January

ஊக்கம் நிறைந்த இறைப்பணி

January 8

“Cursed be he that doeth the work of Jehovah negligently.” (Jer. 48:10 ASV)

The work of the Lord is so important, pressing, sublime and awebegetting that a curse rests upon anyone who does it negligently. The God who wants and deserves the best cannot bear with sloth, delays, halfheartedness, or slipshod methods. When we think of the tremendous issues involved, we are not surprised.

During the latter part of 1968 a young Christian in Prague, Czechoslovakia witnessed to another young Czech named Jan Palach. There seemed to be a genuine interest on Jan’s part, and so the Christian promised to deliver a New Testament to him. He was filled with good intentions but he let weeks pass before he even obtained the New Testament. Then he kept delaying its actual delivery.

On January 16, 1969, Jan Palach stood in St. Wencelas Square, poured gasoline over his body and set himself afire. He never lived to see the New Testament that had been promised to him.

Good intentions are not enough. It has been said that the streets of hell are paved with good intentions. But they don’t get the work done. They must be translated into action. And here are a few ways to do it.

First, never refuse when the Lord directs you to do some act of service for Him. If He is Lord, then it is ours to obey without question.

Second, don’t procrastinate. Delays are deadly. They rob others of needed help and blessing, and fill us with guilt and remorse.

Third, do it diligently. “Whatsoever thy hand findeth to do, do it with thy might” (Eccl. 9:10). If it’s worth doing at all, it’s worth doing well.

Finally, do it for God’s glory. “Whether therefore ye eat, or drink, or whatsoever ye do, do all to the glory of God,” (1 Cor. 10:31).

We should all have the spirit of Amy Carmichael, who wrote, “The vows of God are upon me. I may not stay to play with shadows or pluck earthly flowers till I my work have done and rendered up an account.”

ஜனவரி 8

கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். (எரேமி.48:10)

ஊக்கம் நிறைந்த இறைப்பணி

கர்த்தருடைய பணி இன்றியமையாததும், உடனடியாகச் செய்யத்தக்க சிறப்புவாய்ந்ததும், தெய்வீகமானதும், பயபக்திக்குரியதுமாகும். அதனை அசதியாய் செய்கிறவன்மீது பாவம் தங்கும். எல்லாவற்றிலும் சிறந்ததை விரும்புபவரும், அதற்குத் தகுதியானவருமாகிய தேவனால், சோம்பலையும், தாமதத்தையும், அரைமனதோடு பணிபுரிவதையும், குறுக்குவழியையும் பொறுத்துக்கொள்ளமுடியாது. அதில் உள்ள மிகவும் இன்றியமையாத தன்மைகளை நாம் சிந்தித்துப் பார்ப்போமென்றால், அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

1968ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த நிகழ்ச்சி: அந் நாட்டில் பராகுவே பகுதியில் ஒரு இளம்கிறிஸ்தவன், வோறொரு செக் இளைஞனிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டான். ஜான் பாலக் என்ற அவ்விளைஞன் நற்செய்தியில் உண்மையாகவே நாட்டமுடையவனாகவே காணப்பட்டான். அதை உணர்ந்த கிறிஸ்தவனும் அவனுக்கு புதிய ஏற்பாடு ஒன்றினைத் தருவதாக வாக்களித்தான். அவனுடைய இருதயத்தில் நல்நோக்கம் நிறைந்திருந்தபோதிலும், ஒரு புதிய ஏற்பாட்டை வாங்குவதற்குப் பலவாரங்கள் காலதாமதம் செய்தான். அதை வாங்கிய பிறகும் உடனடியாகக் கொண்டுபோய்க் கொடுக்கவில்லை. 1969ம் ஆண்டு ஜனவரி 16ம் நாள், ஜான் பாலாக், செயின்ட் வென்சிலாஸ் சந்திப்பில் நின்று தன் உடலில் எரிபொருளை கூற்றித் தன்னையே நெருப்பிட்டு மாய்த்துக்கொண்டான். அவனுக்கு வாக்களிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு நூலைக் காணாமலேயே மாண்டுபோனான்.

நல்ல நோக்கங்கள் மட்டும் போதா. நரகத்திற்குச் செல்லும்வழி நல்லநோக்கங்களால் மூடப்பட்டிருக்கிறது. என்றாலும் அந்த நோக்கங்கள் செய்யவேண்டிய வேலையைச் செய்வதில்லை. அந் நோக்கங்கள் செயல்களாக மாற்றப்படவேண்டும். அதற்கென சில அறிவுரைகளை இங்கே காணலாம்.

முதலாவதாக, அவருக்கென்று சில ஊழியங்களைச் செய்யும்படி கர்த்தர் உங்களை அழைக்கும்போது அதற்கு மறுப்புத் தெரிவிக்காதீர்கள். அவர் நமது எஜமானன் என்பதால், எவ்விதக்கேள்வியுமின்றி அவருக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். இரண்டாவதாக, காலதாமதம் செய்யாதீர்கள். காலதாமதம் மரணத்தை வருவிக்கக்கூடியது. மற்றவர்களுடைய தேவைகளையும் அவர்கள் பெறக்கூடிய நற்பேறுகளையும் அது கொள்ளையிடுகிறது. நமக்கு அது குற்றவுணர்வையும் கவலையையும் தருகிறது. மூன்றாவதாக, இறைப்பணியை மிகவும் கவனத்துடன் செய்யவேண்டும். ‘ செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’ (பிர.9:10). அச்செயல் செய்வதற்குத் தகுதிபடைத்தாயின், அதனை நன்றாச் செய்தலே தகும். கடைசியாக, தேவமகிமைக்கென்று அதனைச் செய்யுங்கள். ‘ நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்’ (1.கொரி.10:31).

ஏமி கார்மைக்கேல் அம்மையார் இது குறித்துக்கொண்டிருந்த ஆவியை நாமும் உடையவராயிருப்போம்: ‘தேவனுடைய சூளுரை என் மீது விழுந்த கடமையாகும். மரத்தின் நிழலில் தங்கி விளையாடுவதை நான் விரும்ப மாட்டேன். தேட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டு இருப்பது என் பணியல்ல. எனக்களிக்கப்பட்ட பணியினை நிறைவேற்றிக் கணக்கினை ஒப்புவிக்கும் வரை ஓய்ந்திருக்கப்போவதில்லை.’

8. Januar

»Verflucht sei, wer das Werk des Herrn lässig treibt.« Jeremia 48,10

Das Werk des Herrn ist so wichtig, dringend, erhaben und Ehrfurcht gebietend, dass ein Fluch auf jedem liegt, der es nachlässig tut. Gott, der das Beste will und auch verdient, kann Faulheit, Zögern, Halbherzigkeit und schlampige Methoden nicht ertragen. Wenn wir an die unendlich wichtigen Dinge denken, um die es geht, wundert uns das nicht.

Im Herbst 1968 gab ein junger Christ in Prag einem anderen jungen Tschechen namens Jan Palach Zeugnis. Jan zeigte aufrichtiges Interesse, worauf der Christ ihm versprach, ein Neues Testament vorbeizubringen. Er war voller guter Absichten, ließ aber Wochen verstreichen, bevor er das Neue Testament überhaupt besorgte. Dann schob er es immer wieder auf, es vorbeizubringen.

Am 16. Januar 1969 stand Jan Palach auf dem Wenzelsplatz, übergoss sich mit Benzin und verbrannte sich. Er hat es nicht mehr erlebt, das ihm versprochene Neue Testament auch nur zu sehen.

Gute Vorsätze sind nicht genug. Es wird oft gesagt, dass die Straßen der Höllemit guten Vorsätzen gepflastert sind. Aber durch sie wird die Arbeit nicht getan. Siemüssen in Taten umgesetzt werden. Im Folgenden einige Möglichkeiten, wie dasgeschieht:

Erstens: Lehnen wir es niemals ab, wenn der Herr uns deutlich macht, eine x-beliebige Tat oder einen Dienst für Ihn zu tun. Wenn Er Herr ist, haben wir Ihm ohne Wenn und Aber zu gehorchen.

Zweitens: Schieben wir die Sache niemals auf. Verzögerungen sind tödlich. Sie rauben anderen Hilfe und Segen und erfüllen uns mit Schuld und Gewissensbissen.

Drittens: Tun wir es sorgfältig. »Alles, was deine Hand zu tun findet, das tue mit deiner Kraft« (Prediger 9,10, Elberf. Fußnote). Wenn es überhaupt zu tun wert ist, dann ist es auch wert, gut getan zu werden.
Schließlich: Tun wir es zur Ehre Gottes. »Ob ihr nun esset oder trinket oder irgendetwas tut, tut alles zur Ehre Gottes« (1. Korinther 10,31).

Wir sollten alle mit der Gesinnung von Amy Carmichael (1867-1951, englische Indienmissionarin und Dichterin) erfüllt sein, die schrieb: »Die Gelübde Gottes sind auf mir. Ich kann mich nicht aufhalten, mit Schatten zu spielen oder irdische Blumen zu pflücken, bis ich mein Werk getan und darüber Rechenschaft abgelegt habe.«