December

சம்பந்தமில்லாத வழக்கு

December 28

“Like one who takes a dog by the ears is he who passes by and meddles with strife not belonging to him.” (Prov. 26:17 NASB)

We should realize first of all that the dog mentioned in this verse is not the friendly, gentle, Irish setter that probably wouldn’t mind at all if you held him by his ears. This is the wild, snarling, alley dog with a mean disposition and bared fangs. It would be improbable that you can get close enough to him to grab him by the ears in the first place. But if you could, you’d face a desperate dilemma; you’d be afraid to Hold on and afraid to let go.

Well, it’s a graphic illustration of the person who gets involved in a fight that doesn’t concern him. Soon he has incurred the anger of both the adversaries.

Each one feels that the meddler is interfering with any chance of victory, so they forget their own differences and unite in fighting him.

We smile at the Irishman who went up to two men engaged in a fist fight and asked, “Is this a private fight or can anyone get in?” Yet there is a meddlesome streak in every one of us that tempts us to interfere in squabbles that are none of our business.

Police officers have to be extra careful when they are called to a scene where a husband and wife are quarreling. If that is so, how much more cautious should the average citizen be in intruding in the domestic strife of others!

Perhaps one of the best illustrations of today’s proverb is trouble in the church. It usually starts between two persons. Then others take sides. What started as a spark soon becomes a conflagration. People who have no connection with the problem insist on adding their own wise pronouncements, as if they were the oracle of Delphi. Tempers flare, friendships are shattered, and hearts are broken. As the battle increases in intensity the congregation hears announcements of coronaries, strokes, ulcers and other physical problems. What started as a root of bitterness has spread until many are defiled.

The warning not to meddle in strife belonging to others might seem to conflict with the Savior’s words, “Blessed are the peacemakers: for they shall be called the children of God” (Matt. 5:9). But there is no contradiction. There is a place for a peacemaker when contending parties are willing to have their dispute arbitrated. Otherwise the one who interferes succeeds only in getting himself into a situation from which there is no easy, painless escape.

டிசம்பர் 28

வழியிலே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயை காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான். நீதி.26:17

சம்பந்தமில்லாத வழக்கு

இங்கே சொல்லப்பட்டிருக்கிற நாய் நட்பு பாராட்டுகிறதும், மென்மையானதும், காதைப் பிடித்து தூக்கினால் அதைப் பொருட்படுத்தாததுமான இனத்தைச் சேர்ந்ததன்று என்றும் நாம் முதலாவதாக தெரிந்துகொள்ள வேண்டும். இது சீறுகிறதும், உறுமுகிறதும், தன்னுடைய கோரப்பற்களைக் காட்டிக் கட்டுக்கடங்காமல் திரிகிற தெரு நாயாகும். முதற்கண் அதன் அருகில் நெருங்கி அதனுடைய காதைப் பிடித்திழுப்பதே உங்களால் முடியாத செயலாகும். ஆனால் அப்படி இழுக்க முயன்றாலும், இக்கட்டான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டவராயிருப்பீர்கள். ஆபத்தான முறையில் அதன் காதைப் பிடித்து இழுப்பதும் கடினம், அதைப் போகவிடுவதும் அச்சத்திற்கு உரியது.

இந்தக் படக்கதையானது, தனக்குச் சம்பந்தமில்லாத வழக்கில் தலையிடுகிற மனிதனைச் சித்தரித்துக் காட்டுகிறது. பகைஞராக இருக்கிற இவருடைய கோபத்திற்கு அவர் விரைவில் ஆளாகிவிடுவார். இவ்வாறு தலையிடுகிற மனிதன் தனக்கு வெற்றியுண்டாக நடந்து கொள்வான் என்று அவர்கள் இருவரும் நினைத்தவர்களாக, தங்களுடைய பகையை மறந்து குறுக்கே வந்த மனிதனுக்கு எதிராக இணைந்து சண்டையிடுவர்.

இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு மனிதர், ‘இது தனிப்பட்ட சண்டையா அல்லது யாராவது இதில் சேர்ந்து கொள்ளலாமா?” என்று வினாவுவானாகில், அவனுடைய செயல் நகைப்பிற்கிடமாயிருக்கும் அல்லவா. இருந்தபோதிலும் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தமற்ற சச்சரவில் தலையிடும்படி, நாம் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுகிறோம்.

ஒரு கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு அழைக்கப்படுகிற காவல்துறை அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறாயின் சாதாரண குடிமகன் மற்றவர்களுடைய குடும்பப் பிரச்சனையில் ஈடுபடாதிருக்க எவ்வளவு அதிகமாகக் கவனமுள்ளவனாயிருக்க வேண்டும்!

இன்றைய வசனத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக நாம் சபையில் காணும் சில பிரச்சனைகளில் காணலாம். பொதுவாகப் பிரச்சனை இருவருக்கிடையே உண்டாகிறது. பின்னர் மற்றவர்கள் ஆளுக்கொரு பக்கம் சேருகின்றனர். ஒரு பொறியெனத் தொடங்குகிற பிரச்சனை காட்டுத் தீயெனப் பரவுகிறது. இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாத மனிதர்கள் தங்களுடைய ஞானமுள்ள தீர்ப்புக்களை வழங்குகின்றனர். சினம் கொதித்தொழுந்து, நட்பு முறிந்து போகிறது, இதயங்கள் சிதறிப் போகின்றன. அந்தச் சண்டை வலுவடையும்போது சபை அறிவிப்புகளில் இதயநோய்கள், இரத்த அழுத்த நோய்கள், குடல் எரிச்சல், மற்றும் பிற உடல் கோளாறுகள் ஆகியவை பற்றிக் கேட்க முடியும். கசப்பு வேராகத் தொடங்கின ஒன்று பலருடைய வாழ்வில் களங்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மற்றவர்களுடைய சச்சரவில் தலையிடக்கூடாது என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிற அறிவுரை, “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்னும் கர்த்தருடைய சொற்களுக்கு எதிரானதாகத் தோன்றுகிறது (மத்.5:9). ஆனால் இதில் எவ்வித முரண்பாடுமில்லை. தங்களுடைய பிரச்சனையில் நடுவராயிருந்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று அவ்விருவரும் வேண்டுகோள் விடுக்கும்போது அங்கு சமாதானம் பண்ணுகிறவருக்கு இடமுண்டு. அழைக்கப்படாமல் பிறருடைய பிரசச்னையில் தலையிடுகிறவர் அங்கிருந்து மனவேதனையின்றி எளிதில் தப்பிக்கொள்ள இயலாது.

28. Dezember

»Der packt einen Hund bei den Ohren, wer im Vorbeigehen sich über einen Streit ereifert, der ihn nichts angeht.« Sprüche 26,17

Wir müssen zuerst einmal erkennen, dass der Hund, von dem in diesem Vers die Rede ist, nicht der freundliche, liebe Cockerspaniel ist, dem es vielleicht gar nichts ausmachen würde, wenn wir ihm die Ohren festhalten. Hier ist vielmehr der wilde, knurrende Straßenköter gemeint, der hinterhältig ist und die Zähne fletscht. Es wäre schon unwahrscheinlich, dass man ihm überhaupt so nahe kommt, dass man ihn bei den Ohren packen kann. Aber selbst wenn man das könnte, wäre man dann in einer verzweifelten Lage: Man hätte Angst, weiter festzuhalten, und auch genauso
viel Angst, loszulassen.

Das ist ein treffendes Bild für den Menschen, der sich in einen Streit hineinziehen lässt, der ihn gar nichts angeht. Denn bald schon hat er den Zorn der beiden Kämpfenden auf dem Hals.

Jeder von den beiden hat das Gefühl, dass der, der hier dazwischen kommt, vielleicht siegen könnte, und so vergessen sie ihre eigenen Meinungsverschiedenheiten und tun sich zusammen, um gegen den Dritten zu kämpfen.

Wir lächeln über den Iren, der zu einer Schlägerei zwischen zwei Männern hinzukam und arglos fragte: »Ist das hier ein Privatkampf, oder kann da jeder mitmachen?« Und doch steckt der Hang zum Vermitteln in jedem von uns, die Versuchung, uns in Streitigkeiten einzumischen, die eigentlich gar nichts mit uns zu tun haben.

Polizeibeamte müssen ganz besonders vorsichtig sein, wenn sie zu einer Szene gerufen werden, wo sich ein Mann mit seiner Frau zankt. Wenn das schon so ist, wie viel mehr Vorsicht sollte der Normalbürger walten lassen, bevor er sich in den häuslichen Streit von anderen einmischt!

Vielleicht findet man die besten Beispiele für den Spruch des heutigen Tages in dem Ärger, den es in einer Gemeinde geben kann. Das fängt meistens zwischen zwei Personen an. Dann ergreifen auch andere Partei. Was nur als ein Funke begonnen hat, wird schon bald zu einer Feuersbrunst. Leute, die gar nichts mit dem eigentlichen Problem zu tun haben, wollen unbedingt ihre eigene Weisheit dazugeben, so als ob sie das Orakel von Delphi persönlich wären. Es gibt Temperamentsausbrüche, Freundschaften gehen kaputt, und vielen bricht es das Herz. Und während sich der Kampf noch verschärft, hört die Gemeinde erschrocken von Herzinfarkten, Schlaganfällen, Magengeschwüren und anderen körperlichen Auswirkungen. Was als eine Wurzel der Bitterkeit anfing, hat sich ausgebreitet, bis viele davon schlimm betroffen sind.

Die Warnung, dass wir uns nicht in Streit einmischen sollen, der nur andere etwas angeht, könnte in Widerspruch stehen zu den Worten des Heilands: »Glückselig die Friedensstifter, denn sie werden Söhne Gottes heißen« (Matthäus 5,9). Aber das ist es nicht. Es gibt eine Aufgabe für Friedensstifter, wenn beide streitenden Parteien wollen, dass ihre Meinungsverschiedenheit von einem Schlichter beigelegt wird. Doch in anderen Fällen erreicht der Vermittler nur, dass er selbst in eine Situation gerät, aus der es kein leichtes und schmerzloses Entkommen mehr gibt.