May

சுய நேசம்

May 17

“…whether in pretense, or in truth, Christ is preached; and I therein do rejoice, yea and will rejoice.” (Phil. 1:18)

It is a common failing among men to acknowledge no good beyond their own private circle. It is as if they have a monopoly on excellence and refuse to admit that anyone else can be or do anything comparable. They remind us of the humorous bumper-sticker, “I’m O.K. You’re so so.” Even this would be a grudging admission for some of them to make.

Their church is the only right one. Their service for the Lord is what really counts. Their views on all subjects are the only authoritative ones. They are the people and wisdom will die with them.

Paul did not belong to that school. He recognized that others were also preaching the Gospel. True, some were doing it out of jealousy, hoping to annoy him. But he could still give them credit for proclaiming the Gospel, and could still rejoice that Christ was being preached.

In his commentary on the Pastoral Epistles, Donald Guthrie wrote, “It takes great grace for independent thinkers to acknowledge that truth can flow in channels other than their own.”

It is a distinctive feature of the cults that their leaders profess to speak the last word on all matters of faith and morals. They demand unquestioning obedience to their pronouncements, and seek to isolate their followers from contact with any dissenting views.

In the seldom-read introduction to the King James Version of the Bible, the translators wrote of “self-conceited Brethren, who run their own ways, and give liking unto nothing, but what is framed by themselves, and hammered on their anvil.” The lesson for us is to be large-souled, to be willing to acknowledge good wherever we find it, and to realize that no believer or Christian fellowship can afford to claim that they are the only right ones or that they have a corner on the truth.

மே 17

வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் சந்தோஷப்படுவேன். பிலிப்பியர் 1:18.

சுய நேசம்

தங்களைத் தவிர, பிறர் எவரிடமும் காணும் எந்த நன்மையையும் புகழாத குற்றம் பொதுவாக மனிதர்களிடையே காணப்படுகிறது. எல்லாச் சிறப்புக்களுக்கும் தாங்களே ஏகபோக உரிமையுடையவர் என்றும், மற்றவர் எவரும் அத்தகைய மேன்மை படைத்தவர்கள் அல்லர் என்றும், அவர்களால் ஒப்பிடத்தக்க வகையில் எதையும் செய்ய இயலாது என்றும் எண்ணுகின்றனர். ‘எல்லாவற்றிலும் நான் சரியானவன். உங்களிடத்தில் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை,” என்று சொல்லுவது போல இது இருக்கிறது. இந்த அளவுக்கும் கூட மற்றவர்களைப் புகழச் சிலர் சற்றேனும் விரும்புவதில்லை.

அவர்களுடைய சபை மட்டுமே சரியானது. கர்த்தருக்கு அவர்கள் ஆற்றுகிற பணி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் கொடுக்கிற விளக்கம் மட்டுமே ஆக்கபூர்வமானது. அவர்களே எல்லா மேன்மைக்கும் உரியவர்கள். ஞானமும் இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து இறந்து போகும்.

இப்படிப்பட்ட எண்ணம் உடையவராக பவுல் செயல்படவில்லை. மற்றவர்களும் நற்செய்தியை அறிவித்தனர் என்பதை ஒப்புக்கொண்டார். பவுலுக்குத் தொல்லையளிக்க வேண்டும் என்னும் வஞ்சகத்தோடு அவர்கள் ஊழியம் செய்தனர் என்பது உண்மை தான். இருந்த போதிலும் அவர்கள் ஆற்றிய பணியினை பவுல் புகழ்ந்து, அவர்கள் மூலமாய் கிறிஸ்து அறிவிக்கப்பட்டதால் பேருவகை கொண்டார்.

தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோருக்கு எழுதப்பட்ட மடல்களின் விளக்கவுரையில், டொனால்டு குத்திரி என்பார் எழுதியுள்ளதாவது,. ‘தங்களுடையதல்லாத பிறருடைய வாய்க்கால்களிலும் உண்மை பாய்ந்து வரும் என்பதைத் தனிப்பட்ட சிந்தனையானர்கள் ஒப்புக்கொள்ள, அவர்களுக்குக் கிருபை மிகவும் தேவையாக இருக்கிறது.”

விசுவாசத்தைக் குறித்தும், ஒழுக்கத்தைக் குறித்தும் தங்களுடைய தலைவர்களே முடிவான கருத்துக்களை வழங்க நியமிக்கப்பட்டவர்கள் என்று சில மாறுபட்ட கருத்துடைய ‘கள்ளக் கிறிஸ்தவச் சமயக் குழுவினர்” நினைக்கின்றனர். தங்களுடைய அறிக்கைகளுக்கு எவ்வித எதிர்க் கேள்வியையும் எழுப்பாமல் கீழ்படிய வேண்டுமென்று அத்தலைவர்கள் கட்டளையிடுகின்றனர். எதிரான கருத்துடையோர் ஒருவரோடும் ஈடுபாடு கொள்ளக்கூடாது என்றும் தங்களைப் பின்பற்றுவோரை தனிமைப்படுத்திப் பிரித்து வைக்கின்றனர்.

ஜேம்ஸ் அரசர் திருப்புதல் என்றழைக்கப்படும் ஆங்கில வேதத்தின் முன்னுரையில், மொழி பெயர்ப்பாளர்கள் எழுதியுள்ளதை அதிகமான பேர் வாசித்திருக்க மாட்டார்கள். ‘தற்செருக்குள்ள சகோதரர்கள், தங்களுடைய சொந்த வழியில் ஓடுகின்றார்கள். பிற கருத்துக்கள் எதையும் விரும்புவதில்லை. தாங்கள் வகுத்த சட்டங்களுக்கு, தங்களுடைய பட்டறையிலேயே சுத்தியலினால் அறைந்து தாழ்பாள் போட்டுக்கொள்கின்றனர்.” எங்கு நன்மை காணப்பட்டாலும் அதனை நாம் ஒப்புக்கொள்ளக்கூடிய பரந்த மனதுடையவராக இருக்கவேண்டும். தாங்களே எல்லாவற்றையும் சரியாய்ச் செய்கிறவர்கள், எல்லாச் சத்தியங்களும் தங்களுக்கே உரியன என்று எந்த விசுவாசியும் அல்லது எந்தக் கிறிஸ்தவக் கூட்டத்தாரும் உரிமை கொள்ளலாகாது என்னும் படிப்பினையை இதிலிருந்து கற்றறிவோம்.

17. Mai

»Wird doch auf alle Weise, sei es aus Vorwand oder in Wahrheit, Christus verkündigt, und darüber freue ich mich, ja, ich werde mich auch freuen.« Philipper 1,18

Es ist ein weit verbreitetes Übel unter den Menschen, nichts Gutes außerhalb ihres eigenen privaten Gesichtskreises anzuerkennen. Sie haben gleichsam ein Monopol, was Können und Leistung betrifft, und können unmöglich zugeben, dass irgendjemand sonst etwas Vergleichbares sein oder tun kann. Sie erinnern uns an den ironischen Autoaufkleber: »Ich bin Eins A, du bist so la la.« Und selbst das würden manche nur zähneknirschend zugeben.

Ihre Gemeinde ist die einzig wahre. Ihr Dienst für den Herrn ist der einzige, der zählt. Ihre Ansichten über alle Dinge sind die einzig gültigen. Sie »sind die Menschen, mit denen die Weisheit aussterben wird«.

Paulus gehörte nicht zu jener Schule. Er erkannte an, dass auch andere das Evangelium predigten. Zugegeben, einige taten es aus Neid, in der Hoffnung, ihn damit zu ärgern. Aber dennoch konnte er sie dafür loben, dass sie das Evangelium verkündigten, und dennoch konnte er sich darüber freuen, dass Christus gepredigt wurde.

In seinem Kommentar über die Pastoralbriefe schrieb Donald Guthrie: »Unabhängige Denker brauchen viel Gnade, um anzuerkennen, dass die Wahrheit auch noch durch andere Kanäle als ihre eigenen fließen kann.«

Es ist ein typisches Kennzeichen der Sekten, dass ihre Führer behaupten, in allen Fragen des Glaubens und der Moral das letzte Wort zu haben. Sie verlangen bedingungslosen Gehorsam allen ihren Forderungen gegenüber und versuchen, ihr Anhänger von jeder eventuellen Berührung mit abweichenden Meinungen zu isolieren.

In der selten gelesenen Einleitung der King-James-Übersetzung der Bibel schreiben die Übersetzer von »eingebildeten Brüdern, die ihre eigenen Wege gehen und nichts anderes schätzen, als was von ihnen selbst erdacht und auf ihrem eigenen Amboss geschmiedet wurde«. Wir sollten daraus lernen, großherzig zu sein und jedes Gute anzuerkennen, wo immer wir es auch finden; und einzusehen, dass, wenn wir an christliche Gemeinschaft glauben, wir niemals behaupten können, »wir« wären die einzig Richtigen und hätten die Wahrheit gepachtet.