June

தேவனின் பண்புகள்

June 17

“Canst thou by searching find out God? Canst thou find out the Almighty unto perfection?.” (Job 11:7)

There are other attributes of God that must be mentioned, even if only briefly. Contemplation of these divine perfections lifts the soul from earth to heaven, from the petty to the sublime.

· God is righteous, that is, He is just, equitable and fair in all His dealings. He is “a just God and a Saviour’’ (Isa. 45:21).

· God is incomprehensible (Job 11:7,8). He is too great to be understood by the human mind. As Stephen Charnock said, “It is visible that God is. It is invisible what He is.” And Richard Baxter said, “You may know God, but not comprehend Him.”

· God is eternal—without beginning or end (Psa. 90:1-4). Eternity is His lifetime.

· God is good (Nahum 1:7). He is “good to all: and his tender mercies are over all his works” (Psa. 145:9).

· God is infinite (1 Kings 8:27). He has no limits or boundaries. “His greatness is beyond calculation, measurement or human imagination.”

· God is self-existent (Ex. 3:14). He did not receive His existence from any outside source. He is the Fountain of His own life as well as of all other life.

· God is self-sufficient, that is, He has within the Trinity all that He could ever need.

· God is transcendent. He is far above the universe and time, and is separate from the material creation.

A final attribute of God is His foreknowledge. Christians are divided on whether God’s foreknowledge determines who will be saved, or whether it is merely a prior knowledge of who will trust the Savior. Judging from Romans 8:29, I believe that God sovereignly selected certain individuals and decreed that all whom He thus foreknew would eventually be glorified.

And so we come to the end of our consideration of the attributes of God. But it is a subject that in another sense has no end. God is so great, so majestic, so awesome that we only see through a glass darkly. Because He is infinite, He never can be fully known by finite minds. Throughout eternity we will dwell on the wonders of His Person and will still have to say, “The half has not been told.”

யூன் 17

தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? யோபு 11:7.

தேவனின் பண்புகள்

தேவனுடைய ஏனைய தனிச்சிறப்புவாய்ந்த பண்புகளைப்பற்றிச் சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். இந்தத் தெய்வீக இயல்புகளைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை நம்மை இப்புவியினின்று பரலோகிற்கு உயர்த்துகிறது. ஆகவே முக்கியமற்ற எண்ணங்களை விடுத்து, தெய்வீக எண்ணங்களை அடைவோமாக.

தேவன் நீதிபரர், அதாவது, அவருடைய செயல்கள் யாவும் நீதியாகவும் நடுநிலையாகவும், நேர்மையாகவும் இருக்கும். ‘நீதிபரரும் இரட்சகருமாகிய கர்த்தர்” (ஏசாயா 45:21). மனித உள்ளத்தினால் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அவர் மிகப்பெரியவராக இருக்கிறார். ‘தேவன் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. அவர் எப்படி இருக்கிறார் என்பது நமக்குத் தெரியவில்லை” என்று ஸ்டீபன் சார்னாக் என்பார் கூறியுள்ளார். ‘நீங்கள் தேவனை அறிவீர்கள், ஆனால் அவரைப் புரிந்து கொள்ளமுடியாது.” என ரிட்சர்ட் பாக்ஸ்டர் கூறியுள்ளார். தேவன் தொடக்கமும் முடிவும் அற்றவர். (சங்.90:1-4). நித்திய காலமாய் அவர் ஜீவிக்கிறார்.

கர்த்தர் நல்லவர் (நாகூம் 1:7). ‘கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுள்ளது.” (சங்.145:9). தேவன் எல்லைக்கு அப்பாற்பட்டவர் (1.இராஜா.8:27). ‘அவர் கணக்கிடப்படுவதற்கு அப்பாற்பட்டவர், அவரை அளக்க முடியாது. மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட அவர், எந்தவொரு எல்லைக்கும் கட்டுப்பட்டவரல்லர்.”

அவர் தாமாகவே இருக்கிறார் (யாத்.3:14). தாமாக இருப்பதற்கு வெளியிலிருந்து எந்த ஆதாரத்தையும் அவர் சார்ந்திருப்பதில்லை. நமது வாழ்வின் ஜீவ ஊற்றாகவும் அவர் இருக்கிறார். மற்றவர்களுடைய வாழ்வின் ஜீவ ஊற்றாகவும் அவர் இருக்கிறார். அவர் தன்னிறைவு உடையவராயிருக்கிறார். அவருடைய திரியேகத்தில் அவருடைய தேவைகள் யாவும் பூர்த்தி செய்யப்படுகின்றன. மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் தேவன். இப்பிரபஞ்சத்திற்கும், காலத்திற்கும், படைக்கப்பட்டவைகளுக்கும் அவர் அப்பாற்பட்டவர்.

கடைசியாக, அவருடைய முன்னறிவு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். யாரெல்லாம் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை அவருடைய முன்னறிவு தீர்மானிக்கிறது என்று கிறிஸ்தவர்களின் ஒருசாரர் கூறுகின்றனர். கிறிஸ்துவை எவரெல்லாம் இரட்சகராக நம்புவார்கள் என்பதை அவர் முன்னறிந்திருக்கிறார் என்று பிறிதொரு சாரார் கூறுகின்றனர். ரோமர் 8:12ன் படி, குறிப்பிட்ட மனிதர்களை தமது இறையாண்மையின் மூலம் தெரிந்தெடுத்து, அவ்வாறு அவர் முன்னறிந்தவர்களை, முடிவில் மகிமைப்படுவதற்கென்று நியமித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

தேவனுடைய தனிச்சிறப்பு வாய்ந்த இயல்புகளைப் பற்றிய பாடத்தின் முடிவுக்கு வந்திருக்கிறோம்.ஆ னால், இப்பாடத்தைக் கற்று முடிப்பது என்பது இயலாத ஒன்றாகும். அவர் அவ்வளவு பெரியவர், மகத்துவமானவர், பயங்கரமானவர்,. அவரை மங்கலான கண்ணாடியின் ஊடாகக் காண்கிறவர்களாகவே நாம் இருக்கிறோம். எல்லைகளைக் கடந்தவராக இருக்கிற அவரை, எல்லைக்குட்பட்ட நம்மால் முற்றிலும் அறிந்து கொள்ளமுடியாது. நித்திய காலமுழுவதும் அவரது ஆள்தத்துவத்தின் அதிசயங்களைச் சிந்தித்தும், ‘இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை” என்றே சொல்லுவோம்.

17. Juni

»Kannst du die Tiefe Gottes erreichen oder das Wesen des Allmächtigen ergründen? « Hiob 11,7

Es gibt andere Eigenschaften Gottes, die der Erwähnung bedürfen, wenn auch nur kurz. Das Nachdenken über diese göttlichen Tugenden erhebt die Seele von der Erde zum Himmel, vom Alltäglichen zum Erhabenen.

Gott ist gerecht im Sinn von rechtschaffen, d.h. er ist gerade und unparteiisch in all Seinem Handeln. Er ist ein »gerechter und rettender Gott« (Jesaja 45,21).

Gott ist unausforschlich (Hiob 11,7.8). Er ist zu groß, um vom menschlichen Geist verstanden werden zu können. Stephen Charnock (1628-1680, englischer puritanischer Prediger und Theologe) sagt: »Es ist sichtbar, dass Gott ist. Es ist unsichtbar, was Er ist.« Und Richard Baxter (1615-1691) sagt: »Wir können Gott erkennen, Ihn aber nicht begreifen.«

Gott ist ewig – ohne Anfang und Ende (Psalm 90,1-4). Sein Leben währt in Ewigkeit.

Gott ist gütig (Nahum 1,7). Er ist »gut gegen alle, und seine Erbarmungen sind über alle seine Werke« (Psalm 145,9).

Gott ist unendlich (1. Könige 8,27). Er kennt keine Schranken oder Grenzen.

»Seine Größe übersteigt jede Berechenbarkeit, Messbarkeit oder menschliche Vorstellungskraft.«

Gott ist selbstexistent (2. Mose 3,14). Er empfing Seine Existenz nicht von einer außer Ihm liegenden Quelle. Er ist der Ursprung alles Lebens. Gott ist selbstgenügsam, d.h. innerhalb der Dreieinheit hat Er alles, wessen Er bedarf.

Gott ist transzendent. Er ist weit erhaben über das Universum und die Zeit und existiert unabhängig von und außerhalb der materiellen Schöpfung. Eine weitere Eigenschaft Gottes schließlich ist Seine Vorkenntnis. Die Christen sind sich uneins darüber, ob Gottes Vorkenntnis bestimmt, wer gerettet werden wird, oder ob es nur ein Vorauswissen ist, wer einmal an den Herrn glauben wird. Aus Römer 8,29 glaube ich zu erkennen, dass Gott bestimmte Einzelpersonen auserwählt und bestimmt hat, dass alle, die Er auf diese Weise zuvorerkannt hat, schließlich einmal verherrlicht werden.

Und so kommen wir zum Ende unseres gemeinsamen Nachdenkens über die Eigenschaften Gottes. Aber es ist ein Thema, das in gewissem Sinn kein Ende hat. Gott ist so groß, so majestätisch, so Ehrfurcht gebietend, dass wir nur »durch einen Spiegel, undeutlich« erkennen. Weil er unendlich ist, kann Er von Wesen mit endlichem Geist niemals vollkommen erkannt werden. Die Ewigkeit hindurch werden wir uns mit den Wundern Seiner Person beschäftigen und dennoch immer wieder sagen müssen: »Nicht die Hälfte ist mir berichtet worden.«