August

பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்

August 20

“If ye endure chastening, God dealeth with you as with sons; for what son is he whom the father chasteneth not?” (Heb. 12:7)

The words chastening, chasteneth, chastisement and chastened occur seven times in the first 11 verses of Hebrews 12. As a result it is easy for the casual reader to get a wrong impression. He might easily picture God as an angry Father who is forever whipping His children. This misconception arises from thinking of chastening as nothing but punishment.

It is a great relief to learn that chastening in the New Testament has a much broader meaning than that. It really means child-training, and includes all parental activity that is involved in raising a child. Kittel defines it as “the upbringing and handling of the child which is growing up to maturity and which needs direction, teaching, instruction and a certain measure of compulsion in the form of discipline or even chastisement.”

The Christians to whom the book of Hebrews was written were suffering persecution. The writer speaks of this persecution as part of the chastening of the Lord. Does this mean that God had sent the persecution? Certainly not! It was inspired by enemies of the gospel. Was God punishing the Christians because of their sins? No, the persecution was probably brought on because of their faithful witness for Him. In what sense then could persecution be said to be the chastening of the Lord? In the sense that God allowed it to take place, and then used it as part of His educative program in the lives of His people. In other words, He used the persecution to refine, mature and conform His children to the image of His Son.

It goes without saying that this type of chastening is not pleasant at the time. The chisel deals roughly with the marble. The furnace subjects the gold to intense heat. But it is all worthwhile when the face of the man appears in the marble and when the gold is purified from dross.

It is self-defeating to despise the chastening of the Lord or to faint under it. The only proper attitude is to remember that God is using it as a training device, then to try to get the maximum benefit from it. That is what the writer means when he says that “it yieldeth the peaceable fruit of righteousness unto them which are exercised thereby” (Heb. 12:11b).

ஆகஸ்டு 20

நீங்கள் சிட்சையை சகிக்கிறவர்களாயிருந்தால், தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எபிரெயர் 12:7

பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்

சிட்சை, சிட்சிக்கிறார், சிட்சித்தார்கள், என்னும் சொற்கள் ஏழுமுறை எபிரெயர் 12ம் அதிகாரம் முதல்11 வசனங்களில் கையாளப்பட்டுள்ளன. ஆகவே மேலோட்டமாகப் படிக்கிற எவரும் இதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும். தேவன் சினம் மிகுந்த தந்தை என்றும், எப்பொழுதும் தமது பிள்ளைகளைச் சவுக்கினால் அடிக்கிறவர் என்றும் தவறாக எண்ணிவிடுவர். சிட்சை என்பது தண்டனையே என்று எண்ணுகிறதால் ஏற்பட்டதே இந்தத் தவறுக்குக் காரணம்.

சிட்சை என்ற சொல்லிற்கு தண்டனை என்னும் பொருளைத்தவிர, சற்று வேறுபட்ட பொருளையும் புதிய ஏற்பாட்டில் காணலாம். இப்பொருள் நமது மனக்குழப்பம் நீங்கப் போதுமானதாக இருக்கிறது. இது பிள்ளைகளுக்குத் தரப்படுகிற பயிற்சியைக் குறிக்கிறது. பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்கிற எல்லாச் செயல்களையும் இச்சொல் குறிக்கிறது. கிட்டல் என்பார், ‘பிள்ளைகள் வளர்ந்து வயதுற்கு வரும்போது அவர்களைப் பக்குவம் அடைந்தவர்களாக ஆக்குவதற்குப் பெற்றோர்கள் வழங்குகிற அறிவுரை கூறுதல், வழிகாட்டுதல், மற்றும் கட்டாயமான ஒழுங்குகள் எல்லாம் சிட்சைகளே” என்று இதனை வரையுறுத்துக் கூறுகிறார்.

எபிரெயர் மடல் பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட நூலாகும். இந்தப் பாடுகளை கர்த்தர் வழங்குகிற சிட்சையின் ஒரு பங்கு என்று கூறுகிறார் இம்மடலின் எழுத்தாளர். அவ்வாறாயின், உபத்திரங்களை தேவனே அனுப்பினார் என்பது தான் இதன் பொருளா? நிச்சயமாக இல்லை! நற்செய்திக்கு எதிரிகளாக விளங்கினவர்களே இந்த உபத்திரவங்களுக்குக் காரணர். கிறிஸ்தவர்களுடைய பாவத்தின் காரணமாக தேவன் அவர்களைத் தண்டித்தாரா? இல்லை, அவருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக விளங்கியதன் காரணத்தால் இப்பாடுகளை அவர்கள் அடைந்தார்கள் என்றே கூற வேண்டும். அப்படியென்றால் பாடுகளைக் கர்த்தர் கொடுத்த சிட்சை என்று எவ்வாறு கூற இயலும்? இப்பாடுகளை விசுவாசிகளின் வாழ்க்கையில் தேவன் அனுமதித்தார். பின்னர் அவர்களுக்கு தேவையான பாடங்களைப் புகட்டுவதற்குகாக அவற்றைப் பயன்படுத்தினார். தம்முடைய பிள்ளைகளை நேர்மையுள்ளவர்களாகவும், முதிர்ச்சி அடைந்தவர்களாகவும், ஆக்கி தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றுவதற்கு உபத்திரங்களைத் தேவன் பயன்படுத்தினார் என்று இதனை நாம் வேறுவகையிலும் கூறலாம்.

இப்பாடுகளை அனுபவிக்கிற காலத்தில், இவை மகிழ்ச்சியைத்தரா என்று சொல்லாமலே விளங்கும். பளிங்குக் கல்லின் மீது இடறப்படுகிற உளி சற்றுக் கடினமாகவே செயல்ப்படும். புடமிடப்படும் பொன் கடுஞ்சூட்டைத் தாங்கியே ஆகவேண்டும். பளபளப்பாக்கப்பட்ட பளிங்குக்கல் மனிதனுடைய முகத்தைப் பிரதிபலித்துக் காட்டும் போது, களிம்பு நீங்கிய பொன் தூய்மையைப் பெற்றபோதும், நடந்தவை யாவும் தகுந்தவை என்று விளங்கும்.
கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணுவதும், அதனால் சோர்ந்து போவதும், தன்னையே தோல்வியடையச் செய்வதாகக் காணப்படும். அதைப் பயிற்சியாக தேவன் பயன்படுத்துகிறார் என்று நினைவுகூர்வதே தகுந்த மனப்பான்மையாகும். அவ்வாறு நினைத்து அதிலிருந்து கூடுதலாகப் பயனைப் பெற முயற்ச்சி செய்ய வேண்டும். ‘அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்தரும்” என்று இம்மடலின் ஆசிரியர் எழுதியபோது இப்பொருள்படவே எழுதியுள்ளார்.

20. August

»Was ihr erduldet, ist zur Züchtigung: Gott handelt mit euch als Söhnen; denn wer ist ein Sohn, den der Vater nicht züchtigt?« Hebräer 12,7

Die Worte »Züchtigung«, »züchtigen«, »Züchtiger« kommen sechsmal in den ersten elf Versen von Hebräer 12 vor. Dadurch kann der oberflächliche Leser leicht einen falschen Eindruck gewinnen. Er könnte sich Gott als zornigen Vater vorstellen, der seine Kinder ohne Unterlass schlägt. Diese falsche Vorstellung resultiert aus der Meinung, Züchtigung sei ausschließlich Bestrafung.

Zu unserer großen Erleichterung lernen wir, dass Züchtigung im Neuen Testament aber eine viel weitere Bedeutung hat. »Züchtigung« bedeutet eigentlich »Kindererziehung « und schließt alle elterlichen Aktivitäten ein, die zum Erziehen eines Kindes gehören. Kittel (Theologisches Wörterbuch zum Neuen Testament) definiert sie als »das Behandeln und Erziehen des Kindes während seines Reifungsprozesses, wobei es Führung, Belehrung, Unterweisung und auch eines gewissen Maßes an Druck in Form von Verboten oder sogar körperlicher Züchtigung bedarf«.

Die Christen, an die der Hebräerbrief gerichtet war, litten unter Verfolgung. Der Schreiber spricht von dieser Verfolgung als Teil der Züchtigung des Herrn. Bedeutet dies, dass Gott die Verfolgung gesandt hat? Gewiss nicht! Sie wurde von den Feinden des Evangeliums angestachelt. Bestrafte Gott die Christen wegen ihrer Sünden? Nein, die Verfolgung entstand wahrscheinlich gerade wegen ihres treuen Zeugnisses für Ihn. In welchem Sinn konnte dann gesagt werden, dass die Verfolgung die Züchtigung des Herrn war? In dem Sinn, dass Gott sie zuließ, um sie dann als Teil Seines Erziehungsprogrammes im Leben der Seinen zu verwenden. Mit anderen Worten: Er gebrauchte die Verfolgung, um Seine Kinder zu läutern, reifen zu lassen und sie in das Bild Seines Sohnes umzugestalten.

Es ist keine Frage, dass diese Form von Züchtigung in der Gegenwart alles andere als angenehm ist. Der Meißel geht hart mit dem Marmor um. Der Schmelzofen setzt das Gold größter Hitze aus. Aber Schmerz und Mühen lohnen sich, wenn das Gesicht des Menschen aus dem Marmor zum Vorschein kommt und wenn das Gold von jeder Verunreinigung geläutert ist.

Wir schneiden uns ins eigene Fleisch, wenn wir die Züchtigung des Herrn verachten oder unter ihr ermatten. Die einzige richtige Haltung ist, dass wir immer daran denken, dass Gott sie als Trainingsmittel benutzt, um dadurch den größtmöglichen Nutzen aus ihr zu ziehen. Das meint der Schreiber, wenn er sagt, dass sie »die friedsame Frucht der Gerechtigkeit denen gibt, die durch sie geübt sind« (Hebräer 12,11b).