November

அழைப்பின் தன்மை

November 8

“Let every man abide in the same calling wherein he was called.” (1 Cor. 7:20)

When a person becomes a Christian, he might think that he has to make a clean break with everything associated with his former life. To correct this thinking, the Apostle Paul lays down the general rule that a person should remain in the same calling in which he was at the time of his conversion. Let us consider this rule and suggest what it means and what it does not mean.

In its immediate context, the verse applies to a special marriage relationship. It is the case where one partner gets saved but the other does not. What should the believer do? Should he divorce his wife? No, says Paul, he should remain in that marriage relationship with the hope that his partner will be converted through his testimony.

In general, Paul’s rule means that conversion does not require the violent disruption or forcible overthrow of pre-salvation relationships and associations that are not expressly forbidden by Scripture. For instance, a Jew need not resort to surgery in order to obliterate the physical mark of his Jewishness. Neither should a believing Gentile submit to some physical change like circumcision in order to distinguish him from the heathen. Physical features or marks are not what really matter. What God wants to see is obedience to His commandments.

A man who is a slave at the time of his new birth should not rebel against his servitude and thus bring trouble and punishment upon himself. He can be a good slave and a good Christian at the same time. Social position and class distinctions do not matter with God. However, if a slave can obtain his freedom by legitimate means, he should do so.

So much for what Paul’s rule means. It should be obvious that there are important exceptions to the rule. For instance, it does not mean that a man in an ungodly occupation should continue in it. If a man is a bartender or operates a house of prostitution or a gambling casino, he will know by spiritual instinct that he has to make a change.

Another exception to the general rule has to do with religious associations. A new convert must not continue in any system where the great fundamentals of the Christian faith are denied. He must separate himself from any church where the Savior is dishonored. This would also apply to membership in social clubs where the Name of Christ is banned or even unwelcome. Loyalty to the Son of God requires that a believer resign from all such.

To summarize, then, the rule is that a new believer should remain in the calling in which he was called unless that calling is sinful and dishonoring to the Lord. He does not have to break with past associations unless they are clearly forbidden by the Word of God.

நவம்பர் 8

அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 1.கொரிந்தியர் 7:20.

அழைப்பின் தன்மை

ஒருவன் கிறிஸ்தவனாகிறபோது, தனது முந்தின வாழ்க்கையில் கொண்டிருந்த அனைத்துத் தொடர்புகளையும் முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடும். இந்த எண்ணத்திலிருந்து நம்மைச் சரிசெய்து கொள்ள அப்போஸ்தலனாகிய பவுல் இங்கு ஒரு பொதுவான விதியை உரைக்கிறதைப் பார்க்கிறோம். அதாவது ஒவ்வொருவனும் மனமாற்றம் அடைகிறபோது எவ்வித நிலையில் அழைக்கப்பட்டானோ அதே நிலையில் நிலைத்திருக்கக்கடவன் என்பதாகும். இந்த விதியைக் குறித்துச் சற்று சிந்தித்து இது எந்தப் பொருளைத் தருகிறது, எந்தப் பொருளைக் கொடுக்கிறதில்லை எனக் காண்போம்.

இந்த வசனத்தின் பின்னணியைப் பார்க்கிறபோது, இது ஒருவகை திருமண உறவோடு சம்பந்தப்பட்டது என்பதை அறிகிறோம். திருமணமான தம்பதிகளில் ஒருவர் இரட்சிக்கப்பட்டு விடுகிறார். மற்றவரோ இரட்சிக்கப்படவில்லை. விசுவாசியானவன் என்ன செய்ய வேண்டும்? அவர் தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்துச் செய்துவிட வேண்டுமா? கூடாது என்று பவுல் கூறுகிறார். தன்னுடைய சாட்சியின் மூலமாகத் தனது வாழ்க்கைத் துணையும் இரட்சிப்பு அடைவார் என்னும் நம்பிக்கையோடு, அந்தத் திருமண உறவில் அவர் நிலைத்திருக்க வேண்டும்.

இவ்விதியை பொதுவாக நினைத்துப் பார்;த்தால்,ஒருவன் தனது இரட்சிப்பிற்கு முந்தின காலத்தில் கொண்டிருந்த தொடர்பு ஏதொன்றையும், அது வேதத்திற்கு முரண்பாடாக இல்லாதிருப்பின், துண்டிக்கப் பலவந்தமாய் முயற்சி செய்யக்கூடாது. எடுத்துக்காட்டாக விருத்தசேதனம் செய்த யூதன், விருத்தசேதனத்தை மறைக்க அறுவைச் சிகிட்சை மேற்கொள்ள வேண்டியதில்லை. அது போலவே புற இனத்தவன் விசுவாசியான பிறகு, புற இனத்தவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்ட விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டியதில்லை. சரீரப்பிரகாரமான அடையாளங்கள் யாவும் ஒன்றுக்கும் உதவாதவை. தமது கட்டளைக்குத் தம்மக்கள் கீழ்ப்படிய வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்.

ஒரு அடிமையானவன் புதிதாகப் பிறந்ததின் நிமித்தம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டியதில்லை. அவ்வாறு முயற்சி செய்வதால் ஏற்படும் வருத்தங்களையும், தண்டனையையும் அவன் அடையத் தேவையில்லை. ஒரே நேரத்தில் நல்ல அடிமையாகவும் நல்ல கிறிஸ்தவனாகவும் அவனால் வாழமுடியும். சமுதாய நிலையும் ஏற்றத் தாழ்வுகளும், தேவனுக்குப் பொருட்டல்ல. இருந்த போதிலும், சட்டரீதியாக ஒரு அடிமை விடுதலை பெறக்கூடுமானால் விடுதலை பெறலாம்.

பவுல் கூறிய விதியின் பொருள் இவ்வளவாக இருக்க, இவ்விதிக்கு முக்கியமான விலக்குகள் உள்ளன என்பது வெளிப்படை. எடுத்துக்காட்டாக, தேவனுக்கு விரோதமாகத் துன்மார்க்கமான அலுவலை ஒருவன் செய்து கொண்டிருந்தால், அதில் நிலைநிற்கலாம் என்பது அதன் பொருளன்று. ஒரு மனிதன் மது விநியோகிப்பவனாய் இருந்தாலோ, விபச்சார விடுதி நடத்தினாலோ, சூதாட்டக்கூட்டத்தை நிர்வகித்தாலோ, ஆவிக்குரிய உணர்வு பெற்றவனாக, உனடியாகத் தனது அலுவலை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்தப் பொதுவிதிக்கு வேறொரு விலக்கும் உண்டு. அது சமயச் சார்பைப் பொருத்ததாயிருக்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மறுத்துரைக்கும் எந்த அமைப்பிலும் புதிய விசுவாசியானவன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாகாது. இரட்சகர் கனவீனப்படுகிற எந்த ஆலயத்திலிருந்தும் அவன் தன்னை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் திருப்பெயர் தடை செய்யப்பட்ட அல்லது வரவேற்கப்படாத எந்தவொரு சமூகசங்கத்திலிருந்தும் அவன் விலகவேண்டும். தேவகுமாரனுக்கு உண்மையுள்ளவனாக இருக்க விரும்பும் விசுவாசி இவ்வித அமைப்புக்களில் அங்கம் வகிக்கக்கூடாது.

இவை யாவற்றையும் சுருக்கக் கூறுவோமாயின், புதிய விசுவாசியானவன் தான் அழைக்கப்பட்ட நிலையிலே நிலைத்திருப்பானாக. அந்நிலையானது கர்த்தருக்குக் கனவீனத்தைக் கொண்டுவருவதாகவும், பாவம் உள்ளதாகவும் இருக்குமானால், அந்நிலையிலிருந்து மாறவேண்டும். தேவ வசனம் தடைசெய்யாத வரை, நாம் முன்னிருந்த தொடர்புகளில் நிலைத்திருக்கலாம்.

8. November

»Jeder bleibe in dem Stand, in dem er berufen worden ist.« 1. Korinther 7,20

Wenn ein Mensch Christ wird, könnte er vielleicht denken, dass er jetzt mit allem, was mit seinem früheren Leben verbunden ist, gründlich Schluss machen müsste. Um ein solches Denken zurechtzurücken, verkündet der Apostel Paulus als allgemeinen Grundsatz, dass ein Mensch in demselben Stand bleiben soll, in dem er im Augenblick seiner Bekehrung auch war. Wir wollen diese Regel hier etwas näher betrachten und dazu sagen, was sie bedeutet und was nicht.

Im Textzusammenhang ist auch die Rede von einer besonderen Problematik in Bezug auf die Ehe, nämlich von dem Fall, dass der eine Ehepartner errettet ist, aber der andere nicht. Was soll ein gläubiger Mann dann tun? Soll er sich von seiner Frau scheiden lassen? Nein, sagt Paulus, er sollte in dieser Eheverbindung bleiben mit der Hoffnung, dass seine Partnerin sich durch sein Zeugnis auch noch bekehrt.

Im Allgemeinen bedeutet die Regel des Paulus, dass die Bekehrung nicht den gewaltsamen Abbruch aller Beziehungen mit sich bringen muss, die vor der Errettung schon bestanden haben, solange sie nicht ausdrücklich von der Heiligen Schrift verboten worden sind. Ein Jude muss beispielsweise jetzt nicht Hilfe bei der Chirurgie suchen, um das körperlich sichtbare Zeichen
seiner Zugehörigkeit zum Judentum unkenntlich zu machen. Und genauso wenig sollte ein Gläubiger sich irgendwelchen körperlichen Veränderungen wie etwa der Beschneidung unterziehen, nur um sich von den Heiden zu unterscheiden. Denn auf körperliche Merkmale und Zeichen kommt es nicht an. Was Gott an uns sehen möchte, das ist der Gehorsam Seinen Geboten gegenüber.

Ein Mann, der zur Zeit seiner Wiedergeburt Sklave war, sagt Paulus, sollte jetzt nicht gegen seine Leibeigenschaft rebellieren und so Schwierigkeiten und Strafen über sich bringen. Er kann gleichzeitig ein guter Sklave und ein guter Christ sein. Soziale Stellungen und Klassenunterschiede spielen vor Gott keine Rolle. Wenn ein Sklave jedoch durch legitime Mittel seine Freiheit erlangen kann, dann sollte er es auch tun.

So viel also zu dem, was die Regel des Paulus bedeutet. Es sollte jedoch offensichtlich sein, dass es auch wichtige Ausnahmen von dieser Regel gibt. Beispielsweise heißt es nicht, dass ein Mann einen Beruf, der gegen göttliche Gebote verstößt, auch weiterführen sollte. Wenn jemand also eine Bar besitzt oder ein Haus, in dem Prostitution betrieben wird, oder ein Spielkasino,
dann wird er aus seinem geistlichen Instinkt heraus schon wissen, dass es hier grundlegende Veränderungen geben muss.

Eine andere Ausnahme von der allgemeinen Regel hat mit religiösen Vereinigungen zu tun. Ein Neubekehrter darf in keinem System bleiben, in dem die wichtigsten Grundsätze des christlichen Glaubens geleugnet werden. Er muss sich von jeder Gemeinde abwenden, in der dem Heiland nicht die Ehre gegeben wird. Das bezieht sich auch auf die Mitgliedschaft in sozialen
Vereinen, wo der Name Christi verachtet wird oder wo er zumindest nicht willkommen ist. Die Treue zum Sohn Gottes verlangt es, dass ein Gläubiger sich aus allen solchen Kreisen zurückzieht.

Fazit: Ein Neubekehrter soll in dem Stand bleiben, in den er berufen worden ist, es sei denn, dieser Stand ist sündig oder macht dem Herrn Schande.