July

மன்னிக்கிறதற்கு தயை பெருத்த தேவன்

July 28

“Let the wicked forsake his way, and the unrighteous man his thoughts: and let him return unto the Lord, and he will have mercy upon him; and to our God, for he will abundantly pardon.” (Isa. 55:7)

The trembling sinner fears that God will not receive him. The penitent backslider doubts that God can ever forget. But our verse reminds us that those who return to the Lord are greeted with bounteous mercy and abundant pardon.

This is illustrated by a story that surfaces periodically over the years—a story in which the details change but the message lives on. It is about a rebellious son who left home, went to New York, lived in sin and shame, finally landed in jail. After four years in prison, he was paroled and desperately wanted to go home. But he was tortured by the fear that his father would not receive him. He couldn’t face the disappointment of being rejected.

Finally he wrote his dad giving no return address. He said that he would be on the train the following Friday. If the family wanted him, they should tie a white handkerchief on the oak tree in the front yard. If he saw no handkerchief as the train passed, he would keep going.

Now he is on the train, sullen and withdrawn, fearing the worst. As it happens, a Christian is sitting beside him. After several unsuccessful tries, the Christian finally gets him to open up and tell his story. They are now fifty miles from his home. The returning prodigal fluctuates between fear and hope. Forty miles. He thinks of the disgrace he has brought on his parents, and how he has broken their hearts. Thirty miles. The wasted years pass before his mind. Twenty miles. Ten miles. Five miles.

At last the house comes into view. He sits there stunned. The oak tree is covered with white strips of cloth, fluttering madly in the breeze. He gets up, brings down his suitcase and prepares to get off at the station.

The tree, of course, speaks of the Cross. With arms outstretched and decked with innumerable promises of pardon, it beckons the repentant sinner to come home. What a welcome to the Fathers house! What unbounded forgiveness when the wanderer returns!

யூலை 28

துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். ஏசாயா 55:7

மன்னிக்கிறதற்கு தயை பெருத்த தேவன்

அச்சத்தின் மிகுதியால் நடுங்குகிற பாவி, தேவன் தன்னை ஏற்கமாட்டார் எனக்கருதிப் பயப்படுகிறான். பின்மாற்றம் அடைந்தவன் தன் பாவத்தை எண்ணி வருந்தினாலும், தேவன் அப்பாவத்தை மறக்கமாட்டார் என்றே ஐயம் கொள்கிறான். ஆயின், தம்மிடத்தில் திரும்பி வருகிற எவனெருவனையும் தமது தாராளமான இரக்கத்தினாலும், ஏராளமான மன்னிப்பினாலும் கர்த்தர் வாழ்த்தி வரவேற்கிறார் என்று இன்றைய வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.

இதனை ஒரு கதையின் வாயிலாக விளக்கலாம். இக்கதை அவ்வப்போது சொல்லப்படும் ஒன்றே. கதையின் பகுதிகளில் சில மாற்றங்கள் காணப்படினும் அதன் செய்தி மாறாதிருக்கிறது. இது ஒரு மகனைப்பற்றிய கதை. அவன் தகப்பனை எதிர்த்து செயல்பட்டான். தன்னுடைய வீட்டை விட்டு ஓடி நியூயார்க் நகரத்திற்குச் சென்றான். பாவத்தில் வாழ்ந்து, மானத்தை இழந்து, கடைசியில் சிறையில் அடைக்கப்பட்டான். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவன் பின்னர் அங்கிருந்து, தலைமறைவாகக் கூடாது என்னும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டான். தனது வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு மேலிட்டது. ஆனால் தனது தகப்பன் தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற எண்ணம் அவன் மனதை வாட்டியது. தான் நிராகரிக்கப்பட்டுவிட்டால் அதனால் ஏற்படும் ஏமாற்றம் தாங்கமுடியாததாக இருக்குமே என எண்ணினான்.

கடைசியில், தனது முகவரியை அளிக்காமல் தனது தந்தைக்கு ஒரு மடல் எழுதினான். அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை தான் இரயிலில் செல்லப் போவதாகவும், தனது வீட்டார் அவனை ஏற்றுக்கொள்ள விரும்பினால் இரயில்பாதை அருகில் இருக்கும் தனது தோட்டத்தில் இருக்கும் கருவாலி மரத்தில் வெள்ளைக் கைக்குட்டையைக் கட்டித் தொங்கவிடுமாறும் தந்தைக்கு மடல் எழுதினான். ஒருவேளை அங்கு வெள்ளைத்துணி தொங்கவில்லையென்றால் தொடர்ந்து இரயிலில் போய் விடுவதாகவும் அம்மடலில் குறிப்பிட்டிருந்தான்.

வெள்ளிக்கிழமை இரயில் பயணம் மேற்கொண்டான். மற்றவர்களுடன் முகங்கொடுத்துப் பேசவில்லை. முகத்தில் துக்கம் பிரதிபலித்தது. நல்லது ஏதும் நிகழாது என்றே எண்ணினான். அவன் அருகில் அமர்ந்திருந்த ஒரு கிறிஸ்தவன் அவனோடு பலமுறை பேச முயற்சி செய்தான். கடைசியில் அவன் தனது வாயைத்திறந்து தனது கதையைக் கூறினான். இன்னும் 50மைல் தொலைவு இருக்கிறது. பயமும், நம்பிக்கையும், அவனுள்ளத்தில் மாறி மாறி வந்தன. 40மைல் தொலைவு. வீட்டிற்கு எதிராகச் செய்த அவமான செயல்கள் அவன் உள்ளத்தை உறுத்தின. தனது பெற்றோரின் உள்ளங்கள் உடைந்துபோகும்படி அவன் பேசிய வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன. 30மைல், 20மைல், 5மைல்.

இன்னும் சிறிது நேரத்தில் அவன் வீடு கண்ணுக்குத் தெரியும். வீட்டைப் பார்த்த அவன் அதிர்ந்து போனான். அந்த கர்வாலி மரம் முழுவதும் வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டிருந்ததது. தென்றலில் அசைந்த வெண்மையான துணி கையசைத்து அவனை வரவேற்பது போலக் காணப்பட்டது. தன் இருக்கையை விட்டு எழுந்து இரயில் நிலையத்தில் இறங்க ஆயுத்தப்பட்டான்.

அந்த மரம் உண்மையாகவே, சிலுவையைக் குறிக்கிறது. தனது கைகளை விரித்து எண்ணிலடங்கா மன்னிப்பின் வாக்குறிதியோடு வீடு திரும்பும்படி மனந்திரும்பிய பாவியை அது அழைக்கிறது. பிதாவின் வீட்டில் கிடைக்கும் வரவேற்பு எத்தனை சிறந்தது!. அலைந்து திரிந்தவன் திரும்புகிறபோது கட்டுக்கடங்கா மன்னிப்பு பாய்ந்து வருகிறது.

நாம் அறிக்கை செய்த பாவத்தை தேவன் மறப்பதோடு “இங்கே தோண்டிப்
பார்க்காதே” என்னும் குறிப்பையும் அதின்மேல் வைக்கிறார். (கூரிடென்பூம்)

28. Juli

»Der Gottlose verlasse seinen Weg und der Mann der Bosheit seine Gedanken! Und er kehre um zu dem Herrn, so wird er sich über ihn erbarmen, und zu unserem Gott, denn er ist reich an Vergebung!« Jesaja 55,7

Der zitternde Sünder fürchtet, dass Gott ihn nicht annehmen wird. Der bußfertige Abgefallene zweifelt daran, dass Gott jemals vergessen kann. Aber unser Vers erinnert uns daran, dass alle die, die zum Herrn umkehren, mit Fülle von Barmherzigkeit und überreicher Vergebung willkommen geheißen werden.

Dies wird durch eine Geschichte illustriert, die man im Lauf der Jahre immer wieder zu hören bekommt – eine Geschichte, in der sich die Details ändern, aber die Botschaft weiterlebt. Es geht um einen rebellischen Sohn, der von zu Hause weglief, nach New York ging und dort in Sünde und Schande lebte und schließlich im Gefängnis landete. Nach vier Jahren wurde er entlassen und wollte unbedingt wieder nach Hause. Aber er wurde von der Angst gequält, dass ihn sein Vater nicht mehr aufnehmen würde. Die Enttäuschung, von der eigenen Familie verworfen zu werden,
glaubte er nicht ertragen zu können.

Schließlich schrieb er seinem Vater einen Brief ohne Absender. Er sagte, dass er am folgenden Freitag im Zug sitzen würde. Wenn ihn die Familie noch haben wollte, sollten sie ein weißes Taschentuch an die Eiche vor dem Haus binden. Wenn er beim Vorüberfahren des Zugs kein Taschentuch sehen würde, würde er einfach weiterfahren.

Er sitzt nun im Zug, düster und in sich zurückgezogen, voll der schlimmsten Befürchtungen. Zufällig sitzt ein Christ neben ihm. Nach verschiedenen vergeblichen Versuchen bringt ihn der Christ schließlich dazu, sich zu öffnen und seine Geschichte zu erzählen. Es sind noch fünfzig Meilen bis nach Hause. Der zurückkehrende verlorene Sohn schwankt zwischen Hoffnung und Angst. Vierzig Meilen. Er denkt an die Schande, die er über seine Eltern gebracht hat, und wie er ihre Herzen gebrochen hat. Dreißig Meilen. Die vergeudeten Jahre ziehen an ihm vorüber. Zwanzig
Meilen. Zehn Meilen. Fünf Meilen.

Endlich kommt das Haus in Sicht. Und er sitzt am Fenster – überwältigt. Die ganze Eiche ist übersät mit weißen Stoffstreifen, die fröhlich im Wind flattern! Er steht auf, nimmt seinen Koffer und macht sich zum Aussteigen bereit.

Der Baum spricht natürlich vom Kreuz. Mit ausgestreckten Armen und übersät mit unzähligen Verheißungen der Vergebung lädt es den bußfertigen Sünder ein, nach Hause zu kommen. Was für ein Willkommen im Haus des Vaters! Welche überreiche Vergebung, wenn der Wanderer zurückkehrt!