August

கிறிஸ்துவின் பிரசன்னம்

August 13

“Where two or three are gathered together in my name, there am I in the midst.” (Matt. 18:20)

When Jesus spoke these words, He was referring to a meeting of the church convened to deal with a sinning member who refuses to repent. Other efforts to handle the offender have failed and now he is brought before the church. If he still refuses to repent; he must be disfellowshipped. The Lord Jesus promises His presence at such a meeting called to deal with a matter of church discipline.

But the verse surely has a wider application. It is true wherever and whenever two or three are gathered in His Name. To gather in His Name means to meet as a Christian assembly. It means to gather together by His authority, acting on His behalf. It means to gather with Him as the attraction. It means to gather in accordance with the practice of the early Christians for “the apostles’ doctrine and fellowship, and in breaking of bread, and in prayers” (Acts. 2:42). It means to gather with Christ as the center, to gather to Him (Gen. 49:10; Psa. 50:5).

Wherever believers are thus gathered to the Person of the Lord Jesus, He promises to be present. But someone may ask, “Isn’t He present everywhere? As the omnipresent One, is He not in all places at one and the same time?” The answer is, of course, that He is. But He promises to be present in a special way when saints gather in His Name.

“…there am I in the midst.” That is, in itself, the strongest single reason why we should be faithful in attending all the meetings of the local assembly. The Lord Jesus is there in a special way. Many times we may not be conscious of His promised presence. At those times we accept the fact by faith, based upon His promise. But there are other times when He manifests Himself to us in an unusual way. Times when heaven seems to bend very low. Times when all hearts are bowed beneath the influence of the Word. Times when the glory of the Lord so fills the place that a deep sense of reverential awe grips the people and tears flow freely. Times when our hearts burn within us.

We never know the times of these sacred visitations. They come unannounced and unexpectedly. If we are not present, we miss them. Then we share a loss similar to that of Thomas. He was not present when the risen, glorified Lord Jesus appeared to the disciples on the evening of His resurrection (John 20:24). It was a moment of glory that could never be recaptured.

If we really believe Christ is present when His people gather in His Name, we will be much more determined to attend than if the President were going to be there. Nothing short of death or terminal illness would hinder our presence.

ஆகஸ்டு 13

இரண்டு போராவது மூன்று போராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். மத்தேயு 18:20.

கிறிஸ்துவின் பிரசன்னம்

பாவம் செய்த சபையுறுப்பினர் ஒருவர், தனது தவறுக்காக மனம்வருந்த மறுக்கும்போது, அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்காகக் கூடுகிற சபைக்கூட்டத்தைப் பற்றியே இயேசு கிறிஸ்து இங்கே பேசுகிறார். குற்றம் இழைத்தவர் சீர்திருந்தும் பொருட்டு மேற்கொண்ட பிறமுயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, இவர் சபைக்கு முன்னர் கொண்டுவரப்படுகிறார். பின்னரும் அவர் மனம்வருந்த மறுப்பாராயின், ஐக்கியத்தின்று அவரை நீக்கவேண்டும். இவ்வசனம் நிச்சயமாக இன்னும் பல பொருட்களைக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் இருவர் அல்லது மூவர் அவருடைய திருப்பெயரில் கூடுகிறார்களோ அந்நேரங்களையும் இவ்வசனம் குறிக்கிறது. அவருடையபெயரில் கூடுவது, கிறிஸ்தவ சபை கூடுவதைக் குறிக்கிறது. அவர் தம்மிடத்தில் தமது மக்களை இழுத்துக்கொள்ளக் கூடியவராக இருப்பதன் அடிப்படையில், அவரோடு கூடுவதை இது குறிக்கிறது. ‘அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அப்பம் பிட்க்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும், உறுதியாய்த் தரித்திருக்கும்படி” கூடின தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வழக்கதிற்கேற்ப சபைகூடுவதை இது குறிக்கிறது. (அப்.2:24). கிறிஸ்துவை நாயகராகப் பாராட்டி, அவரிடத்தில் சேருவதை இது குறிக்கிறது (ஆதி.49:10, சங்:50:5).

இவ்விதமாக விசுவாசிகள் எங்கெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை கூடுகிறார்களோ, அங்கெல்லாம் அவர் உடன் இருப்பதாக வாக்குறுதி தந்திருக்கிறார். ஆனால், ‘அவருடைய பிரசன்னம் எல்லா இடங்களிலும் இருக்கிறதில்லையா? சர்வ வியாபியாக அவர் இருப்பதால் ஒரே நேரத்தில் அவர் எல்லா இடங்களிலும் இருப்பார் அல்லவா?”என்று சிலர் வினவக்கூடும். ஆம், அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். ஆனாலும் பரிசுத்தவான்கள் அவருடைய திருப்பெயரில் கூடியிருக்கின்ற இடங்களில் அவரது பிரசன்னம் ஒரு சிறப்பான வகையில் இருக்கும் என்று வாக்குறுதி தந்துள்ளார்.

‘அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” உள்ளுர் சபையின் அனைத்துக் கூட்டங்களிலும்நாம் கலந்து கொள்வதற்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும் என்பதற்காக வலிமைவாய்ந்த காரணத்தை இந்தச் சொற்களில் காண்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிறப்பான வகையில் அங்கே இருக்கிறார். அவர் வாக்குரைத்துள்ள பிரசன்னத்தைப் பல வேளைகளில் நாம் உணராதிருக்கிறோம். ஆனாலும் அவ்வேளைகளில் அவருடைய வாக்குறுதியின்படி விசுவாசத்தின் உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், வழக்கத்திற்கு மாறான வகையில் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகிற சமயங்களும் உள்ளன. பரலோகம் நம்மை நோக்கி குனிந்து வருகிறதாக அவ்வேளைகள் காணப்படும். திருமறையின் ஆதிக்கத்திற்குள் எல்லா உள்ளங்களும் மறைந்திருக்கும் நேரங்களாக அவை இருக்கும். கூடியிருக்கிற இடத்தில் கர்த்தருடைய மகிமை நிறைந்திருப்பதாகவும், அவருடைய மகத்துவமான மேன்மை மக்களை ஆழமாகப் பற்றிக் கொண்டிருப்பதாகவும் காணப்பட்டு, அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும். சில வேளைகளில் நமது இருதயங்கள் நமக்குள்ளாக எரிந்து பிரகாசிக்கும்.

இப்புனித பிரசன்னங்கள் எப்பொழுது நிகழும் என்பதை நாம் அறியோம். முன்னறிவிப்பு ஏதுமின்றி எதிர்பாராத வண்ணம் அவருடைய பிரசன்னம் நிகழும். ஆகவே, சபை கூடிவருகிறபோது நாம் கலந்து கொள்ளவில்லையெனில், அவ்வரிய அனுபவங்களைப் பெறாது போய்விடுவோம். தோமாவின் இழப்பிற்கு ஒப்பான இழப்பை நாம் அடைவோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்த நாள் மாலை மகிமையடைந்த நிலையில் தம்முடைய சீடர்களுக்கு முன் தரிசனமானபோது தோமா அங்கில்லை (யோவான் 20:24). மகிமையான அத்தகைய நேரத்தை நாம் திரும்பவும் பெறமாட்டோம்.
பரிசுத்தவான்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூடும் வேளைகளில், அங்கே அவர் பிரசன்னமாவார் என்று உண்மையாகவே நாம் நம்புவோமானால், அக்கூட்டங்களில் கலந்துகொள்ள உறுதியான தீர்மானம் எடுத்தவர்களாக இருப்போம். ஒரு பிரமுகர் வருகிறார் என்பதால் சபைக்கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும் அது சிறந்ததல்லவா?. மரணமோ, நீங்கா வியாதியோ, தவிர வேறொன்றும் நாம் சபைக்குச் செல்வதைத் தடுக்கக்கூடாது.

13. August

»Denn wo zwei oder drei versammelt sind in meinem Namen, da bin ich in ihrer Mitte.« Matthäus 18,20

Als der Herr Jesus diese Worte sprach, bezog Er sich auf eine Gemeindeversammlung, die zusammengekommen ist, um mit einem in der Sünde lebenden unbußfertigen Glied der Gemeinde zu handeln. Alle anderen Versuche, den Sünder zur Einsicht zu bringen, sind fehlgeschlagen, so dass er schließlich vor die Gemeinde gebracht wird. Wenn er immer noch nicht Buße tun will, muss er aus der Gemeinschaft ausgeschlossen werden. Der Herr Jesus verheißt Seine Gegenwart bei einem solchen Zusammenkommen, wo es um eine Frage der Gemeindezucht geht.

Aber der Vers hat sicherlich eine breitere Anwendung. Er ist wahr, wo immer und wann immer zwei oder drei in Seinem Namen versammelt sind. Sich in Seinem Namen zu versammeln heißt, als eine christliche Versammlung zusammenzukommen. Es heißt, kraft Seiner Autorität zusammenzukommen und in Seinem Namen zu handeln. Es heißt, sich zu Ihm als dem alleinigen Anziehungspunkt zu versammeln. Es heißt, in Übereinstimmung mit der Praxis der ersten Christen sich zur »Lehre der Apostel, der Gemeinschaft, dem Brechen des Brotes und den Gebeten« zu versammeln (siehe Apostelgeschichte 2,42). Es heißt, mit Christus als Mittelpunkt zusammenzukommen, sich zu Ihm hin zu versammeln (siehe Psalm 50,5; 1. Mose 49,10).

Wo immer Gläubige auf diese Weise zur Person des Herrn Jesus hin versammelt sind, verheißt Er Seine Gegenwart. Nun fragt vielleicht jemand: »Aber ist Er nicht überall gegenwärtig? Ist Er als der allgegenwärtige Gott nicht an allen Orten gleichzeitig? « Nun, die Antwort darauf ist natürlich »Ja«. Doch Er verheißt in ganz besonderer Weise Seine Gegenwart, wenn sich die Heiligen in Seinem Namen versammeln.

»… da bin ich in ihrer Mitte.« Das ist in sich selbst das stärkste Einzelargument, warum wir treu alle Zusammenkünfte der örtlichen Versammlung besuchen sollten. Der Herr Jesus ist dort auf besondere Weise gegenwärtig. Oft sind wir uns Seiner verheißenen Gegenwart vielleicht gar nicht bewusst. In solchen Zeiten ergreifen wir die Tatsache im Glauben, indem wir uns auf Seine Verheißung stützen. Aber es gibt andere Zeiten, wo Er sich uns auf ungewöhnliche Weise offenbart. Zeiten, wo der Himmel sich anscheinend tief herniederneigt. Zeiten, wo sich alle Herzen unter
dem spürbaren Einfluss des Wortes beugen. Zeiten, wo die Herrlichkeit des Herrn so den Ort erfüllt, dass ein Gefühl tiefer Ehrfurcht die Menschen ergreift und die Tränen ungehindert fließen. Zeiten, in denen unsere Herzen in uns brennen.

Wir kennen die Zeiten dieser heiligen Heimsuchungen nicht im Voraus. Sie kommen ohne Ankündigung und unerwartet. Wenn wir nicht anwesend sind, versäumen wir sie. Dann erfahren wir einen Verlust ähnlich dem von Thomas. Er war nicht anwesend, als der auferstandene, verherrlichte Herr Jesus den Jüngern am Abend Seiner Auferstehung erschien (Johannes 20,24). Es war ein einzigartiger Augenblick der Herrlichkeit.

Wenn wir wirklich glauben, dass Christus gegenwärtig ist, wenn sich die Seinen in Seinem Namen versammeln, ist es uns noch wichtiger, keine Versammlung zu versäumen, als wenn der Bundespräsident persönlich dort wäre. Nichts weniger als der Tod oder eine tödliche Krankheit würde unsere Anwesenheit verhindern.