May

குறை கூறுதல்

May 15

“Neither murmur ye, as some of them also murmured, and were destroyed of the destroyer,” (1 Cor. 10:10)

The Israelites were chronic complainers as they trekked through the desert. They complained about the water supply. They complained about the food supply. They complained about their leaders. When God gave them manna from heaven, they soon grew tired of it and longed for the leeks, onions and garlic of Egypt. Although there were no food markets or shoe stores in the wilderness, God provided an unfailing supply of groceries for forty years, and shoes that never wore out. Yet instead of being grateful for this miraculous provision, the Israelites complained without letup.

Times haven’t changed. Men today complain about the weather: it’s either too hot or too cold, too wet or too dry. They complain about the food, like lumpy gravy or burnt toast. They complain about their work and wages, then about unemployment when they have neither. They find fault with the government and its taxes, at the same time demanding ever-increasing benefits and services. They are unhappy with other people, with their car, with service in the restaurant. They complain about minor pains and aches, and wish they were taller, thinner, better looking. No matter how good God has been to them, they say, “What’s He done for me lately?”

It must be a trial to God to have people like us on His hands. He has been so good to us, providing not only the necessities of life, but luxuries which His own Son did not enjoy when He was here upon earth. We have good food, pure water, comfortable homes, clothes in abundance. We have sight, hearing, appetite, memory and so many other mercies that we take for granted. He has protected us, guided us and sustained us. Best of all, He has given us eternal life through faith in the Lord Jesus Christ. And what thanks does He receive? Too often He hears nothing but a tirade of complaints.

I had a friend in Chicago years ago who had a good answer when asked, “How are you?” He would always reply, “It would be a sin to complain.” I often think of that when tempted to murmur. It’s a sin to complain. The antidote to complaining is thanksgiving. When we remember all that the Lord has done for us, we realize that we have no reason to complain.

மே 15

அவர்கள் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். 1.கொரிந்;தியர் 10:10

குறை கூறுதல்

பாலவனத்தில் பயணம் மேற்கொண்ட இஸ்ரவேலர் எப்போதும் குறைகூறுகிறவர்களாக இருந்தனர். அருந்துவதற்கு நீர் இல்லை, உண்பதற்கு சுவைமிக்க உணவு இல்லை, தலைவர்களோ சரியில்லை என்று குறைகூறினர். வானத்தினின்று தேவன் மன்னாவை அளிந்தபோது, விரைவில் அதன் மீதுவிருப்பமற்றுப் போயினர். அவர்கள் எகிப்தில் உண்ட கீரைகளையும் வெள்ளைப்பூண்டுகளையும், வெங்காயங்களையும், நினைத்து ஏங்கினர். போகிற வழியில் அவர்களுக்கு உணவுப் பொருட்களை விற்கும் சந்தை இல்லை. ஆனாலும் நாற்பது ஆண்டுகள் அவர்களுக்குத் தடையின்றித் தேவையான அனைத்து மளிகைப் பொருட்களையும் தேவன் நல்கினார். அவர்களுடைய காலணிகள் தேய்ந்துபோகவில்லை. அற்புதமாக தங்களுடைய தேவைகள் சந்திக்கப்பட்ட போதிலும், இஸ்ரவேலர் குறைகூறுவதில் சோர்ந்து போகவில்லை.

காலங்கள் மாறிப்போவதில்லை. வானிலையைப் பற்றி மனிதர்கள் குறை கூறுகின்றனர். மிகவும் சூடாக இருக்கிறது, மிகவும் குளிராக இருக்கிறது, மழை அதிகமாக பொழிகிறது, எல்லாம் காய்ந்து போயிற்று, என்று கூறுவர். கூட்டு நன்றாக வேகவில்லை, கறி கருகிப் போயிற்று என்று உணவைக் குறித்து குறைகூறுவர். தங்களுடைய அலுவலைக் குறித்தும் ஊதியத்தைக் குறித்தும், வேலையில்லாத திண்டாட்டத்தைக் குறித்தும் குறை சொல்லுவார்கள். அரசைப் பற்றியும், வரிகளைப் பற்றியும் குறை சொல்லுவார்கள். மற்றவர்களைக் குறித்துக் குறை சொல்லுவார்கள். தலைவலியைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். உயரமாக வளரவில்லையே, பருமனாக இருக்கிறோமே, அழகில்லையே என்று குறை கூறுவாhர்கள். அவர்களுக்குத் தேவன் எவ்வளவு நல்லவராக இருந்தபோதும், ‘எப்பொழுது அவர் எனக்கு என்ன நன்மை செய்தார்?” என்றே கூறுவர்.

இப்படிப்பட்ட மக்களை தேவன் தமது கரங்களில் தாங்குவது அவருக்கு சோதனையாகவே இருக்கும். நமக்கு அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார். நமது தேவைகளை மட்டுமின்றி, தமது குமாரன் இப்புவியில் இருந்தபோது அனுபவித்திராத வசதிகளையும் நமக்குத் தந்திருக்கிறார். நல்ல உணவும், தூய்மான நீரும், வசதியான வீடுகளும், மிகுதியான ஆடைகளும், நமக்கு உள்ளன. நாம் காண்கிறோம், கேட்கிறோம், பசி உண்டாகிறது, நினைவுகூரும் சக்தி இருக்கிறது. இன்னும் பல இரக்கங்களைப் பெற்றிருக்கிறோம். எல்லாம் நமது உரிமை என்று நினைக்கிறோம். அவர் நம்மைக் காத்து வருகிறார். வழிநடத்துகிறார், தாங்குகிறார், எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். நம்மிடத்திலிருந்து என்ன நன்றியைப் பெறுகிறார்?. அவ்வப்போது நாம் கூறும் குறை கூறுதல் அல்லாமல் வெறொன்றையும் அவர் கேட்கிறதில்லை.

சிகாகோ நகரில் எனக்கொரு நண்பர் இருந்தார். ‘நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? என்று கேட்கும்போதெல்லாம் ‘குறை கூறுவது பாவம்”என்றே பதில் கூறுவார். முணுமுணுக்கும்படி எண்ணம் கொள்ளும்போதெல்லாம் அவர் கூறும் பதிலே என் நினைவுக்கு வரும். குறை சொல்லுவது பாவம். குறை கூறவதற்கு மாற்று நன்றிபகர்தலாகும். கர்த்தர் நமக்குச் செய்த சகல நன்மைகளையும் நாம் நினைவுகூர்ந்தால் குறைசொல்வதற்கு ஒரு காரணமுமில்லை என்று உணர்வோம்.

15. Mai

»Murret auch nicht, gleichwie etliche von ihnen murrten und von dem Verderber umgebracht wurden.« 1. Korinther 10,10

Die Israeliten waren chronische Nörgler auf ihrem Zug durch die Wüste. Sie klagten über das Wasser. Sie klagten über die Nahrung. Sie klagten über ihre Führer. Als Gott ihnen Manna aus dem Himmel gab, wurden sie dessen bald überdrüssig und gelüsteten nach dem Lauch, den Zwiebeln und dem Knoblauch Ägyptens. Obwohl es in der Wüste keine Supermärkte und keine Schuhgeschäfte gab, versorgte Gott sie 40 Jahre lang ununterbrochen mit Lebensmitteln und mit Schuhen, die nie erneuert werden brauchten. Doch anstatt für diese wunderbare Fürsorge dankbar zu sein, beklagten sich die Israeliten ohne Unterlass.

Die Zeiten haben sich nicht geändert. Die Menschen heute beklagen sich über das Wetter: Es ist entweder zu heiß oder zu kalt, zu feucht oder zu trocken. Sie beklagen sich über das Essen, wie zum Beispiel über klumpige Soße oder angebrannten Toast. Sie beklagen sich über ihre Arbeit und ihr Gehalt, und über ihre Arbeitslosigkeit, wenn sie beides nicht mehr haben. Sie klagen über die Regierung und ihre Steuern und fordern gleichzeitig ständig zunehmende Vergünstigungen und Dienstleistungen. Sie ärgern sich über andere Menschen, über ihr Auto, über die Bedienung
im Restaurant. Sie beklagen sich über Kleinigkeiten und möchten gerne größer, schlanker, hübscher sein. Egal wie gütig Gott zu ihnen gewesen ist, sie sagen: »Was hat Er denn in letzter Zeit für mich getan?«

Wie kann Gott Menschen wie uns ertragen? Er ist so gut zu uns und hat uns nicht nur mit den lebensnotwendigen Dingen versehen, sondern auch mit Annehmlichkeiten, deren Sich Sein Sohn nicht erfreuen konnte, als Er hier auf der Erde war. Wir haben gutes Essen, reines Wasser, große Häuser, Kleidung im Überfluss. Wir haben Sehfähigkeit, Gehör, Appetit, Gedächtnis und so viele andere Gaben, die wir für selbstverständlich halten. Er hat uns bisher bewahrt, geführt und versorgt. Und was noch herrlicher ist: Er hat uns auch ewiges Leben durch den Glauben an Seinen
Sohn Jesus Christus geschenkt. Und was für Dank bekommt Er dafür? Meist hört Er nichts von uns als endloses Jammern und Stöhnen.

Ich hatte vor Jahren in Chicago einen Freund, der eine gute Antwort wusste auf die Frage: »Wie geht’s dir?« Er entgegnete immer: »Es wäre Sünde, mich zu beklagen.« Ich muss oft daran denken, wenn ich in der Versuchung stehe, zu murren. Es ist eine Sünde, sich zu beklagen. Das Gegenmittel gegen Klagen ist Danken. Wenn wir an all das denken, was der Herr für uns getan hat, dann wird uns klar, dass wir absolut keinen Grund haben, uns zu beklagen.