June

தேவைக்கேற்ற தேற்றரவு

June 19

“…as thy days, so shall thy strength be.” (Deut. 33:25)

God promises to give His people strength according to their needs at any particular time. He does not promise it in advance of the need, but when the crisis comes, the grace is there to meet it.

Perhaps you are called to go through a patch of sickness and suffering. If you knew in advance how great the testing would be, you would say, “I know I could never bear it.” But all the divine support comes with the testing, to your amazement and everyone else’s.

We live in fear of the time when our loved ones will be called away by death. We are sure our little world will fall apart and that we ourselves will be utterly unable to cope. But it isn’t that way at all. We are conscious of the Lord’s presence and power in a way we never knew before.

Many of us have close scrapes with death in accidents and situations of extreme peril. We find our hearts flooded with peace when ordinarily we would be in panic. We know it is the Lord, coming alongside to help.

As we read the stories of those who have heroically laid down their lives for the sake of Christ, we realize afresh that God gives “martyr grace for martyr days.” Their cool courage was beyond human bravery. Their bold witness was obviously empowered from on high.

Now it should be obvious that worrying in advance of the need produces nothing but ulcers. The fact is that God doesn’t give the grace and strength until they are needed. As D. W. Whittle said,

I have nothing to do with tomorrow,
The Savior will make that His care;
Its grace and its strength I can’t borrow,
Then why should I borrow its care?

Annie Johnson Flint’s memorable lines are ever apropos.

He giveth more grace when the burdens grow greater;
He sendeth more strength when the labors increase.
To added affliction He addeth His mercy;
To multiplied trials, His multiplied peace.

When we have exhausted our store of endurance,
When our strength has failed ere the day is half done,
When we reach the end of our hoarded resources,
Our Father’s full giving is only begun.

யூன் 19

உன் நாட்களுக்குத் தக்கதாய் உன் பெலனும் இருக்கும். உபா.33:25.

தேவைக்கேற்ற தேற்றரவு

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தேவையான வலிமையைத் தம் மக்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். தேவைக்கு முன்னதாகவே அதைத் தருவேன் என்று அவர் உரைக்கவில்லை. நெருக்கடியான நிலை உண்டாகும்போது, அதைச் சந்திக்க அவருடைய கிருபை அருளப்படும்.

ஒருவேளை நீங்கள் நோயையோ, பாடுகளையோ சிறிது காலம் அனுபவிப்பவர்களாயிருப்பீர்கள். அதைக் குறித்து உங்களுக்கு முன்னேதாகவே சொல்லப்படுமாயின், அது உங்களுக்கு பெரும் சோதனையாகக் காணப்படும். ‘இதனை என்னால் தாங்க முடியாது என்பதை அறிவேன்” என்றுரைப்பீர்கள். ஆயின், தேவனுடைய ஆதரவு, நீங்களும் பிறரும் வியக்கதக்க வகையில் சோதனையின் காலத்தில் வரும்.

நமக்கு அன்பானவர்கள் சாவில் நம்மை விட்டு பிரியும் வேளைகளில் அச்சம் நம்மை சூழ்ந்து கொள்கிறது. நமது சுற்றத்தார் இவ்வாறு குறைந்து போவதால், நம்மால் சூழ்நிலைகளை எளிதில் சமாளிக்கமுடியாது என்று நினைக்கிறோம். ஆனால், அவ்வாறு தொடர்ந்து நடப்பதில்லை. தேவனுடைய சமுகம் நம்மோடு இருக்கிறது என்பதையும், இதுவரை இல்லாதபடி அவருடைய வல்லமை நம்மைத் தாங்குவதையும் நாம் உள்ளத்தில் உணர்வோம்.

சில வேளைகளில் விபத்துக்கள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் அகப்பட்டு அவலநிலைக்கு ஆளாகிவிடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சாதாரணமாகப் பேரச்சமும் திகிலும் உண்டாகும். ஆனால் நமது இருதயங்களில் சமாதானம் பொங்கிவழிவதை அவ்வேளைகளில் நம்மால் உணரமுடியும். நமது கர்த்தரே நமக்கு உதவி செய்ய நம்மோடு வருகிறார்.

கிறிஸ்துவுக்காக வீரச்செயல்களை ஆற்றி மரணத்தைத் தழுவிய மனிதர்களைக் குறித்துப் படிக்கும்போது, கர்த்தர் தாமே ‘தியாகிகளுக்குத் தேவையான கிருபையை தியாகநாளிலே தந்தருளுவார்” என்பதைப் புதிய வகையில் அறிவோம். மரணத் தறுவாயில் அவர்கள் வெளிப்படுத்தும் மன அமைதி மனிதனுடைய துணிச்சலுக்கு அப்பாற்பட்டதாயிருக்கும்.

தேவைக்கு முன்னதாகவே கவலைப்படுவது குடல்புண்ணைத்தான் உண்டாக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. தேவை உண்டாவதற்கு முன்னதாகவே தேவன் தமது கிருபையை அருளுவதில்லை என்பதே உண்மை. ‘நாளைய தினத்தைக் குறித்து நான் ஒன்றும் செய்ய இயலாது. எனது இரட்சகரே அதைப் பார்த்துக் கொள்வார். அதற்குத் தேவையான கிருபையையும், பெலத்தையும் என்னால் கடன்பெற முடியாது. ஆகவே அதன் கவலையை நான் ஏன் கடனாகப் பெறவேண்டும்?” என்று D. W. வைட்டில் என்பார் கூறியுள்ளார்.

‘சுமை கூடும்போது அதிக கிருபையைத் தருகிறார், உழைப்பு மிகும் வேளையில் பலத்தைத் தருகிறார். துன்பம் பெருகும் காலத்தில் இரக்கத்தைப் பொழிகிறார். சோதனைகள் தாக்கும் நேரங்களில் மன அமைதியைக் கொடுக்கிறார். தாங்கும் சக்தியை நாம் இழக்கும் வேளையில், நாளின் வேலையை முடிக்கும் முன்னர் பலத்தை இழந்து தவிக்கும் போது, சேமிப்பு தீர்ந்து ஒன்றுமில்லாத நிலை ஏற்படும் தருணங்களில் நமது திருத்தந்தை தமது செல்வத்திலிருந்து தரத் தொடங்குகிறார்” என்று ஜான்சன் பிலின்ட் என்பார் தகுதியான சொற்களால் எழுதியுள்ளவை மறக்க இயலாதவை.

19. Juni

»… und wie deine Tage, so deine Kraft.« 5. Mose 33,25

Gott hat verheißen, den Seinen Kraft zu geben, und zwar entsprechend ihrem Bedürfnis und zur entsprechenden Zeit. Er verheißt sie nicht, bevor die Not da ist, aber wenn die Schwierigkeiten kommen, ist Seine Gnade da zur rechtzeitigen Hilfe.

Vielleicht sind wir berufen, durch Krankheit und Leiden zu gehen. Wenn wir von vornherein wüssten, wie schwer die Prüfung wird, würden wir sagen: »Ich weiß, dass ich sie niemals ertragen kann.« Aber alle göttliche Hilfe erfahren wir während und in der Prüfung, zu unserem und aller anderen Erstaunen.

Wir leben in Angst vor der Zeit, wenn unsere Geliebten einmal durch den Tod heimgerufen werden. Wir sind gewiss, dass unsere kleine Welt zerbrechen wird und wir niemals damit zurechtkommen werden. Aber wenn es dann so weit kommt, ist alles ganz anders. Wir sind uns dann der Gegenwart und der Kraft des Herrn in einer Weise bewusst, die wir vorher nie gekannt haben.

Viele von uns kommen dem Tod nahe bei Unfällen und anderen extremen Gefahrensituationen. Doch stellen wir fest, dass unser Herz von Frieden erfüllt ist, wenn es normalerweise voll panischer Angst wäre. Wir wissen: Es ist der Herr, der uns zu Hilfe kommt.

Wenn wir die Geschichten derer lesen, die ihr Leben heldenhaft um Christi willen hingegeben haben, dann wird uns von neuem bewusst, dass Gott »Märtyrergnade für Märtyrertage gibt«. Ihr unerschütterlicher Mut überstieg jede menschliche Tapferkeit. Ihr kühnes Zeugnis erhielt seine Kraft ganz offensichtlich vom Himmel.

Es sollte auch deutlich sein, dass Sorgen im Blick auf die Zukunft zu nichts anderem führen als zu Magengeschwüren. Denn Gott stellt Seine Gnade und Kraft erst dann zur Verfügung, wenn sie benötigt werden. D.W. Whittle schrieb:

Ich mache mir keine Gedanken um morgen,
Der Heiland wird sich darum kümmern;
Wenn ich Seine Gnade und Kraft nicht borgen kann,
Warum sollte ich die Sorgen dann borgen?

Annie Johnson Flints unvergessliche Zeilen sind immer angebracht:

Er gibt mehr Gnade, wenn die Lasten sich vergrößern,
Er gibt mehr Kraft, wenn die Mühe sich vermehrt.
Zu zusätzlichem Leiden gibt Er zusätzlich Erbarmen;
Zu vermehrter Prüfung Seinen vermehrten Frieden.

Wenn unsere Tragfähigkeit erschöpft ist,
Wenn unsere Kraft versagt, ehe der Tag halb vorbei ist,
Wenn unser Vorrat an Hilfsmitteln zu Ende geht,
Dann hat das volle Geben unseres Vaters gerade erst begonnen.