, and told to help himself, and comes out with one cent, whose fault is it that he is poor? Whose fault is it that Christian people generally have such scanty portions of the free riches of God?” (McLaren).

ஒக்டோபர் 5

நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். யோசுவா 1:3

பற்றிக் கொள்ள வேண்டிய வாக்குறுதிகள்

கானான் நாட்டினை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்திருந்தார். தேவ வாக்கினால் அது அவர்களுக்குச் சொந்தமானது ஆகும். என்றாலும், அதனை அவர்கள் தங்களுக்கு உரிதாக்கிக் கொள்ள வேண்டுமாயின் அதனை அவர்கள் கைப்பற்ற வேண்டும். அதற்கான வழி, ‘உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” என்பதே.

மேன்மையானதும் மதிப்புமிகுந்ததுமான பல வாக்குறுதிகளை திருமறையில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவற்றை விசுவாசத்தின் மூலம் நமக்குரியதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அவை நமது உடைமைப் பொருள்களாகும்.

எடுத்துக்காட்டாக, இரட்சிப்பைக் குறித்துச் சிந்திக்கலாம். எவனொருவன் தனது பாவங்களுக்காக மனம்வருந்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்கிறானோ, அவனுக்கு நித்திய வாழ்வைத் தருவதாகக் கர்த்தர் மீண்டும் மீண்டும் வாக்களித்துள்ளார். பாவிகள் இரட்சகரை நம்பி, அந்த வாக்குறுதியை வேண்டுமென்று ஏற்றுக்கொள்ளாதவரை, அதில் அவர்களுக்கு எவ்வித நன்மையுமில்லை.

இன்னும் ஒருபடி மேலே செல்வோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் உண்மையாகவே நம்புகிறவனாக இருக்கலாம். ஆயினும் இரட்சிப்பின் உறுதியை அவன் அனுபவிக்காதிருக்கக் கூடும். ஒருவேளை, தான் இரட்சிக்கப்பட்டாயிற்று என்று சொல்வது துணிகரமான அனுமானம் என்று அவன் நினைக்கக் கூடும். ஆகவே, அவன் சந்தேகத்தில் மூழ்கி இருளில் தொடர்ந்து செல்கிறவனாக இருக்கிறான். தேவகுமாரனுடைய திருப்பெயரில் விசுவாசமாயிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான் என்று திருமறை வாக்களிக்கிறது. (1.யோவான் 5:13). ஆயின், இதனை அனுபவிக்க வேண்டுமாயின், அதனை விசுவாசத்தினாலே நமக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும்.

தேவனிடத்தில் நம்பிக்கை கொள்கிறபோது அதில் அவர் பிரியப்படுகிறார். அவருடைய வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்ளும் வேளையில் அவர் இன்புறுகிறார். நிகழ்தற்கரிய வாக்குறுதிகளை, நிறைவேறினதாக நாம் எண்ணிக்கொண்டு நமக்குரியதாக்கும்போது, அவர் கனமடைகிறார்.

ஒருநாள் நெப்போலியன் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் ஏறிச்சென்ற குதிரை முரட்டுத்தனமாக மின்னலெனப் பாய்ந்தது. மாமன்னன் அக்குதிரையினின்று தூக்கி எறியப்படக்கூடிய நிலை காணப்பட்டது. அங்கு நின்ற உதவியாளர் ஒருவன் ஓடிச்சென்று குதிரையின் கடிவாள வாரை இழுத்துப்பிடித்துக் குதிரையை அடக்கினான்.

தனக்கு உதவிசெய்தவன் சாதாரண சிப்பந்தி என்பதை நன்கு அறிந்தும் நெப்போலியன், ‘நன்றி படைத்தலைவனே!” என்று கூறினான். உடனே அந்த உதவியாள், ‘எந்தப் படைப்பிரிவிற்கு மாமன்னரே?” என்று மாமன்னனின் சொற்களை அவ்வண்ணமே எடுத்துக் கொண்டவனாக வினவினான். பின்னர், அதனைத் தன் நண்பர்களிடம் கூறி, தான் படைத்தலைவன் என்று கூறியபோது அவர்கள் இவனது நம்பிக்கையைக் கண்டு எள்ளி நகையாடினர். ஆனால், அவனுடைய வாழ்வில் அது உண்மையாயிற்று. மாமன்னன் அவ்வாறு கூறினான். அந்த இடத்திலேயே பதவி உயர்வை அவன் தனது உரிமையாகக் கொண்டான்.

விசுவாசிகளுடைய நிலை ஏறத்தாழ இதற்கேற்றாற்போல இருக்கிறது. அவன் படைத்தலைவனாக ஆகலாம், அல்லது சாதாரண உதவியாளாக இருக்கலாம். கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்ற செல்வங்களையெல்லாம் அனுபவிக்கலாம், அல்லது வறுமையில் வாடுபவனாக வாழலாம். ‘தேவனுடையதை நாம் எவ்வளவு விரும்புகிறோமோ, அவ்வளவு பெற்றுக்கொள்ளலாம். பொக்கிஷ பண்டகசாலையில் திறவுகோலை கிறிஸ்து நம்மிடத்தில் கொடுத்திருக்கிறார். நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார். பலகோடிப்பணம் உள்ள கருவூலத்திலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு மனிதனிடம் கூறிய பின்னரும், அவ்விடத்திலிருந்து ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டவனாக ஒருவன் வருவானென்றால், அவன் வறியவன் என்பதற்கான தவறு யாருடையது.? தேவனிடத்திலிருந்து இலவசமாகப் பெற்றிடப் பொக்கிஷம் திறந்தளிக்கப்பட்டிருக்கிறபோது, பொதுவாக கிறிஸ்தவர்கள் பற்றாக்குறையோடு இருப்பது யாருடைய தவறாகும்?. (மாக்லேரன்).

5. Oktober

»Jeder Ort, auf den eure Fußsohle treten wird – euch habe ich ihn gegeben, wie ich zu Mose geredet habe.« Josua 1,3

Gott hatte dem Volk Israel das Land Kanaan gegeben. Es gehörte ihm nach der Verheißung Gottes. Aber die Israeliten mussten ihr eigenes Land erst einnehmen. Sie mussten es besetzen. Die Regel dieser Inbesitznahme hieß: »Jeder Ort, auf den eure Fußsohle treten wird – euch habe ich ihn gegeben. «

Gott hat uns viele großartige und kostbare Verheißungen gegeben. Die Bibel ist voll davon. Aber wir müssen sie auch im Glauben für uns in Anspruch nehmen. Nur dann gehören sie wirklich uns.

Nehmen wir beispielsweise die Verheißungen, die die Errettung betreffen. Gott verspricht wiederholt, dass Er denen ewiges Leben geben will, die ihre Sünden bereuen und Jesus Christus als Herrn und Heiland annehmen. Und doch hat diese Verheißung keinerlei Wert für uns, solange wir sie nicht für uns beanspruchen, solange wir nicht von Herzen auf den Heiland der Sünder vertrauen.

Und gehen wir noch einen Schritt weiter! Ein Mensch mag aufrichtig an den Herrn Jesus Christus glauben und sich doch nicht an der Gewissheit seiner Errettung freuen können. Er meint dann beispielsweise, dass er nicht so vermessen sein dürfte, einfach zu behaupten, er sei erlöst. Und so lebt er weiter in Zweifel und Dunkelheit. Das Wort Gottes sagt uns zu, dass diejenigen, die an den Namen des Sohnes Gottes glauben, ewiges Leben haben (siehe 1. Johannes 5,13), aber das müssen wir auch im Glauben für uns persönlich annehmen; erst dann können wir uns daran freuen.

Gott hat es gern, wenn wir ihm vertrauen. Er ist erfreut, wenn wir Ihn beim Wort nehmen. Er wird geehrt, wenn wir auch die unglaublichsten Zusagen wörtlich nehmen und auf Ihn zählen, dass Er sie erfüllt.

Eines Tages, als Napoleon seine Truppen inspizierte, bäumte sich sein Pferd so ungestüm auf, dass der Kaiser beinahe abgeworfen worden wäre. Ein dabeistehender einfacher Soldat rannte nach vorne, ergriff die Zügel und beruhigte das Pferd.

Napoleon war sich durchaus im Klaren darüber, dass der, der ihm geholfen hatte, kein Mann von militärischem Rang war, aber er sagte zu ihm: »Vielen Dank, Herr Hauptmann!«

Und der Soldat nahm ihn sofort beim Wort und erwiderte: »Von welchem Regiment denn, Majestät?«

Später, als dieser Mann den Vorfall seinen Freunden erzählte, machten sie sich lustig über ihn, weil er jetzt fest damit rechnete, zum Hauptmann ernannt worden zu sein. Aber es war wirklich wahr! Der Kaiser hatte es so gesagt, und der Soldat hatte diese Beförderung sofort für sich beansprucht.

Die Situation des gläubigen Christen ist ganz ähnlich. Es liegt bei ihm, ob er zum Hauptmann ernannt wird oder ein einfacher Soldat bleibt. Er kann sich an den Reichtümern freuen, die ihm in Christus Jesus gehören, oder in geistlicher Armut weiterleben. Die Schätze und Segnungen »Kanaans « liegen bereit, und es ist klar, dass die Christen selber schuld daran sind, wenn sie sich im Allgemeinen mit so armseligen Portionen der großen Reichtümer Gottes zufrieden geben.«