August

பொருளாசை

August 15

“Take heed, and beware of covetousness.” (Lu. 12:15)

Covetousness is the excessive desire for wealth or possessions. It is a mania that grips people, causing them to grasp for more and more. It is a fever that drives them to crave things they don’t actually need.

We see covetousness in the business man who is never satisfied. He says he will stop when he has accumulated a certain amount, but when that time comes, he is greedy for more.

We see it in the housewife whose life is one unending shopping spree. She squirrels away tons of miscellany till her attic, garage and storage area bulge with the loot.

We see it in the tradition of Christmas gifts and birthday gifts. Young and old alike judge the success of the occasion by the amount of booty they are able to accumulate.

We see it in the disposition of an estate. When someone dies, his relatives and friends shed a ritual tear, then descend like vultures to divide the prey, often starting a civil war in the process.

Covetousness is idolatry (Eph. 5:5; Col. 3:5). It puts self-will in the place of God’s will. It expresses dissatisfaction with what God has given, and is determined to get more, no matter what the cost may be.

Covetousness is a lie, creating the impression that happiness is found in the possession of material things. The story is told of a man who could have anything he wanted by merely wishing for it. He wished for a mansion, servants, a Cadillac, a yacht and presto! they were there instantly. At first it was exhilarating, but then as he began to run out of new ideas, he became dissatisfied. Finally he said, “I want to get out of here. I want to create something, to suffer something. I’d rather be in hell than here.” The attendant answered, “Where do you think you are?”

Covetousness tempts people to compromise, to cheat, to sin in order to get what they want.

It unfits a man for leadership in the church (1 Tim. 3:3). Ronald Sider asks, “Would it not be more biblical to apply church discipline to people whose greedy acquisitiveness has led to ‘financial success’ than to elect them to the board of elders?”

When greed leads to embezzlement, extortion or other public scandals, it calls for excommunication (1 Cor. 5:11).

And if covetousness is not confessed and forsaken, it leads to exclusion from the Kingdom of God (1 Cor. 6:10).

ஆகஸ்டு 15

பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். லூக்கா:12:15

பொருளாசை

செல்வத்தின் மீதும்,உடமைகள் மீதும் பேராசை கொள்வதே இச்சையாகும். இந்தப் பித்து மனிதர்களை இறுகப்பற்றிக் கொள்கிறது. இன்னும் மிகுதியாக செல்வம் வேண்டுமென்றும் ஆவலை அது தூண்டிவிடுகிறது. உண்மையாகவே அவர்களுக்கு தேவையில்லாத பொருட்கள்மீது நாட்டம் கொள்ள செய்யும் ஒரு வெறியாக அது காணப்படுகிறது.

ஒருக்காலும் மனநிறைவு அடையாத தொழிலதிபரிடம் இப்பேராசையைக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட அளவுசெல்வத்தைச் சேர்த்தவுடன் தொழிலை நிறுத்திவிடப் போவதாக கூறுனாலும், அந்த நேரம் வந்தவுடன், இன்னும் அதிகம் வேண்டுமென்று அவன் பேராசை கொள்கிறான். இவ்வித பேராசையைக் குடும்பத் தலைவியிடத்திலும் காண்கிறோம். வீட்டில் மேலறையும், பொருட்கள் வைக்கும் அறையும், வாகனம் நிறுத்துமிடமும் நிறைந்து வழியும்மட்டும் அவள் வாங்கிக் கொண்டிருக்கிறாள். அதற்கு முடிவேயில்லை.

கிறிஸ்மஸ் மற்றும் பிறந்தநாளில் அன்பளிப்புக்கள் வழங்கப்படும் பழக்கத்தில் இதனைக் காண்கிறோம். அந்த நாட்களில் தாங்கள் சேர்த்த கொள்ளைப் பொருட்களின் அளவைக் கொண்டே தங்களது வெற்றியைச் சிறியோரும், பொரியோரும், ஒன்றுபோலக் கணக்கிடுகின்றனர்.

ஒருவர் விட்டுச் சென்ற செல்வத்தைப் பங்குபிரிப்பதில் இப்பேராசையைக் காணலாம். ஒருவர் இறக்கும்போது அவருடைய உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர் பின்னர் இரையைப் பற்றிட இறங்கிவரும் பருந்துக்களைப்போலச் செயல்புரிவர். சிலவேளைகளில் அதற்கென நீதிமன்றங்களில் வழக்குக்களும் தொடுக்கப்படும்.
பொருளாசை சிலை வணக்கமாகும். (எபேசி.5:5, கொலோ.3:5). இறைவனுடைய விருப்பத்திற்கு மாறாக தனது விருப்பத்திற்கு முதலிடம் கொடுப்பதாக இது விளங்குகிறது. தேவன் கொடுத்ததில் மனநிறைவு இல்லை என்பதை இது காட்டுகிறது. என்ன விலை கொடுத்தாகிலும் அதிகமானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் முடிவை எடுக்கச் செய்கிறது.

பொருளாசை பொய்யாகும். பொருளுடைமையில் மகிழ்ச்சி கிடைக்குமெனும் எண்ணத்தை அது உருவாக்கிறது. ஒரு பொருளை விரும்பினால் அதனை உடனடியாகப் பற்றுக்கொள்கிற மனிதனைப்பற்றிய கதையை நாம் அறிவோம். மாளிகை, வேலைக்காரர்கள், உயர்தரக்கார், உல்லாசப்படகு, மற்றும் பல வேண்டுமென்று விரும்பினான். எல்லாம் உடனடியாகக் கிடைத்தன. முதலில் அவனுக்கு அது பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. எல்லாம் கிடைத்தபிறகு இனி என்ன வேண்டுமென்று சிந்தித்தும் புதிதாக மனதில் ஒன்றும் தோன்றவில்லை. அப்பொழுது மனநிறைவை இழந்து போனான். இறுதியாக, ‘இங்கிருந்து நான் வெளியேறினால் போதும். நான் ஒன்றை உருவாக்க விரும்புகிறேன். அதற்காகப் பாடுபட விரும்புகிறேன். இங்கிருப்பதற்கு பதிலாக நான் நரகத்தில் இருந்தால் நலமாயிருக்கும்” என்று கூறினான். அவனுடைய வேலைக்காரன், ‘வேறு எங்கே இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்;கள்?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

ஏமாற்றியோ, கொள்கைகளை விட்டுக்கொடுத்தோ, பாவம்செய்தோ, தாங்கள் விரும்பியதை அடைந்திட இந்தப் பொருளாசை மனிதர்களைத் தூண்டி விடுகிறது.
சபையில் கண்காணியாக விளங்குவதற்குரிய தகுதியை இப்பொருளாசையால் ஒருவன் இழந்து போகிறான். (1.தீமோ.3:3). ‘பேராசை மிகுந்த ஈட்டும் பண்பினாலே ‘பொருளாதார வெற்றியை” அடைந்த மனிதனை கண்காணிகளில் ஒருவனாகத் தெரிந்துகொள்வதைக் காட்டிலும், அந்த மனிதன்மீது சபை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுதானே திருமறைக்கு உகந்தது.? என்று திருவாளர் ரோனால்ட் சைடர் கேள்வி எழுப்பினார்.

பணத்தைக் கையாடுதல், பலவந்தமாய்ப் பணம் திரட்டுதல், பொதுக் கொள்கைகள், ஆகியவற்றில் ஈடுபடும்படி பேராசை தூண்டிவிடுகிறது. இவ்வகையினர் சபைக்குப் புறம்பாக்கப்பட வேண்டுமென்று வேதம் கற்பிக்கிறது (1.கொரி:5:11).

பேராசை அறிக்கை செய்யப்பட்டு, கைவிடப்படவில்லையெனில் இறையரசைச் சுதந்தரிக்க முடியாது (1.கொரி.6:10).

15. August

»Sehet zu, und hütet euch vor aller Habsucht.« Lukas 12,15

Habsucht ist die übermäßige Begierde nach Reichtum und Besitz. Es ist eine Sucht, welche die Menschen in ihren Bann schlägt, so dass sie immer mehr und mehr haben wollen. Es ist ein Fieber, das sie dazu treibt, Dinge zu begehren, die sie in Wirklichkeit gar nicht brauchen.

Wir sehen Habsucht bei dem Geschäftsmann, der nie zufrieden ist. Er sagt, dass er aufhören will, wenn er einen bestimmten Betrag angehäuft hat, aber wenn es so weit ist, ist er begierig nach mehr.

Wir sehen es bei der Hausfrau, deren Leben eine ununterbrochene Einkaufstour ist. Sie rafft und hortet Tonnen von Kleinkram, bis ihr Speicher, die Garage und der Keller aus allen Nähten platzen.

Wir sehen es in der Tradition der Weihnachts- und Geburtstagsgeschenke. Jung und Alt beurteilen den Erfolg des Festes nach der Höhe der Beute, die sich angehäuft hat.

Wir sehen es bei der Übergabe eines Erbes. Wenn jemand stirbt, dann vergießen die Verwandten und Bekannten eine formelle Träne, um sich dann wie Geier auf die Beute zu stürzen, wobei oft noch ein kleiner Bürgerkrieg daraus entsteht.

Habsucht ist Götzendienst (siehe Epheser 5,5; Kolosser 3,5). Sie setzt den Eigenwillen an die Stelle des Willens Gottes. Sie drückt Unzufriedenheit mit dem aus, was Gott gegeben hat, und ist entschlossen, mehr zu bekommen, egal was es kosten mag. Habsucht ist eine Lüge, weil sie den Eindruck erweckt, als könnte das Glück im Besitz materieller Güter gefunden werden. Es gibt eine Geschichte von einem Mann, der alles haben konnte, was er wollte, indem er es sich einfach wünschte. Er wünschte sich ein Landhaus, Diener, einen Cadillac, eine Yacht und – simsalabim! – alles war da. Anfangs machte es großen Spaß, aber als ihm allmählich keine neuen Ideen mehr einfielen, wurde er unzufrieden. Schließlich sagte er: »Ich möchte hier weg. Ich möchte
etwas schaffen, etwas leiden. Ich möchte lieber in der Hölle sein als hier.« Sein Diener antwortete: »Was glauben Sie wohl, wo Sie sind?«

Habsucht verführt die Menschen dazu, Kompromisse zu schließen, zu betrügen und zu sündigen, um zu bekommen, was sie wollen.

Sie disqualifizieren einen Mann von der Führungsposition in der Gemeinde (1. Timotheus 3,3). Ronald Sider fragt: »Wäre es nicht biblischer, Menschen, deren gieriges Habenwollen sie zu ›finanziellem Erfolg‹ geführt hat, mit Gemeindezucht zu belegen, anstatt sie zu Ältesten zu wählen?«

Wenn Habsucht zu Veruntreuung, Erpressung oder anderen öffentlichen Skandalen führt, dann verlangt sie den Ausschluss des Betreffenden aus der Gemeinde (1. Korinther 5,11).

Und wenn Habsucht nicht bekannt und aufgegeben wird, führt sie letztendlich zum Ausschluss vom Reich Gottes (1. Korinther 6,10).