December

விலைமதிப்புள்ள மனிதர்கள்

December 26

“And the King of Sodom said unto Abram, give me the persons, and take the goods to thyself.” (Gen. 14:21)

Invading armies had come to Sodom and had captured Lot, his family and great quantities of spoil. As soon as Abram heard about it, he armed his servants and pursued the invaders, finally catching up with them near Damascus and rescuing the captives and their belongings. The King of Sodom went out to meet Abram as he returned and said, “Give me the persons, and take the goods to thyself.” Abram answered that he wouldn’t take even a shoe lace from the king lest the latter would say he had made Abram rich.

There is a sense in which the King of Sodom represents Satan, trying to get believers to be occupied with material things and to neglect the people around them. Abram resisted the temptation, but many since that time have not been so successful. They have given priority to the accumulation of possessions and have paid little attention to neighbors and friends who are facing eternity without God, without Christ and without hope.

People are important; things are not. A young Christian walked into the living room where his mother was sewing and said, “Mother, I’m glad that God has given me a greater love for people than for things.” That particular mother was glad too.

It seems incongruous to weep when someone breaks your English bone china teacup, yet never to shed a tear over perishing millions. It says something when we have a phenomenal memory for baseball scores, yet whine that we have an awful time remembering people’s names. I betray my distorted sense of values when I am more upset over the damage done to my car than the injured person in the other car. It is easy to resent interruptions when we are working on some pet project, and yet the interruption may be far more important than the project.

We are often more interested in gold and silver than in men and women. A. T. Pierson said, “There is buried in gold and silver and useless ornaments in Christian homes enough to build a fleet of 50,000 vessels, ballast them with Bibles and crowd them with missionaries: build a church in every destitute hamlet and supply every living soul with the Gospel within a score of years.” Another prophet of God, J. A. Stewart, wrote, “We have used our wealth to indulge in luxuries that we do not need. We have ‘caviar tastes,’ while millions in other parts of our world are dying in the starvation of sin. We have sold our spiritual birthright-heritage for a mess of pottage.”

My heart often wonders when we Christians will abandon the mad scramble for material possessions and concentrate on the spiritual welfare of people. One human soul is worth more than all the wealth in the world. Things don’t matter. People do.

டிசம்பர் 26

சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி, ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். ஆதியாகமம் 14:21.

விலைமதிப்புள்ள மனிதர்கள்

சோதோமின் மீது போர்தொடுத்து வந்த படை லோத்துவையும் அவனுடைய குடும்பத்தாரையும் சிறைபிடித்து, பெரும் செல்வத்தையும் கொள்ளையிட்டுச் சென்றனர். இதனைக் கேள்வியுற்ற ஆபிராம், உடனே தன் ஊழியக்காரர்களுக்கு ஆயுதம் அணிவித்து கொள்ளையிட்டுச் சென்றோரைப் பின் தொடர்ந்தான். தமஸ்குவுக்கு அருகில் அவர்களை நெருங்கி, சிறைபிடிக்கப்பட்டவர்களையும், செல்வத்தையும் அவர்களிடமிருந்து மீட்டான். திரும்பிவந்த ஆபிராமைச் சந்திக்க சோதோமின் மன்னன் எதிர்கொண்டு சென்று, ‘ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும்” என்றான். ஆனால் ஆபிராம் அந்த மன்னனின் மூலமாகச் செல்வந்தன் ஆனான் என்று பெயர் பெறக்கூடாது என்பதற்காக அவனிடத்திலிருந்து ஒரு பாதரட்சையின் வாரையும் எடுத்துக்கொள்ளச் சம்மதிக்கவில்லை.

ஒரு அர்த்தத்தில் சோதோமின் அரசன் சாத்தானுக்கு அடையாளமாக இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். பொருட்ச்செல்வத்தின் மீது விசுவாசிகளை ஆர்வம்கொள்ளச் செய்து, அவர்களைச் சூழ இருக்கிற மனிதர்களை அலட்சியம் செய்யச்செய்கிறான். அந்தச் சோதனையை ஆபிராம் எதிர்த்து வெற்றி கொண்டான். ஆனால் பலர் அந்நாளிலிருந்து இந்நாள்வரை அவ்வளவாக வெற்றிபெறுவதில்லை. அவர்கள் செல்வத்தைச் சேர்ப்பதற்கு முதலிடம் கொடுத்து, அயலகத்தாரைக் குறித்தும் நண்பர்களைக் குறித்தும் கவலையற்றவர்களாயிருக்கின்றனர். தேவனற்றவர்களாகவும், கிறிஸ்து அற்றவர்களாகவும், நம்பிக்கை அற்றவர்களாகவும், இந்த அயலகத்தாரும் நண்பர்களும் நித்திய அழிவை எதிர்நோக்கி வாழ்கின்றனர் என்னும் உண்மையை அவர்கள் அலட்சியம் செய்கின்றனர்.
பொருட்கள் அல்ல, மனிதர்களே இன்றியமையாதவர்கள். ஓர் இளைஞன் துணி தைத்துக் கொண்டிருந்த அன்னையிடம் சென்று, ‘அம்மா, பொருட்செல்வத்தைக் காட்டிலும் மனிதர்கள்மீது கூடுதலாக செலுத்தத்தக்க அன்பை தேவன் எனக்கு அளித்துள்ளார். ஆகவே நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினான். அந்தத் தாயும் அதனிமித்தம் மகிழ்ச்சி அடைந்தாள்.

உங்களுடைய அழகிய தேநீர் குவளையை ஒருவர் உடைத்து விட்டார் என்று அழும் நீங்கள், உங்களைச் சூழ இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் நித்திய அழிவை நோக்கிச் செல்வதைக் கண்டும், ஒருதுளி கண்ணீர்;கூட சிந்தாமலிருப்பது பொருத்தமற்ற செயலாகும். ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் பெற்ற எண்ணிக்கையை வியத்தகு வகையில் நினைவில் கொண்டிருக்கும் உங்களுக்கு, உங்களைச் சூழ இருப்போரின் பெயர் தெரியாமலிருப்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது ஆகும். விபத்து நிகழும்போது, மற்ற வாகனத்தில் பயணம் செய்தவர் அடிபட்டுவிட்டார் என்பதைக் குறித்து எவ்வித கவலையும் அடையாமல் தனது வாகனம் பழுதடைந்து விட்டதே என்று கவலை கொள்வது அவருடைய திரிந்த இயல்பை வெளிப்படுத்துகிறது. ஒரு வேலையை நாம் செய்து கொண்டிருக்கும்போது உண்டாக்கிய இடையூறுகளைக் குறித்துச் சினமடைகிறோம். ஆனால் அந்த இடையூறுகள் நாம் செய்கிற வேலையைக் காட்டிலும் முக்கியமானது என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

“மனிதர்களைக் காட்டிலும் பொன், வெள்ளி, ஆகியவற்றில் நாம் அதிக ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம். 50000 கப்பல்களைக் கட்டி, அவற்றில் வேதாகமங்களை சுமையாக ஏற்றி, மிஷனரிகளால் நிரப்புவதற்குத் தேவையான பணம்  கிறிஸ்தவ வீடுகளில் பொன்னாகவும், வெள்ளியாகவும் பயனற்ற அணிகலன்களாகவும் இருக்கின்றன. மேலும் அவற்றைக் கொண்டு புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு சிற்றூரிலும் ஒரு ஆலயத்தைக் கட்டலாம். ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் நற்செய்தி நூலைக் கொடுக்கலாம். இவை யாவற்றையும் 20 ஆண்டுகளுக்குள்ளாகச் செய்து முடிக்கக்கூடும்” என்று A.T.பியர்சன் என்பார் கூறியுள்ளார். “தேவையற்ற வசதிகளுக்காக நாம் நமது செல்வத்தைச் செலவு செய்திருக்கிறோம். ஆனால் உலகமெங்கும் பாவம் என்னும் பசிக்கொடுமையால் பல்லாயிரக்கணக்கோர் இறந்து கொண்டிருக்கின்றனர். நாம் நமது ஆவிக்குரிய பிறப்புரிமையை மற்றும் மரபுரிமையை ஒரு கலயம் கூழுக்காக விற்றுப்போட்டோம்” என்று தேவனுடைய மற்றதொரு தீர்க்கதரிசி J. A. ஸ்டுவார்ட் கூறியுள்ளார்.

பொருட்செல்வத்திற்காக, மதியீனமான முறையில் போராடுகிற கிறிஸ்தவர்களாகிய நாம், எப்பொழுது அதனை விட்டொழித்து, மனிதர்களுடைய ஆவிக்குரிய நலனுக்காக கவனம் செலுத்துவோம்?. உலகம் முழுவதும் உள்ள செல்வத்தைக் காட்டிலும் ஒரு மனிதனுடைய ஆத்துமா விலையேறப்பெற்றதாகும். பொருட்கள் அல்ல மனிதர்களே இன்றியமையாதவர்கள்.

மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரம், அடங்கிய முக்கூறுடைய படைப்பாகத் திகழ்கிறான். தன் சரீரத்தினால் உலக உணர்வையும், ஆத்துமாவினால் சுய உணர்வையும், ஆவியினால் தேவ உணர்வையும் பெற்றுள்ள விலை மதிப்புள்ள மேலானவனாக உள்ளான்.

26. Dezember

»Und der König von Sodom sagte zu Abram: Gib mir die Seelen, die Habe aber nimm für dich!« 1. Mose 14,21

Fremde Eindringlinge waren in Sodom eingefallen und hatten Lot gefangen genommen, auch seine Familie und eine große Menge an Beute hatten sie mitgenommen. Sobald Abram davon hörte, rüstete er seine Knechte mit Waffen aus und verfolgte die Eindringlinge; nahe bei Damaskus holte er sie endlich ein und rettete die Gefangenen und ihre Habe. Der König von Sodom ging nun Abram entgegen, als der zurückkehrte, und sagte zu ihm: »Gib mir die Seelen, die Habe aber nimm für dich!« Doch Abram antwortete, er würde noch nicht einmal einen Schuhriemen von dem
König annehmen, damit der nicht sagen könnte, er hätte Abram reich gemacht.

In einem gewissen Sinn steht der König von Sodom hier für Satan, der immer will, dass sich die Gläubigen für materielle Dinge interessieren und darüber die Menschen um sie herum vergessen. Abram widerstand dieser Versuchung, aber viele andere sind seitdem in ähnlichen Situationen nicht so erfolgreich gewesen. Sie haben die Ansammlung von Besitztümern für das Wichtigste gehalten und ihren Nächsten und Freunden nur wenig Aufmerksamkeit gewidmet, die doch vor einer Ewigkeit ohne Gott standen, ohne Jesus Christus und ohne Hoffnung.

Menschen sind immer wichtig; Dinge nicht. Ein junger Christ ging einmal ins Wohnzimmer, wo seine Mutter gerade nähte, und sagte unvermittelt: »Mutter, ich bin froh, dass Gott mir für Menschen eine größere Liebe geschenkt hat als für Dinge.« Diese Mutter war darüber genauso froh. Es scheint wirklich unangemessen, wenn wir darüber weinen, dass jemand unsere wertvolle chinesische Teetasse aus Knochenporzellan zerbrochen hat, aber niemals auch nur eine Träne deswegen vergießen, dass Millionen von Menschen ohne Gott zugrunde gehen. Ich lasse mir anmerken, dass
mein Wertempfinden aus dem Gleichgewicht gekommen ist, wenn ich mich bei einem Unfall mehr über den Schaden an meinem eigenen Wagen aufrege als über den Verletzten im anderen Auto. Wir ärgern uns sehr leicht, wenn wir gerade bei der Arbeit an unserem Lieblingsvorhaben gestört werden, doch die Unterbrechung geschieht vielleicht aus einem wichtigen Grund, der viel mehr Bedeutung hat als unsere Pläne.

Oft haben wir mehr Interesse an Gold und Silber als an Männern und Frauen. A.T. Pierson hat gesagt: »In christlichen Häusern ist ein Schatz vergraben an Gold und Silber und nutzlosen Schmuckgegenständen; das wäre genug Geld, um eine Flotte von 50000 Schiffen auszurüsten, sie mit Bibeln voll zu laden und mit Missionaren auszusenden. So könnte eine Kirche in jedem elenden, armen Dörfchen errichtet werden und nach einigen Jahren jeder lebende Mensch mit dem Evangelium erreicht werden.« Und ein anderer Prophet Gottes, J.A. Stewart, hat geschrieben: »Wir haben unseren Reichtum dazu verwendet, uns Luxusgüter anzuschaffen, die wir eigentlich nicht brauchen. Wir haben Geschmack an Kaviar gefunden, während Millionen von Menschen in anderen Teilen unserer Welt in der Sünde verhungern. Wir haben unser geistliches Erstgeburtsrecht für ein Linsengericht verkauft.« Mein Herz fragt sich oft, wann wir Christen wohl das verrückte Jagen nach materiellen Besitztümern lassen und uns auf das geistliche Wohlergehen der Menschen konzentrieren werden. Eine menschliche Seele ist mehr wert als aller Reichtum der Welt. Dinge spielen keine Rolle, nur Menschen.