June

குணசாலியான மனைவி

June 20

“Who can find a virtuous woman? for her price is far above rubies.” (Prov. 31:10)

What are some of the things that a Christian husband desires in his wife? The following is a suggested list. Hopefully no one will be so immature as to expect all this in any one woman.

First of all, she should be a godly woman-one who is not only born again but spiritually minded as well. This woman puts Christ first in her life. She is a woman of prayer and active in the service of the Lord. A woman of Christian character and integrity whom he can respect spiritually; and who respects him in return.

She is a woman who takes her God-given place of subjection and who actively assists her husband to take his proper place as head…She is faithful to her marriage vows— She is a good wife and mother of her children— She is personally neat and attractive, one who does not go to extremes in dress, one who is feminine and ladylike but not prissy.

This ideal wife is a good homemaker, who keeps the place neat and clean and who manages its affairs efficiently. She serves good meals on a regular schedule and loves to show hospitality to others… It goes without saying that she should share the same goals and interests as her husband.

When differences arise, she is willing to bring her problems to the surface rather than clam up, pout or sulk. She is willing to negotiate differences and is able to apologize and confess if necessary.

She is not a gossip nor a busybody, meddling in other people’s affairs. She has a meek and a quiet spirit and is not contentious or a nagger.

This wife cooperates in living within the family income. She is not obsessed with a desire for fancy things, and does not strive to keep up with the Joneses.

She is willing to accept adversity, if necessary.

She renders her husband his conjugal rights joyfully, not passively nor disinterestedly.

She has a good temperament, is a good sport, is not a social climber, and is entirely trustworthy.

Husbands should be grateful when they find a majority of these traits in their wives, and wives can use these as a checklist to help them climb higher.

யூன் 20

குணசாலியான ஸ்திரியைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. நீதிமொழிகள் 31:10

குணசாலியான மனைவி

ஒரு கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியினிடத்தில் காண வேண்டுமென்று விரும்புகிறவை எவை? கீழே ஒரு பட்டியல் ஆலோசனையாகத் தரப்படுகிறது. ஒரு பெண்ணிடம் இக்குண நலன்கள் அனைத்தையும் எதிர்பார்க்கிற அளவுக்கு எவனும் வளர்ச்சியற்றவனாக இருக்கமாட்டான் என்றே நம்புகிறேன்.

முதலாவதாக, தேவபக்தியுள்ளவளாக அவள் இருக்கிறாள். அதாவது, மறுபிறப்பு அடைந்தவளாக மட்டுமன்றி ஆவிக்குரிய உள்ளம் படைத்தவளாக அவள் காணப்படுகிறாள். அந்தப் பெண் கிறிஸ்துவுக்குத் தன் வாழ்வில் முதலிடம் கொடுக்கிறாள். ஜெப வீராங்கனையாகவும், கர்த்தருக்கென்று திறம்பட உழைக்கிறவளாகவும் இருக்கிறாள். கிறிஸ்தவக் குணநலம் மிக்க அப்பெண் உண்மையுள்ளவளாயிருந்து, ஆவிக்குரிய நிலையில் கணவனின் மதிப்பைப் பெற்றவளாயிருக்கிறாள். மேலும் அவனை அவள் மதிக்கக் கூடியவளாயிருக்கிறாள்.

தேவன் அளித்துள்ள கீழ்படிதலுள்ள நிலையை எடுத்துக் கொண்டவளாக, தன்னுடைய கணவன் தலைமைப் பதவியை வகிப்பதற்கு உறுதுணை புரிகிறாள். திருமண ஒப்பந்தத்தில் உரைத்த வாக்குகளுக்கு உண்மையுள்ளவளாயிருக்கிறாள். நல்ல மனைவியாகவும், தன் பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும் இருக்கிறாள். தன்னைத் தூய்மையாகவும், நேர்த்தியாகவும், வைத்துக்கொள்கிறாள். அளவுக்குமீறி ஆடம்பரமாக ஆடையணியமாட்டாள். பெண்மைக்குரிய இலக்கணமாகக் காணும் அவள், அளவுக்கு மீறி நாணி வெட்கப்படமாட்டாள்.

குணசாலியான பெண் வீட்டைப் பராமரிக்கிறாள். தன் வீட்டைத் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்கிறாள். வீட்டைத் திறம்படப் பராமரிக்கிற அப்பெண், சரியான நேரத்தில் உணவளிக்கிறாள். விருந்தோம்பலில் சிறந்து விளங்குகிறாள். தனது கணவன் கொண்டிருக்கும் நோக்கங்களிலும், விருப்பங்களிலும் தானும் பகிர்ந்து கொள்கிறாள்.

கருத்து வேறுபாடுகள் உண்டாகிறபோது, முகத்தைச் சுளித்து, உதட்டைப் பிதுக்கி, சிடுசிடுப்பாய் இராமல், பிரச்சனைகளை ஆராய்ந்து, தவறுகளுக்காக வருந்தி, அறிக்கை செய்யவும் விருப்பத்துடன் முன்வருகிறாள்.

அவள் புறம்பேசுவதில்லை, பிறருடைய விவகாரங்களில் தலையிடுவதும் இல்லை. சாந்தமும் அமைதியுள்ள ஆவியை உடையவளாக இருக்கிறாள். அவள் வாக்குவாதம் செய்வதில்லை. தொடர்ந்து குற்றம் கண்டுபிடித்துத் தொல்லை கொடுப்பதுமில்லை. வருமானத்துக்குள்ளாகக் குடும்பத்தை நடத்தக் கூடியவளாக இருக்கிறாள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆசை கொள்வதில்லை. மற்றவர்களோடு போட்டியிடுவதில்லை. தேவைப்படும் வேளைகளில் இன்னல்களைப் பொறுத்துக்கொள்கிறாள்.

கணவனோடு தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியோடு ஈடுபடுகிறாள். விருப்பமற்ற முறையிலோ, ஈடுபாடு அற்றி முறையிலோ நடந்துகொள்வதில்லை.
நற்சுபாவத்துடன் நடந்து கொள்கிறாள். எதையும் நல்லதாக ஏற்றுக்கொள்கிறாள். சமுதாயத்தில் பெயர்வாங்கவேண்டுமென்று அவள் நினைக்கிறதில்லை. முற்றிலும் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவளாக இருக்கிறாள்.

தங்களுடைய மனைவிகளில் இப்படிப்பட்ட நற்குணங்களில் பெரும்பான்மையானவற்றைக் காண்கிற கணவர்கள் நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும். உயர்ந்த நிலையை அடைவதற்குப் பெண்கள் இப்பட்டியலோடு தங்களைச் சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.

20. Juni

»Eine tüchtige Frau – wer findet sie? Weit über Korallen geht ihr Wert.« Sprüche 31,10

Was sind Eigenschaften, die ein christlicher Ehemann bei seiner Frau wünscht? Im Folgenden der Versuch einer Auflistung. Hoffentlich ist jedoch niemand so unreif und hofft, alle diese Züge bei einer einzigen Frau zu finden.

Zuallererst sollte sie eine gottesfürchtige Frau sein – eine Frau, die nicht nur wiedergeboren, sondern auch geistlich gesinnt ist. Sie setzt Christus an die erste Stelle in ihrem Leben. Sie ist eine Frau des Gebets und aktiv im Dienst für den Herrn. Eine Frau mit christlicher Charakterstärke und Rechtschaffenheit, die ihr Mann geistlich respektieren kann, und die wiederum ihn respektiert.

Sie ist eine Frau, die ihre gottgegebene Stellung der Unterwürfigkeit einnimmt und die ihrem Gatten aktiv hilft, seiner Stellung als Haupt zu entsprechen … Sie ist ihrem Ehegelübde treu … Sie ist eine gute Frau und Mutter ihrer Kinder … Sie ist in ihrer Erscheinung gepflegt und anziehend, vermeidet aber modische Extreme, ist feminin und damenhaft, aber nicht extravagant.

Diese ideale Frau ist eine gute Hausfrau, welche die Wohnung ordentlich und sauber hält und die Haushaltsführung gewandt und sicher bewältigt. Sie versorgt die Familie mit gutem Essen und geregelten Zeiten und erweist anderen gern Gastfreundschaft … Es braucht nicht eigens erwähnt zu werden, dass sie die Ziele und Interessen ihres Mannes teilen sollte.

Wenn es Schwierigkeiten gibt, ist sie bereit, ihre Probleme offen zu legen, anstatt sich in Schweigen zu hüllen, zu schmollen und eingeschnappt zu sein. Sie ist bereit, über unterschiedliche Auffassungen zu reden, und ist auch in der Lage, sich zu entschuldigen oder Sünde zu bekennen, wo es nötig ist.

Sie ist keine neugierige Klatschtante, die sich in anderer Leute Angelegenheiten einmischt. Sie hat einen sanften und stillen Geist und ist nicht nörglerisch und zänkisch.

Sie trägt das Ihre dazu bei, dass die Familie mit den vorhandenen Finanzen auskommt. Sie ist nicht besessen von der Sucht nach ausgefallenen Dingen und will nicht um jeden Preis mit den Nachbarn Schritt halten.

Sie ist auch bereit, Unglück und Not zu ertragen, wenn es nötig sein sollte. Sie erfüllt die ehelichen Pflichten ihrem Mann gegenüber freudig, nicht passiv
oder gleichgültig.

Sie hat ein fröhliches Temperament, ist ein guter Kamerad, nicht auf gesellschaftlichen Aufstieg bedacht und absolut vertrauenswürdig.

Ehemänner sollten dankbar sein, wenn sie eine Mehrzahl dieser Züge bei ihrer Frau vorfinden, und Frauen können dies als eine Checkliste verwenden, um mehr und mehr dem Frauenbild nach Gottes Gedanken zu entsprechen.