January

ஆதாரப்பூர்வ சான்றுகள்

January 11

“…that in the mouth of two or three witnesses every word may be established.” (Matt. 18:16).

As far as the Bible is concerned, there must be the testimony of two or three witnesses in order to form a valid judgment. If we would only observe this principle, we would save ourselves oceans of trouble.

The natural tendency for us is to hear one person’s side of a case and to immediately decide in his favor. He sounds convincing and our sympathies go out to him. Then later we learn that his was only one side of the story. When we hear the other side, we realize that the first man had distorted the facts or at least colored them in his own favor. Thus, “the first to plead his case seems just until another comes and examines him” (Prov. 18:17, NASB). When we make a decision before trying to ascertain the full facts, we act less righteously than the world’s judicial system and place ourselves under the censure of Prov. 18:13 NASB, “He who gives an answer before he hears, it is folly and shame to him.”

When Ziba reported to David that Mephibosheth hoped to gain the throne, David accepted the slander without investigation and gave all of Mephibosheth’s property to Ziba (2 Sam. 16:1-4). Later Mephibosheth had a chance to tell the king the true facts. David then realized that he had made a decision without having sufficient evidence.

The Lord Jesus recognized this principle. He said that His testimony concerning Himself was not sufficient (John 5:31). So He presented the testimony of four witnesses: John the Baptist (vv. 32-35); His works (v. 36); God, the Father (vv. 37, 38); the Scriptures (vv. 39, 40).

By failing to obtain the competent testimony of two or three witnesses, we can cause broken hearts, ruined reputations, divided churches and severed friendships. If we follow God’s Word, we will avoid tons of injustice and human hurt.

ஜனவரி 11

இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோ. (மத்.18:16)

ஆதாரப்பூர்வ சான்றுகள்

இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கின் அடிப்படையிலே வழங்குவதே முறையான தீர்ப்பு என்று வேதம் கற்பிக்கிறது. இந்த விதியை நாம் கடைப்பிடிப்போமானால், கடல்போல் எழுந்துவரும் தொல்லைகள் யாவற்றையும் தவிர்க்கலாம்.

ஒருவருடைய வாதத்தைக் கேட்டு, உடனடியாக அவருக்குச் சாதகமான முடிவிற்கு வருவது நம்முடைய இயல்பாகும். அவருடைய பேச்சு நம்பும்படியாக இருக்கும். அதன் காரணமாக அவரிடத்தில் நாம் பரிவு காட்டுவோம். அவர் கூறிய அனைத்தும் கதையின் ஒரு பக்கம் என்பதை நாம் பின்னரே அறிவோம். மறுபக்கத்தை நாம் கேள்விப்படும் வேளையில், முதலில் கூறியவரால் உண்மைகள் திரித்துக்கூறப்பட்டுள்ளன என்பதை உணருவோம். குறைந்தது அவர் நமக்குச் சாதகமாகச் சாயம் பூசியிருப்பார். “தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்: அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்” என்பது எத்தனை உண்மையாய் இருக்கிறது (நீதி.18:17). அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்வதற்கு முயற்சிசெய்யும் முன்னர் தீர்ப்பு வழங்குவோமாயின், உலகத்தில் நீதியை வழங்குவதற்காகச் செயல்படும் அமைப்புக்களைக் காட்டிலும் குறைவுடைய நீதியுடையவர்களாகவே நாம் காணப்படும்வோம். மேலும், நீதிமொழிகள் 18:13ம் வசனத்தில் சொல்லியிருக்கிற குற்றத்திற்கும் ஆளாகிவிடுவோம். “ காரியத்தைக் கேட்குமுன் உத்தரவு சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்”.

மேவிபோசேத் அரியணையைக் கவர்ந்துகொள்ள எண்ணினான் என்று தாவீதினிடத்தில், சீபா அறிவித்தபோது அப்பொல்லாங்கான கூற்றை எவ்வித விசாரணையுமின்றி தாவீது நம்பினான். மேலும் மேவிபோசேத்தின் சொத்துக்கள் அனைத்தையும் சீபாவிற்கு உரியதாக்கினான் (2.சாமு.16:1-4). சில காலம் கழித்து எல்லா உண்மைகளையும் அரசனிடம் சொல்வதற்கு மேவிபோசேத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தகுந்த ஆதாரமின்றி தான் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டதை தாவீது அப்பொழுதுதான் உணர்ந்தான்.

இவ்விதியை ஏற்றுக்கொண்டவராகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் காண்கிறோம். தம்மைக் குறித்துத் தாம் கூறுகின்ற சான்று போதுமானதன்று என்றே கூறினார் (யோ.5:31). ஆகலின், நான்கு சாட்சிகளின் சான்றுக்களைச் சமர்ப்பித்தார். யோவான் ஸ்நானகன் (வச.32-35): அவருடைய கிரியை (வச.36): பிதாவாகிய தேவன் (வச.37-38): திருமறை (வச.39-40). இவையே அந்த நான்கு சாட்சிகள்.

ஆதரபூர்வமான சான்றுக்களை இரண்டு அல்லது மூன்று சாட்சிகளிடமிருந்து நாம் பெறத்தவறுவோமென்றால் உள்ளங்கள் உடைவதற்கும், புகழ்ச்சி குன்றிப்போவதற்கும், சபைகள் பிரிவதற்கும், நட்புக்கள் முறிவதற்கும் காரணமாகிவிடுவோம். தேவனுடைய வார்த்தையை நாம் பின்பற்றுகிவர்களாக இருப்போமெனில் பல்பல அநீதிகளைத் தவிர்போம்: பலருடைய உள்ளங்களில் காயம் ஏற்படுவதையும் தவிர்போம்.

11. Januar

»… damit aus zweier oder dreier Zeugen Mund jede Sache bestätigt werde.« Matthäus 18,16

Was die Bibel betrifft, so muss die Aussage von zwei oder drei Zeugen vorhanden sein, um sich ein gültiges Urteil zu bilden. Wenn wir diesen Grundsatz beachten würden, könnten wir uns dadurch ein Meer von Problemen ersparen.

Unser natürlicher Hang geht dahin, nur eine Seite eines Falles zu hören und sofort zu dessen Gunsten zu urteilen. Er klingt überzeugend und bekommt sofort unsere ganze Sympathie. Später erfahren wir, dass er uns nur die eigene Seite der Geschichte erzählt hat. Wenn wir die andere Seite hören, wird uns klar, dass die erste Person die Fakten verzerrt oder zumindest zu ihren Gunsten gefärbt wiedergegeben hat. So bewahrheitet sich hier Sprüche 18,17: »Der Erste in einer Streitsache hat Recht; doch sein Nächster kommt und forscht ihn aus.« Wenn wir ein Urteil fällen, ehe wir versucht haben, sämtliche Fakten in Erfahrung zu bringen, handeln wir ungerechter als das Rechtssystem der Welt und setzen uns der Rüge von Sprüche 18,13 aus: »Wer Antwort gibt, bevor er anhört, dem ist es Narrheit und Schande.«

Als Ziba David berichtete, dass Mephiboseth auf den Thron zu kommen hoffe, nahm David diese Verleumdung ohne weitere Untersuchung an und gab Ziba den ganzen Besitz Mephiboseths (2. Samuel 16,1-4). Später ergab sich für Mephiboseth die Möglichkeit, dem König die Wahrheit zu erzählen. Da wurde David klar, dass er eine Entscheidung ohne ausreichendes Beweismaterial getroffen hatte.

Der Herr erkannte diesen Grundsatz an. Er sagte, Sein Zeugnis über Sich selbstsei nicht ausreichend (Johannes 5,31). Darum präsentierte Er vier weitere Zeugen:Johannes den Täufer (Verse 32-35), Seine Werke(Vers 36), Gott, Seinen Vater (Verse37.38) und die Schriften (Verse 39.40).

 

Wenn wir uns nicht um ein ausreichendes Zeugnis von zwei oder drei Zeugenbemühen, können wir dadurch Herzen brechen, jemandes Ruf ruinieren,Versammlungenspalten und Freundschaften zerstören. Folgenwir Gottes Wort, so vermeidenwir Lawinen von Ungerechtigkeit und seelischen Wunden.