November

கர்த்தரால் அறியப்பட்டவர்கள்

November 3

“Nevertheless the foundation of God standeth sure, having this seal, The Lord knoweth them that are his. And, Let everyone that nameth the name of Christ depart from iniquity.” (2 Tim. 2:19)

Even in the days of the apostles, there was a great deal of confusion in the religious world. Two men, for instance, were teaching the bizarre doctrine that the resurrection of believers was past. To us such an idea is crazy. But it was serious enough to overthrow the faith of some people. The question naturally arises, “Were these two men genuine Christians?”

We often face the same question today. Here is a prominent clergyman who denies the Virgin Birth. A seminary professor teaches that the Bible contains error. A college student claims to be saved by grace through faith, yet clings to sabbath-keeping as an essential for salvation. A businessman tells of a conversion experience, yet remains in a church that venerates idols, teaching salvation through sacraments, and claims that its leader is infallible in matters of faith and morals. Are these people true Christians?

To be very frank, there are cases where we cannot know definitely whether a person’s Christianity is genuine or counterfeit. Between the true and the false, the white and the black, there is a gray area. We cannot be sure in this area. Only God knows.

What is sure in a world of uncertainty is the foundation of God. Whatever He builds is firm and solid. There is a seal on His foundation and on that seal are two inscriptions. One presents the divine side, the other the human. The first is a declarative, the second an imperative.

The divine side is that the Lord knows those who are His. He knows those who genuinely belong to Him even if their actions are not always what they should be. On the other hand He is aware of all pretense and hypocrisy, of all who have an outward show but not inward reality. We may not be able to distinguish the sheep from the goats but He can and does.

The human side is that everyone who names the Name of Christ should depart from iniquity. This is how a man can prove the reality of his profession. Anyone who continues in sin loses credibility as far as his claim to being a Christian is concerned.

This then is our resource when we find it difficult to distinguish between wheat and tares. The Lord knows those who are His. All who claim to be can demonstrate it to others by separation from sin.

நவம்பர் 3

ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகின்ற எவனும் அநியாயத்தை விட்டுக் விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது. 2.தீமோத்தேயு 2:19.

கர்த்தரால் அறியப்பட்டவர்கள்

அப்போஸ்தலர்களுடைய நாட்களிலும்கூட, சமய உலகத்தில் பெரும்குழப்பம் நிலவியது. எடுத்துக்காட்டாக, விசுவாசிகளின் உயிர்தெழுதல் நடந்தாயிற்று என்று இருவர் விபரீதமான உபதேசத்தைக் கற்ப்பித்தனர். இது மிகுதியற்ற கருத்து என்பதை நாம் அறிவோம். ஆனாலும், சிலருடைய விசுவாசம் தகர்ந்து போவதற்கு அது போதுமானதாயிருந்தது. ‘அந்த இருவரும் உண்மையான கிறிஸ்தவர்களா?” என்னும் கேள்வி எழுவது இயற்கையே.

இன்றைய நாட்களில் இத்தகைய கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மிகவும் புகழ்வாய்ந்த கிறிஸ்தவச் சமய போதகர் ஒருவர் இங்கே இயேசு கிறிஸ்துவின் கன்னிவயிற்றின் பிறப்பை மறுத்துரைக்கிறார். வேதத்தில் பல தவறுகள் இருக்கின்றன என்;று சமயக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கற்பிக்கிறார். ஒரு கல்லூரி மாணவன், தான் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டதாகக் கூறுகிறான், ஆனாலும் இரட்சிப்பின் முழுமைக்கு ஒய்வுநாளை அனுசரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறான். ஒரு தொழில் அதிபதி தான் மனமாற்றமடைந்த அனுபவத்தை விவரிக்கிறார். ஆனாலும் சிலை வணக்கத்தை மேன்மையாகக் கருதக்கூடிய ஆலயத்திற்குச் செல்கிறார். அந்த ஆலயத்தில் புனிதச் சடங்குகளால் இரட்சிப்பு கிடைக்கும் என்றும் போதிக்கிறார்கள். சமயக் குருத் தலைவர் அப்பழுக்கற்றவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இவர்கள் யாவரும் உண்மையான கிறிஸ்தவர்களா?.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமாயின், சிலருடைய கிறிஸ்தவ விசுவாசம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று நாம் உறுதியாக சொல்லமுடியாது. உண்மைக்கும் பொய்க்கும், வெண்மைக்கும் கருமைக்கும,; இடையே ஒரு மங்கலான பகுதி உள்ளது. இதனை நாம் அறியமாட்டோம். தேவன் ஒருவரே அறிவார்.

நிலையற்ற உலகில் தேவனுடைய அஸ்திபாரமே உறுதியானது. அவர் கட்டினது நிலைத்திருக்கும், அது மிகவும் வலிமை வாய்ந்தது. அந்த அஸ்திபாரத்தில் முத்திரை விளங்கும். அந்த முத்திரையில் இரண்டு வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று தேவனைச் சார்ந்தது, மற்றதோ மனிதனைச் சார்ந்தது. ஒன்று அறிக்கையாகும். மற்றதோ நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

தம்முடையவர்கள் யாவர் என்பதைக் கர்த்தர் அறிவார் என்பது தெய்வீக பக்கமாகும். உண்மையாகவே அவரைச் சார்ந்தவர்கள் யாவர் என்பதை அவர் அறிவார். அவர்களுடைய செயல்பாடுகள் ஒருவேளை இருக்கவேண்டியபடி இல்லாதிருக்கலாம். எவரெல்லாம் நடிக்கிறார்கள், மாய்மாலம் செய்கிறார்கள், வெளியரங்கமான அவர்களது நடத்தை வெறும் நாடகமே, உள்ளான நிலையில் பொய் என்பதை அவர் அறிவார். வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளை அவர் பிரித்தறியக் கூடியவர். ஆயினும் அதனை நம்மால் அறியக்கூடாது.

மனிதனுடைய பங்கு யாதெனில், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகின்ற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதேயாகும். தான் செய்கின்ற அறிக்கையை, அநியாயத்தை விட்டுவிலகுவதன் மூலமாகவே அவன் நிரூபிக்கக் கூடும். தான் கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்கிறவன் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருப்பானாயின் தனது நம்பகத்தன்மையை இழந்துபோவான்.

கோதுமைப் பயிர் எது, களை எது, என்று வேறுபடுத்திக் காண கண்டறியும் ஆற்றல் நமக்கு இல்லாதிருக்கலாம். தம்முடையவர்கள் யாவர் என்பதைக் கர்த்தர் அறிவார். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்கிறவர்கள் பாவத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து தங்களுடைய அறிக்கையை மற்றவர்களுக்கு முன் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.

3. November

»Doch der feste Grund Gottes steht und hat dieses Siegel: Der Herr kennt, die sein sind; und: Jeder, der den Namen des Herrn nennt, stehe ab von der Ungerechtigkeit! « 2. Timotheus 2,19

Auch schon zur Zeit der Apostel gab es viel Verwirrung im religiösen Bereich. Zwei Männer beispielsweise verbreiteten damals die eigenartige Lehre, dass die Auferstehung der Gläubigen schon geschehen wäre. Uns erscheint eine solche Vorstellung unsinnig. Aber sie wurde damals ernst genug genommen, dass dadurch der Glaube mancher Leute durcheinander gebracht wurde. Und hier erhebt sich natürlich die Frage: »Waren diese beiden Männer denn überhaupt wirkliche Christen?«

Vor derselben Frage stehen wir heute auch oft. Da ist beispielsweise ein bekannter Geistlicher, der die Jungfrauengeburt leugnet. Oder ein Seminarprofessor, der lehrt, dass die Bibel offensichtliche Irrtümer enthält. Oder ein Student, der behauptet, er sei durch die Gnade im Glauben erlöst, und der doch eisern an der Heiligung des Sabbat festhält und sagt, das sei wesentlich
für die Errettung. Oder ein Geschäftsmann, der überzeugend von seinem Bekehrungserlebnis erzählt, dann aber doch in einer Religionsgemeinschaft bleibt, die Götzen anbetet, die lehrt, dass das Heil nur durch den Empfang bestimmter Sakramente erreicht wird, und behauptet, dass ihr oberster Leiter unfehlbar sei in Fragen des Glaubens und der Moral. Sind solche
Leute wirklich echte Christen?

Ich will hier sehr offen sein: Es gibt Fälle, wo wir nicht mit Bestimmtheit wissen können, ob der Glaube eines Menschen echt ist oder nur eine Vortäuschung. Zwischen dem Wahren und dem Falschen, dem Weißen und dem Schwarzen gibt es eine Grauzone. Und da können wir nicht ganz sicher sein. Da weiß nur Gott Bescheid.

Doch wessen wir uns in einer Welt voller Ungewissheiten ganz sicher sein können, das ist das Fundament, der Grund Gottes. Alles, was Er baut, ist fest und solide. Sein Fundament ist sogar versiegelt, und auf diesem Siegel erkennen wir zwei Inschriften. Die eine stellt die göttliche Seite dar, die andere die menschliche. Die erste ist eine Erklärung, die zweite eine Forderung.

Die göttliche Seite besteht darin, dass der Herr die Seinen kennt. Er kennt die, die wahrhaftig zu Ihm gehören, selbst wenn ihr Verhalten nicht immer so ist, wie es sein sollte. Auf der anderen Seite durchschaut Er auch jede Verstellung und jede Heuchelei all derer, die zwar nach außen hin viel vom Glauben reden, aber nicht die entsprechende innere Wirklichkeit haben. Wir können die Schafe möglicherweise nicht von den Böcken unterscheiden, aber Gott kann es und tut es auch.

Die menschliche Seite besteht darin, dass jeder, der den Namen Gottes nennt, auch von der Ungerechtigkeit lassen soll. Auf diese Weise kann ein Mensch die Wahrheit seines Bekenntnisses beweisen. Doch jeder, der weitermacht mit der Sünde, verliert seine Glaubwürdigkeit, wenn er dabei behauptet, ein Christ zu sein.

Das ist also unser Hilfsmittel, wenn wir es so schwierig finden, zwischen dem Weizen und dem Unkraut zu unterscheiden. Der Herr kennt die Seinen. Und alle, die behaupten, dazuzugehören, können es anderen beweisen, indem sie sich deutlich von der Sünde trennen.