February

மன ஐயங்களைப் பற்றிய பண்புமிக்க முடிவு

February 4

“If I say, I will speak thus; behold, I should offend against the generation of thy children.” (Psa. 73:15)

The psalmist had been going through a rough patch. He saw the wicked prospering in the world, whereas his own life was a nightmare of trouble and suffering. He began to have doubts about the justice of God, the love of God, and the wisdom of God. It seemed as if the Lord rewarded wickedness and punished uprightness.

But Asaph made a noble resolve. He determined not to parade his doubts lest he should stumble any of God’s children.

Probably most of us have doubts and questions at times. Especially when we are almost at the end of endurance, when everything seems ready to cave in on top of us, it is easy to question the providence of God. What should we do?

We are certainly permitted to share our doubts with someone who is spiritually qualified to counsel us. Sometimes we are too distracted to see the light at the end of the tunnel, whereas it is quite clear to others and they can lead us to it.

As a general rule, we should “never doubt in the darkness what has been revealed to us in the light.” We should not interpret God’s Word by circumstances, no matter how bleak. Rather we should interpret our circumstances by the Scriptures and realize that nothing can ever thwart God’s purposes or nullify His promises.

But above all, we should not go around needlessly parading our doubts. There is the terrible danger of stumbling Christ’s little ones, concerning whom He said, “Whoso shall offend one of these little ones which believe in me, it were better for him that a millstone were hanged about his neck, and that he were drowned in the depth of the sea” (Matt. 18:6).

Our certitudes are numberless; our doubts, if any, are few. Let us share our certitudes. As Goethe said, “Give me the benefit of your convictions, if you have any, but keep your doubts to yourself, for I have enough of my own.”

பெப்ரவரி 4

இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
(சங்.73:15)

மன ஐயங்களைப் பற்றிய பண்புமிக்க முடிவு

இப்பாடலாசிரியரின் கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் தான் சென்ற தருணத்தில் இச்சங்கீதத்தை எழுதினான் எனக் கருத இடமுண்டு. தன் வாழ்வின் வருத்தத்தையும், பாடுகளையும், வேதனையையும் அனுபவித்த ஆசிரியன் பொல்லாங்கு நிறைந்த மனிதர்களின் செழிப்பை உலகமெங்கும் கண்ணுற்றான். இதன் விளைவாக, தேவனுடைய நீதியைக் குறித்தும், அன்பைக் குறித்தும், ஞானத்தைக் குறித்தும் அவன் உள்ளத்தில் ஐயம் மேலிடத்தொடங்கியது. தேவன் அநீதிக்கு நற்பேற்றை நல்கி, நீதியை ஒறுப்பது போன்று தோன்றுகிறதே !

இங்ஙனம் எண்ணம் கொண்டபோதிலும், ஆசாப் பண்புமிக்க முடிவொன்றை எடுத்தான். உள்ளத்தில் எழுந்த ஐயங்களைப் பறைசாற்றி, தேவனுடைய பிள்ளைகளில் எவரேனும் தடக்கி விழுவதற்கு இடங்கொடுக்கலாகாது என்பதே அச்சீரிய முடிவு.

பல வேளைகளில் நாம் ஐயம் கொள்கிறோம். கேள்விகளைத் தொடுக்கிறோம். தாங்கவொண்ணா வேதனை, எல்லாம் தலைகீழாக நம்மீது விழும் என்னும் நிலை, இவைபோன்றவை ஏற்படும் வேளைகளில் தேவனுடைய நற்பேறுகளைக் குறித்து நாம் கேள்விகளை எழுப்புகிறோம். நாம் செய்யவேண்டியது என்ன?

ஆவிக்குரியோராகவும், ஆலோசனை தருவோராகவும் விளங்கும் ஒரு சிலரிடம் நமது ஐயங்களைப் பகிர்ந்து கொள்வது நன்று. இருள் கவ்விய சுரங்கத்தின் மறுபுற வெளிச்சத்தைக் காண இயலாதவாறு, சில வேளைகளில் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். மற்றவர்கள் அப்பாதையை நன்று அறிந்திருப்பார்கள். அவ்வொளியைக் காணும் அவர்கள் நம்மை நல்வழி காட்டி, நடத்திச் செல்வர்.

„வெளிச்சத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறித்து, இருளில் இருந்துகொண்டு ஐயம்கொள்வது மடமை என்பதே பொதுவான சட்டமாகும். வாழ்வில் உற்சாகம் அற்றுப்போகக் கூடிய சூழ்நிலையில், அதற்கேற்றாற்போல தேவனுடைய திருவார்த்தைகளுக்குப் பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, நமது சூழ்நிலைகளை வேதத்தினால் விளக்கவேண்டும். தேவனுடைய நோக்கத்தை எதுவும் தடைசெய்யாது. அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகாதென்பதை நாம் உணரவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தேவையற்ற முறையில் நமது ஐயங்களைப் பறைசாற்றிச் சுற்றித்திரியக்கூடாது. அவ்வாறு செய்வோமாயின் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டுள்ள எளியோரை இடறுதலில் உட்படுத்தும் ஆபத்தில் அகப்பட்டுக்கொள்வோம் (மத்.18:6).

நாம் பெற்றுள்ள உறுதிகள் எண்ணிலடங்கா. ஐயங்கள் ஒருசில நம் மனதில் ஏற்படலாம். நாம் பெற்ற வாக்குறுதிகளைப் பகிர்ந்துகொள்வோம். கோய்தி என்பார், உங்கள் திடநம்பிக்கையின் பலனை எனக்குக் கொடுங்கள். ஏதேனும் ஐயங்கள் இருப்பின் அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் ஐயங்கள் எனக்குப்போதும் எனக் கூறியுள்ளது மிகப்பொருத்தமானதே.

4. Februar

»Wenn ich gesagt hätte: Ich will ebenso reden, siehe, so wäre ich treulos gewesen dem Geschlecht deiner Söhne.« Psalm 73,15

Der Psalmist machte eine schwierige Zeit durch. Er sah, dass es den Gottlosen in dieser Welt gut ging, während sein eigenes Leben ein Alptraum von Leid und Not war. Zweifel an der Gerechtigkeit Gottes begannen an ihm zu nagen, Zweifel an Seiner Liebe und an Seiner Weisheit. Es schien geradeso, als würde der Herr Gottlosigkeit belohnen und Rechtschaffenheit bestrafen.

Aber Asaph hatte einen vorbildlichen Entschluss gefasst. Er war entschlossen, seine Zweifel nicht zur Schau zu stellen, um keinem Gotteskind ein Anlass zum Straucheln oder gar Fallen zu sein.

Wahrscheinlich haben die meisten von uns ab und zu Zweifel oder Fragen. Besonders wenn wir das Ganze scheinbar nicht mehr aushalten können, wenn alles über uns zusammenzustürzen droht, dann geraten wir leicht dahin, die Vorsehung Gottes in Frage zu stellen. Wie verhalten wir uns in dem Zusammenhang richtig?

Es ist bestimmt möglich, unsere Zweifel jemandem mitzuteilen, der die geistliche Qualifikation hat, uns zu helfen. Manchmal sind wir einfach zu verwirrt von unseren Problemen, um das Licht am Ende des Tunnels wahrnehmen zu können, während es für andere vielleicht ganz deutlich strahlt und sie uns dahin geleiten können.

Grundsätzlich sollten wir »niemals in der Finsternis bezweifeln, was uns im Licht geoffenbart worden ist«. Wir sollten Gottes Wort nicht durch die Umstände auslegen, wie düster sie auch sein mögen. Stattdessen sollten wir unsere Umstände im Licht der Schrift auslegen und uns klar machen, dass nichts die Pläne Gottes jemals verhindern oder Seine Verheißungen zunichte machen kann.

Aber vor allem sollten wir nicht umhergehen und unsere Zweifel zur Schau stellen. Es besteht nämlich die furchtbare Gefahr, dass wir die schwachen Kinder Gottes zu Fall bringen, die »Kleinen«, über die der Herr gesagt hat: »Wer aber irgend eines dieser Kleinen ärgern (d.h. ihm einen Fallstrick legen [Fußnote Elberf.]) wird, dem wäre nütze, dass ein Mühlstein an seinen Hals gehängt und er in die Tiefe des Meeres versenkt würde« (Matthäus 18,6).

Unsere Gewissheiten sind zahllos; unsere Zweifel, wenn wir überhaupt welche haben, sind wenige. Wir wollen einander unsere Gewissheiten mitteilen. Schon Goethe sagte: »Gebt mir den Nutzen Eurer Überzeugungen, wenn Ihr welche habt, aber behaltet Eure Zweifel für Euch selbst, denn ich habe genug eigene.«