October

குறுகிய கால வாழ்க்கை

October 1

“For what is your life? It is even a vapor, that appeareth for a little time, and then vanisheth away.” (James 4:14)

The insistent voice of the Holy Spirit reminds mortal man frequently in the Scriptures of the brevity of his life. By the repeated use of similes, the Spirit of the Lord impresses on us that our days are limited and passing swiftly.

For instance, He likens life to a weaver’s shuttle (Job 7:6), the device that darts back and forth in the loom almost faster than the eye can follow.

Job speaks of life as wind (Job 7:7), here one minute and gone the next, never to return. The psalmist echoes the sentiment, speaking of “a wind that passeth away, and cometh not again” (Psa. 78:39).

Bildad unnecessarily reminds Job that “our days on earth are a shadow” (Job 8:9), a picture that is repeated in Psalm 102:11, “My days are like a shadow that declineth.” A shadow is ephemeral—lasting a very short time.

Job compares his life to a leaf (Job 13:25), fragile, frail and fading; and to dry stubble, driven away by the winds. Isaiah appeals to the Lord’s pity by reminding Him that “we all do fade as a leaf” (Isa. 64:6).

David describes his days as a handbreadth (Psa. 39:5), as narrow as the width of his hand. Viewing life as a journey, it would be about four inches long.

Moses, the man of God, depicts life as a sleep (Psa. 90:5), in which time passes without our being conscious of it.

In the same place, Moses speaks of people and their lives as grass: “In the morning they are like grass which groweth up. In the morning it flourisheth, and groweth up; in the evening it is cut down and withereth” (Psa. 90:5,6). Centuries later David used the same figure in describing our transiency: “As for man, his days are as grass: as a flower of the field, so he flourisheth. For the wind passeth over it, and it is gone; and the place thereof shall know it no more” (Psa. 103:15, 16). As Spurgeon said, the grass is “sown, grown, blown, mown, gone.” And that is life in a nutshell!

Finally James adds his testimony that life is as evanescent as vapor (Jas. 4:14). It appears for a brief moment, then vanishes away.

This accumulation of similes is designed to do two things. First, it should motivate the unconverted to consider the shortness of time and the importance of being ready to meet God. Second it should cause believers to number their days so that they might apply their hearts to wisdom (Psa. 90:12). This will result in lives or devotion and dedication to Christ, in lives that are lived for eternity.

ஒக்டோபர் 1

உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம் தோன்றி பின்பு தோன்றாமற் போகிற புகையைப் போலிருக்கிறதே? யாக்கோபு 4:14.

குறுகிய கால வாழ்க்கை

நிலையில்லா மனிதனுடைய வாழ்வு குறுகிய காலத்திற்கு உரியது என்று தூயஆவியானவர், திருமறையில் அவ்வப்போது வலியுறுத்திக்கூறி நினைப்பூட்டுகிறார். நமது நாட்கள் குறுகியவை என்றும், மிக விரைவில் கடந்து செல்கிறது என்றும் தேவ ஆவியானவர் உவமைகளோடு மீண்டும் மீண்டும் கூறி உறுதிப்படுத்துகின்றார்.

எடுத்துக்காட்டாக, நெய்கிறவன் எறிகிற நாடாவிற்கு வாழ்க்கையை அவர் ஒப்பிடுகிறார் (யோபு 7:6). அது முன்னும் பின்னுமாக ஓடி, நம் கண்கள் அறியக்கூடாத வகையில் விரைந்து செல்கிறது.

வாழ்க்கைக் காற்றுக்கு ஒப்பிட்டு யோபு பேசுகிறான் (யோபு 7:7). அது ஒரு நொடிப்பொழுது இங்கிருந்து, அடுத்த நொடியில் அங்கே சென்றுவிடுகிறது. திரும்பி வருவதில்லை. சங்கீத ஆசிரியன் இதனை ‘திரும்பிவராமல் அகலுகிற காற்று” என்று பிரதிபலித்துக் காட்டுகிறான். (சங்.78:39).

தேவையற்ற முறையில் பில்தாத், பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப் போலிருக்கிறது” என்று சொல்லி யோபுவிடம் நினைவுபடுத்துகிறான் (யோபு 8:9). இதனையே சங்கீத பாடகன், ‘என் நாட்கள் சாய்ந்து போகிற நிழலைப் போலிருக்கிறது” என்று சித்தரிக்கிறான். (சங்.102:11). நிழல் சிறிது நேரத்திற்கு மட்டுமே இருக்கிற ஒன்றாகும்.

தனது வாழ்வை ஒரு சருகிற்கு யோபு ஒப்பிடுகிறான். (யோபு 13:25). அது வலுவற்றது, எளிதில் நொருங்கக்கூடியது, மறைந்து போகக்கூடியது, காய்ந்து போன துரும்பு காற்றடித்தால் பறந்து போகும். ‘நாங்கள் அனைவரும் இலைகளைப்போல உதிர்கிறோம்” என்று நினைவுபடுத்திக் கர்த்தரின் பரிவிரக்கத்தை ஏசாயா நாடி வேண்டுகிறான் (ஏசாயா 64:6).

தன் வாழ்நாளை நான்கு விரற்கடையளவிற்கு தாவீது ஒப்பிடுகிறான் (சங்.39:5). வாழ்க்கையானது அங்கு பயணத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் தொலைவு நான்கு அங்குலமே.

தேவனுடைய மனிதனாகிய மோசே, மனிதனுடைய வாழ்வை நித்திரைக்கு ஒப்பிடுகிறான். (சங்.90:5). அங்கு நம்மைவிட்டுச் செல்லுகிற நேரம் நம்முடைய உணர்வுகளுக்குத் தெரிவதில்லை. அதே இடத்தில், மோசே மனிதர்களுடைய வாழ்க்கையை புல்லுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறான். ‘காலையில் முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையில் துளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்” (சங்.90:5,6). வாழ்நாள் விரைந்து செல்வதை சில நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த தாவீது அதே விதமாக வர்ணிக்கிறான். ‘மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியில் புஷ்பத்தைப்போல பூக்கிறான். காற்று அதன்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது.” (சங்.103:15,16). புல்லானது ‘விதைக்கப்படுகிறது, வளர்கிறது, மலர்கிறது, வெட்டப்படுகிறது, மறைந்து விடுகிறது,” என்று ஸ்பர்ஐன் கூறியுள்ளார். சுருக்கக்கூறின் அதுவே மனித வாழ்க்கை.

இறுதியாக, மனித வாழ்க்கையைக் குறித்த தன்னுடைய சான்றினை யாக்கோபு வழங்குகிறான். ‘தோன்றி மறைகிற புகையைப்போல அது இருக்கிறது” (யாக்கோபு 4:14). இந்த உவமைகள் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? இதனிமித்தம் இரு விளைவுகள் உண்டாக வேண்டும். ஒன்று, மனம் திரும்பாதவர்கள் வாழ்வின் குறுகிய காலத்தைக் குறித்துச் சிந்தித்தவர்களாக, கர்த்தரைச் சந்திப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படவேண்டும். இரண்டாவதாக, விசுவாசிகள் தங்களுடைய நாட்களை எண்ணும் அறிவைப் பெற்று ஞான இருதயமுள்ளவர்களாக ஆகவேண்டும். (சங்.90:12). நாம் வாழப்போகிற நித்தியமான வாழ்க்கை கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புவித்ததாகவும், பக்தியுள்ளதாகவும், விளங்க இவ்வறிவு வழிவகுக்கும்.

1. Oktober

»Ihr wisst nicht, wie es morgen um euer Leben stehen wird, denn ihr seid ein Dampf, der eine kleine Zeit sichtbar ist und dann verschwindet.« Jakobus 4,14

Die durchdringende Stimme des Heiligen Geistes in der Bibel erinnert uns sterbliche Menschen oft daran, dass unser Leben nur kurz ist. Durch den wiederholten Gebrauch von Bildern und Vergleichen prägt uns der Geist des Herrn tief ein, dass unsere Tage begrenzt sind und dass wir schnell vergehen.

Er vergleicht das Leben beispielsweise mit einem Weberschiffchen (siehe Hiob 7,6), jener Vorrichtung am Webstuhl, die so schnell zwischen den gespannten Fäden hin- und herschießt, dass das Auge kaum folgen kann.

Hiob spricht auch davon, dass das Leben wie ein Windhauch ist (siehe Hiob 7,7), der nur einen Augenblick bleibt und dann verschwunden ist und nie zurückkommt. Der Psalmist gibt denselben Eindruck wieder, wenn er von »einem Hauch« spricht, »der dahinfährt und nicht wiederkehrt« (siehe Psalm 78,39).

Bildad erinnert Hiob völlig unnötigerweise daran, dass unsere Tage auf der Erde nur ein Schatten sind (siehe Hiob 8,9), und dasselbe Bild finden wir auch in Psalm 102,12: »Meine Tage sind wie ein gestreckter Schatten.« Ein Schatten ist sehr kurzlebig, er ist nur kurze Zeit an der gleichen Stelle zu finden.

Hiob vergleicht sein Leben mit einem verwehten Blatt (siehe Hiob 13,25), zerbrechlich, schwach und welkend, und mit einem dürren Halm, der vom Wind weggetragen wird. Jesaja ruft das Mitleid des Herrn an, wenn er ihm sagt: »Wir alle sind verwelkt, wie das Laub welkt« (Jesaja 64,6).

David schreibt: »Siehe, handbreit hast du meine Tage gemacht« (Psalm 39,5). Wenn man das Leben als eine Reise betrachtete, so würde diese nach Davids Worten nur ein paar lächerliche Zentimeter lang dauern.

Mose, der Mann Gottes, beschreibt das Leben als einen Schlaf (Psalm 90,5), in dem die Zeit verstreicht, ohne dass wir es überhaupt merken.

Im selben Psalm vergleicht Mose die Menschen und ihr Leben mit dem Gras: »Sie sind am Morgen wie Gras, das aufsprosst. Am Morgen blüht es und sprosst auf. Am Abend welkt es und verdorrt« (Psalm 90,5.6). Jahrhunderte später gebrauchte David dasselbe Bild, um unsere Vergänglichkeit zu beschreiben: »Der Mensch – wie Gras sind seine Tage, wie die Blume des Feldes, so blüht er. Denn fährt ein Wind darüber, so ist sie nicht mehr, und ihr Ort kennt sie nicht mehr« (Psalm 103,15.16). Spurgeon hat es so ausgedrückt: »Das Gras wird gesät, wächst, blüht, wird abgemäht und ist weg.« Das ist unser Leben, in kürzester Form ausgedrückt!

Und hier fügt schließlich Jakobus sein Zeugnis hinzu; er sagt, dass das menschliche Leben sich so schnell verflüchtigt wie ein Dampf. Es erscheint für einen kurzen Augenblick und ist dann schon wieder verschwunden.

Diese Anhäufung von Vergleichen und Bildern soll bei uns zwei Dinge bewirken: Erstens soll es die Unbekehrten zum Nachdenken darüber anregen, wie kurz unsere Zeit auf Erden ist und wie wichtig es ist, bereit zu sein für die Begegnung mit Gott. Zweitens soll es die Gläubigen dazu bringen, ihre Tage zu zählen, »damit sie ein weises Herz erlangen« (siehe Psalm 90,12). Das wird zu einem Leben voller Ehrfurcht und Hingabe an Jesus Christus führen, zu einem Leben, das für die Ewigkeit gelebt wird.