July

செயல் அற்ற மந்தமான செவி

July 27

“And, lo, thou art unto them as a very lovely song of one that hath a pleasant voice, and can play well on an instrument: for they hear thy words, but they do them not.” (Ez.33:32)

One of the ironies of declaring the word of the Lord is that people are often intrigued with the speaker but not with the message that requires action on their part.

This is true with public preaching. The people admire the preacher. They remember his jokes and his illustrations. They hang on his enunciation. Like the woman who said, “I could almost weep every time my minister says that blessed word ‘Mesopotamia.’” But they are paralyzed as far as obedience is concerned. They are immunized against action. They are anesthetized by the pleasant voice.

This is a familiar syndrome to those who carry on a counseling ministry. There are some people who get a secret satisfaction out of being counseled. They thrive on being the center of attention for that brief hour or so. They enjoy the fellowship of the counselor so much that they become chronic counselees.

Presumably they have come to get advice. But they don’t really want advice. Their minds are already made up. They know what they want to do. If the counselor’s advice agrees with their own desire, then they are fortified. If not, they will reject his advice and continue on in their stubborn way.

King Herod belonged to this class of dilettantes. He used to enjoy listening to John the Baptist (Mk. 6:20) but he was a superficial dabbler. He had no intention of letting the message change his life.

Erwin Lutzer writes, “I’ve discovered that the most frustrating problem in helping those who come for counsel is simply that most people do not want to change. Of course, they are prepared to make minor adjustments – particularly if their behavior is getting them into trouble. But most of them are comfortable with their sin as long as it doesn’t get out of hand. And often they’d prefer to have God keep His activity in their lives to a minimum.”

Some counselors have developed a stratagem to bridge the gap between hearing and doing. They give the counselee a specific assignment – something that he must do before he appears for another session. This tends to eliminate those who are not serious. It prevents wasting time for them both.

It is a serious thing to reach the stage in life where we can hear God’s Word and not be moved by it. We must pray for continued sensitivity to the voice of the Lord and a readiness to perform whatever He says.

யூலை 27

இதோ நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுடையவன். பாடும் இனிமையான பாட்டுக்கு சமானமாயிருக்கிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள். எசேக்கியேல் 33:32.

செயல் அற்ற மந்தமான செவி

கர்த்தருடைய செய்தியைக் கேட்ப்பவர்கள், தாங்கள் கேட்ட செய்திக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வதற்கு மாறாக, அச்செய்தியை வழங்கினவரைக் குறித்து சில கருத்துக்களைக் கூறுகின்றனர். பொரும்பாலும் இதுவே பிரசங்கங்களால் ஏற்படும் விளைவாக இருக்கிறது.

வெளிப்படையாய்ப் பிரசங்கம் செய்வதில் இவ்வுண்மை காணப்படுகிறது. சொற்பொழிவாற்றியவர்களைக் கண்டு மக்கள் வியந்து பாராட்டுகின்றனர். அவர்கள் கூறிய நகைசுவைகளையும், எடுத்துக்காட்டுக்களையும் மறப்பதில்லை. அவர்கள் கூறும் விளக்கங்களைப் பற்றிக் கொள்வார்கள். ஆனால் அச்செய்திக்கு ஏற்றதான கீழ்படிதலைச் செயலாற்றுவார் இல்லை. செயலாற்றக் கூடாதபடி அவர்கள் கடினப்பட்டு இருப்பார்கள். இன்பமான சொற்களில் மயங்கிக் கிடப்பர்.

பிறருக்கு அறிவுரை வழங்கும் ஆலோசகர்கள் இதனை நன்கு அறிவர். இத்தகைய ஆலோசனையைப் பெறும் சமயங்களில் அந்தரங்கமான ஒரு மன நிறைவைப் பெறுகிறார்கள். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் மிகுந்த கவனிப்புக்குப் பாத்திரராக விளங்குவதால் ஊக்கம் அடைகின்றனர். ஆலோசகரோடு கூடிய ஐக்கியத்தால் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். அதன் காரணமாக நீண்டகாலம் ஆலோசனை பெறுகிறவராகவே இருந்து விடுகின்றனர். அதற்கு அடிமைப்பட்டும் விடுகின்றனர்.

அவர்கள் ஆலோசனை பெறுவதற்கு வருகிறவர்களாகத் தோற்றமளித்தாலும் உண்மையாகவே அவர்கள் ஆலோசனையை விரும்புவதில்லை. அவர்களது உள்ளம் ஏற்கனவே என்ன செய்ய வேண்டுமென்று முடிவு செய்திருக்கும். ஆலோசகரது ஆலோசனை அதற்கு ஒத்திருந்தால் அவர்களது விருப்பம் வலுவடையும். இல்லையேல், அந்த ஆலோசனையை உதறிவிட்டுத் தங்களுடைய சொந்த விருப்பத்தில் உறுதியாகத் தொடர்ந்து செல்வார்கள்.

ஏரோது மன்னன் இவ்வகை ஆர்வம் படைத்தவனாக இருந்தான். யோவான் ஸ்நானகன் கூறுகிற அறிவுரையைக் கேட்க அவன் ஆவலுடையவனாக இருந்தான் (மாற்கு 6:20). அறிவுரை கேட்பதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தான். அவன் கேட்ட செய்திக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கு அவனுக்கு விருப்பமில்லை.

இதனைக் குறித்து எர்வின் லட்சர் என்பார் எழுதியுள்ளதாவது: ‘என்னிடத்தில் அறிவுரை கேட்டு வருகிறவர்களில் பெரும்பாலோர் மாற்றம் அடைவதற்கு விரும்புவதில்லை. அவர்களுடைய நடத்தை அவர்களுக்கே இடறலாகத் தோன்றினால் சிறு மாற்றங்களை ஏற்றுக்கொள்வர். தங்களது பாவத்தில் தொடர்வது அவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட செய்கைகளைக் குறைவான அளவுக்கு தேவன் கட்டுப்படுத்துவாரென்றால் அதுவே அவர்களுக்குப் போதுமென்று எண்ணுவார்கள்.”

கேட்பதற்கும் செயலாற்றுவதற்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கச் சில வழிமுறைகளைச் சில ஆலோசகர்கள் கடைப்பிடிக்கின்றனர். மீண்டும் அறிவுரை பெறுவதற்கு வரும் முன்னர், சில செயல்களை ஆலோசனை பெறுவோர் செய்து முடிக்கவேண்டும். இம்முறையைக் கையாளுவதினால் அக்கறையற்றவர்கள் வருவது நின்று போய் விடும். நேரம் வீணாவதும் இதனால் தடுக்கப்படும்.

தேவனுடைய வார்த்தையைக் கேட்டும், அதன்விளைவாக ஒரு மாற்றமும் இல்லா நிலையை நாம் அடைவோமெனில் அது மிகவும் கவலைக்குரியதாகும். தேவனுடைய சத்தத்தைக் கேட்டு உணர்வடையவும், அதன்படி செய்கிறவர்களாக மாறவும் அவரிடத்தில் மன்றாடுவோமாக!

27. Juli

»Und siehe, du bist ihnen wie ein liebliches Lied, wie einer, der eine schöne Stimme hat und gut zu spielen versteht; und sie hören deine Worte, doch sie tun sie nicht.« Hesekiel 33,32

Wie Ironie klingt es, dass beim Verkündigen des Wortes Gottes die Zuhörer oft begeistert sind vom Redner, aber nicht von der Botschaft, die von ihnen eine Reaktion verlangt.

Das gilt einerseits für das öffentliche Predigen. Die Leute bewundern den Prediger. Sie erinnern sich an seine Späße und Illustrationen. Sie loben seine Aussprache, wie die Frau, die sagte: »Ich könnte jedes Mal weinen, wenn mein Pastor das gesegnete Wort ›Mesopotamien‹ ausspricht.« Aber wenn es um Gehorsam geht, sind sie wie gelähmt. Sie sind immun gegen jede Aufforderung zum Handeln. Durch die angenehme Stimme sind sie wie narkotisiert.

Das ist auch ein vertrautes Erscheinungsbild für die, die im Seelsorgedienst stehen. Es gibt Menschen, für die die seelsorgerische Beratung eine heimliche Befriedigung darstellt. Sie blühen auf, wenn sie für diese kurze Stunde im Mittelpunkt der Aufmerksamkeit stehen. Sie genießen die Gemeinschaft des Seelsorgers so sehr, dass sie richtig süchtig und chronische Seelsorgefälle werden.

Angeblich kommen sie, um sich Rat zu holen. Aber in Wirklichkeit wollen sie keinen. Sie sind bereits fest entschlossen. Sie wissen, was sie wollen. Wenn der Rat des Seelsorgers mit ihren eigenen Wünschen übereinstimmt, fühlen sie sich bestärkt. Wenn nicht, verwerfen sie seinen Rat und setzen ihren festgetretenen Weg fort.

König Herodes gehörte zu dieser Sorte von Menschen, die ihr Leben verpfuschen. Er genoss es, Johannes dem Täufer zuzuhören (Markus 6,20), aber er war ein oberflächlicher Stümper ohne ernste Absichten. Ihm war nichts daran gelegen, durch die Botschaft sein Leben verändern zu lassen.

Erwin Lutzer schreibt: »Ich habe festgestellt, dass das frustrierendste Problem bei der Seelsorge die Tatsache ist, dass sich die meisten Leute einfach nicht ändern wollen. Natürlich sind sie bereit, kleinere Korrekturen vorzunehmen – besonders wenn ihr Verhalten sie überall in Schwierigkeiten bringt. Aber die meisten fühlen sich ganz wohl mit ihrer Sünde, solange sie nicht außer Kontrolle gerät. Und oft ist es ihnen am liebsten, wenn Gott Seine Aktivität in ihrem Leben auf ein Minimum beschränkt.«

Manche Seelsorger haben eine Strategie entwickelt, die die Kluft zwischen Hören und Tun überbrücken soll. Sie geben dem Rat Suchenden eine konkrete Aufgabe – die er unbedingt erfüllen muss, bevor er zur nächsten Sitzung kommt. Dies schaltet bis zu einem gewissen Grad die aus, die es nicht ernst meinen. Es schützt beide Teile vor Zeitvergeudung.

Es ist furchtbar und gefährlich, wenn wir eine Phase im Leben erreichen, wo wir Gottes Wort hören können, ohne davon bewegt zu werden. Wir müssen um beständige Empfindsamkeit für die Stimme des Herrn bitten und die Bereitschaft, alles zu tun, was immer Er auch sagt.