July

கள்ளத் தீர்க்கதரிசிகள்

July 13

“Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God; because many false prophets have gone out into the world.” (1 John 4:1 NASB)

We live in a day when cults are multiplying with amazing rapidity. Actually there are no new cults; they are just variations of heretical groups that sprang up in New Testament days. It is their variety that is new, not their basic tenets.

When John says that we should test the spirits, he means that we should test all teachers by the Word of God so that we can detect those that are false. There are three fundamental areas where the cults expose themselves as being counterfeits. No cult can pass all three of these tests.

Most of the cults are fatally defective in their teaching concerning the Bible. They do not accept it as the inerrant Word of God, the final revelation of God to man. They give equal authority to the writings of their own leaders. They claim new revelations from the Lord and boast of “new truth.” They publish their own translation of the Scripture which twists and perverts the truth. They accept the voice of tradition on a par with the Bible. They handle the Word of God deceitfully.

Most of the cults are heretical in their teachings concerning our Lord. They deny that He is God, the Second Person of the Holy Trinity. They might admit that He is the Son of God, but by this they mean something less than equality with God the Father. Often they deny that Jesus is the Christ, teaching that the Christ is a divine influence that came upon the man Jesus. Often they deny the true, sinless humanity of the Savior.

A third area in which the cults stand condemned is in what they teach concerning the way of salvation. They deny that salvation is by grace through faith in the Lord Jesus alone. Every one of them teaches another gospel, namely, salvation by good works or good character.

When propagators of these cults come to our door, what should be our response? John leaves us in no doubt: “Don’t have him inside your house; don’t even greet him. For to greet such a man is to share in the evil that he is doing.” (2 John 10, 11 Phillips).

யூலை 13

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன் றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள்
தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1.யோவான் 4:1.

கள்ளத் தீர்க்கதரிசிகள்

தவறானதும் மாறுபாடானதுமான கள்ள உபதேசக்குழுக்கள் திகைப்பூட்டும் வகையில் பெருகி வளருகிற நாட்களில் நாம் வாழ்கிறோம். உண்மையில், அவ்வகையான குழுக்கள் புதிய உபதேசங்களோடு தோன்றவில்லை. புதிய ஏற்பாட்டின் தொடக்க காலத்தில் துளிர்விட்ட கள்ள உபதேசக் குழுக்களே இன்றைக்கும் புதிய சாயலோடு மலர்ந்திருக்கின்றன. அவை புதிய கூட்டமேயொழிய, புதிய கோட்பாடுகள் எதனையும் அவை கொண்டுவரவில்லை.
ஆவிகளைச் சோதித்து அறிய வேண்டுமென்று யோவான் கூறியிருப்பதன் பொருள் யாதெனில், அனைத்து தேவ ஆசிரியர்களையும் தேவ வார்த்தையைக் கொண்டு நாம் சோதிக்கவேண்டும் என்பதேயாகும். அவ்வாறு சோதித்துத் தவறானவர்கள் யாரென்று கண்டறியவேண்டும். இந்தக் கள்ள உபதேசக்குழுவினர் போலியானவர்களே என்பதை அறிய மூன்று அடிப்படை சோதனைகள் உள்ளன. எந்தவொரு கள்ளக் கோட்பாட்டுக் குழுவும் இம்மூன்று சோதனைகளிலும் வெற்றிபெற முடியாது.

முதலாவது, பெரும்பாலான கள்ளக்குழுக்கள் வேதத்தைக் குறித்துக் கொண்டிருக்கும் கருத்துக்கள் பேரிடர்பாட்டை உண்டாக்கும் அளவிற்குத் தவறுகள் மிக்கவையாக உள்ளன. திருமறை எவ்விதத் தவறும் இல்லாத தேவ வார்த்தை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். திருமறையே மனிதனுக்கு தேவன் கொடுத்த கடைசி வெளிப்பாடு என்பதையும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேதத்திற்குக் கொடுக்கும் அதே அதிகாரத்தைத் தங்களுiடைய தலைவர்கள் எழுதியவைகளுக்கு அவர்கள் கொடுப்பார்கள். கர்த்தரிடத்திலிருந்து புதிய வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொண்டதாகவும், ‘புதிய உண்மைகளைக் கண்டறிந்ததாகவும்” கூறுவர். வேதத்திற்குத் தங்களுடைய சொந்த மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு, ஆங்காங்கு உண்மையைத் திரித்து எழுதி, தவறான பொருள்களைக் கொடுப்பார்கள். வேத வார்த்தைகளைக் கபட எண்ணத்தோடு கையாளுவர். பாரம்பரியமாய்ச் சொல்லப்படுகிற சில கூற்றுகளை வேத வசனத்திற்குச் சமமாகக் கருதுவர்.

இரண்டாவதாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி இக்கள்ளக் குழுவினர் தவறாகப் போதிப்பார்கள். அவர் தேவன் என்பதையும், திரியேகத்தில் இரண்டாவது நபர் என்பதையும் அவர்கள் மறுத்துரைப்பர். அவர் தேவனுடைய குமாரன் என்று ஒப்புக்கொண்டாலும், அதன்மூலம் பிதாவாகிய தேவனுக்கு அவர் இணையானவர் அல்லர் எனக்கூறுவர். இயேசுவே கிறிஸ்து என்பதை அவ்வப்போது மறுத்துரைப்பர். மனிதனாகிய இயேசுவின் மீது கிறிஸ்து என்னும் தெய்வீக வல்லமை கொடுக்கப்பட்டது என்றும் கற்பிப்பார்கள். இரட்சகருடைய பாவமற்ற உண்மையான மனிதத்தன்மையை மறுத்துரைப்பார்கள்.

மூன்றாவதாக: இரட்சிப்பின் வழியைப்பற்றிய அவர்களுடைய கருத்து அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கி விடும். கிருபையினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீது பற்றும் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பு உண்டாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நற்கிரியை அல்லது நற்பண்பு ஆகியவற்றின் மூலமாக இரட்சிப்பு கிடைக்கும் என்னும் வேறோரு ‘நற்செய்தியைக்” கூறுவர்.

இத்தகைய கள்ளக்குழுக்களின் செய்திப்பரப்பாளர்கள் நமது வீட்டின் கதவருகே வருகிறபோது நாம் என்ன செய்யவேண்டும்?. ‘அவனை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கு பங்குள்ளவனாகிறான்.” என யோவான் ஐயத்திற்கிடமின்றி நம்மிடம் கூறியுள்ளார் (2.யோவான் 10-11).

13. Juli

»Geliebte, glaubet nicht jedem Geist, sondern prüfet die Geister, ob sie aus Gott sind; denn viele falsche Propheten sind in die Welt ausgegangen. « 1. Johannes 4,1

Wir leben in einer Zeit, in der sich die Sekten mit unglaublicher Geschwindigkeit ausbreiten. Streng genommen gibt es eigentlich keine neuen Sekten. Sie sind nur neue Spielarten ketzerischer Gruppen, die schon in den Tagen des Neuen Testaments entstanden sind. Ihre Vielfalt ist neu, nicht aber ihre grundlegenden Lehren.

Wenn Johannes sagt, dass wir die Geister prüfen sollen, meint er, dass wir alle Lehrer anhand des Wortes Gottes prüfen müssen, um diejenigen zu erkennen, die falsch sind. Es sind drei fundamentale Bereiche, wo sich die Sekten als Irrtümer erweisen. Keine Sekte besteht alle diese drei Prüfungen.

Die meisten Sekten haben verhängnisvolle Irrlehren über die Bibel. Sie erkennen sie nicht als das unfehlbare Wort Gottes an, die endgültige Offenbarung Gottes an den Menschen. Bei ihnen haben die Schriften ihrer Gründer und Führer gleiche Autorität.

Sie behaupten, neue Offenbarungen von Gott empfangen zu haben, und rühmen sich »neuer Wahrheiten«. Sie veröffentlichen ihre eigenen Übersetzungen der Schrift, die die Wahrheit verdrehen und verzerren. Sie stellen Überlieferungen auf die gleiche Ebene wie die Bibel. Sie gebrauchen das Wort Gottes in irreführender Weise.

Die meisten Sekten sind ketzerisch in ihren Lehren über den Herrn. Sie leugnen, dass Er Gott ist, die zweite Person der Dreieinigkeit. Vielleicht geben sie zu, dass Er Gottes Sohn ist, aber damit meinen sie etwas anderes als das Gleichsein mit Gott dem Vater. Oft leugnen sie auch, dass Jesus der Christus ist, und lehren, dass »Christus « lediglich ein göttlicher Einfluss ist, der über den Menschen Jesus kam. Häufig verneinen sie auch das wahre, sündlose Menschsein des Erlösers.

Ein dritter Bereich, wo die Sekten unter dem Gericht des Wortes Gottes stehen, ist ihre Lehre über den Weg der Errettung. Sie leugnen, dass Errettung allein durch Gnade mittels des Glaubens an den Herrn Jesus geschieht. Jede von ihnen lehrt ein anderes Evangelium, nämlich Errettung durch gute Werke und gutes Wesen.

Wenn Werber dieser Sekten an unsere Tür kommen, wie sollten wir dann reagieren? Johannes lässt keinen Zweifel: »Schickt ihn gleich wieder weg. Vermeidet jeden Kontakt mit ihm. Denn wer diese Verführer auch nur grüßt, unterstützt ihre bösen Absichten und macht sich mitschuldig« (2. Johannes 10).