August

இறை அற்புதங்கள்

August 10

“The people said that it thundered.” (John 12:29).

God had just spoken from heaven in clear, articulate tones. Some said that it thundered. They gave a naturalistic explanation for what was divine and miraculous.

That is one attitude we can take toward miracles today. We can try to explain them away as nothing more than natural occurrences.

Or we can say flatly that the age of miracles has passed. We can conveniently relegate them to a dispensational pigeonhole.

A third attitude is to go to the other extreme and claim to experience miracles which, in fact, are nothing but the product of a vivid imagination.

The proper approach is to acknowledge that God can and does perform miracles in our day. As the Sovereign Lord, He can do as He pleases. There is no scriptural reason why He should have abandoned miracles as a means of revealing Himself.

A miracle occurs every time someone is born again. It is a mighty demonstration of divine power, delivering that person from the kingdom of darkness and translating him into the kingdom of the Son of God’s love.

There are miracles of healing when medical science has given up and all human hope is gone. Then, in answer to believing prayer, God sometimes chooses to touch the body and restore the person to health.

There are miracles of provision, when the wallet is all but empty. And miracles of guidance, when we stand at the crossroads and don’t know which way to go.

There are miracles of preservation when, for example, someone walks away without a scratch from a tangled mass of steel that used to be an automobile.

Yes, God still works miracles, but not necessarily the same ones. He has never chosen to repeat the ten plagues which He sent on Egypt. Though Jesus Christ is the same, yesterday, today and forever, it does not follow that His methods are the same. The fact that He raised the dead when He was on earth does not mean that He raises the dead today.

One final word! Not all miracles are divine. The devil and his agents can perform miracles. In a coming day, the second beast of Revelation 13 will deceive the earthdwellers by the miracles he will perform. Even today we must test all purported miracles by the Word of God and by the direction in which they lead people.

ஆகஸ்டு 10

ஜனங்கள் இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். யோவான் 12:29.

இறை அற்புதங்கள்

வானத்திலிருந்து அப்பொழுதுதான் தேவன் மிகத்தெளிவான தொனியில் பேசினார். சிலர் அதனை இடிமுழக்கம் என்று கூறினர். தெய்வீகமானதும் அற்புதமானதுமான ஒருசெயலுக்கு அவர்கள் இயற்கை விதியின் அடிப்படையில் விளக்கமளித்தனர்.

இந்நாட்களில் அற்புதங்களைக் குறித்து ஒருவகையினர் இவ்வித மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் விளைவுகள் என்று இவ்வகையினர் கூறி அதற்குமேல் ஒன்றுமில்லை என்று அவற்றிக்கு விளக்கமளிக்கின்றார்கள். இரண்டாவது வகையினர் அற்புதங்கள் நடக்கும் காலம் முடிந்துபோயிற்று என்று உறுதிப்படக் கூறுகின்றனர். காலகட்டம் என்னும் கூண்டுக்குள் அவர்கள் அதை அடைத்து எளிதாக மூடி வைத்து விடுகின்றனர். ஒளிமயமான கற்பனையில் மூழ்கி அதனால் பெறும் விளைபயனே அற்புதங்களின் அனுபவம் என்று சிலர் மறு எல்லைக்குச் சென்று வாதிடுவர். இது மூன்றாவது வகை மனப்பான்மையாகும்.

நமது நாட்களிலும் தேவன் அற்புதங்களை செய்ய வல்லவராகவும், செய்கிறவராகவும் இருக்கிறார் என்று ஒப்புக்கொள்வதே சரியான அணுகுமுறையாகும். இறையாண்மை மிக்க கர்த்தர் தமது விருப்பப்படி எதனையும் செய்ய வல்லவராவார். தம்மை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு வழியாக அற்புதத்தைப் பயன்படுத்தாமல் அதனைக் கைவிட்டுவிட்டார் என்பதற்கான வேத ஆதாரம் ஏதுமில்லை.

ஒருவர் மறுபடியும் பிறக்கிறபோது ஒரு அற்புதம் நிகழ்கிறது. இருளின் அரசினின்று ஒருவரை விடுதலையாக்கி தேவனுடைய அன்பின் குமாரனுடைய அரசாட்சிக்குள் உட்படுத்துவது தெய்வீக வல்லமையின் ஆற்றல்மிக்க செயல்பாடாகும்.

மருத்துவத் துறையினர் கைவிட்டபின், மனித நம்பிக்கை அனைத்தும் அற்றுப்போன பின்னரும் அப்பிணியாளி உடல்நலம் பெறும் அதிசயங்கள் நடைபெறுகின்றன. விசுவாசமுள்ள மன்றாட்டிற்கு விடையாக சில வேளைகளில் ஒருவனுடைய உடல்நலத்தை மீண்டும் சீராக்குவதற்காக அவர் அவனைத் தொடுகிறார்.

நமது பணப்பை எல்லாம் தீர்ந்துபோன பிறகு அவர் அதிசயமாக நமது தேவையை நிறைவு செய்கிறார். எவ்வழியாகச் செல்வது என்று அறியாமல் மலைத்து நிற்கும் வேளைகளில், அதிசயமாக அவர் நம்மை வழிநடத்துகிறார். சில வேளைகளில் சிலர் அதிசயமாக பாதுகாக்கப்படுகின்றனர். வாகனம் விபத்திற்குட்பட்டு வளைந்து நொறுங்கி உருவம் குலைந்து காட்சியளிக்கும். ஆனால், அதில் பயணம் செய்தவர் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அதிலிருந்து வெளியே வருவர்.

ஆம், தேவன் இன்றும் அதிசயங்களைச் செய்கிறவராயிருக்கிறார். ஒரே விதமாக அவர் மீண்டும் மீண்டும் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. எகிப்திற்கு அனுப்பிய பத்துக் கொள்ளநோய்களை அவர் மீண்டும் செய்யவில்லை. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இயேசு கிறிஸ்து இருந்தபோதிலும், அவருடைய செயல்பாடுகள் ஒரேவிதமாக நடைபெறுவதில்லை. அவர் இப்புவியில் இருந்த வேளையில் இறந்துபோன மனிதனை உயிரோடு எழுப்பியதால், இன்றைக்கும் அவா இறந்துபோன ஒருவனை உயிரோடு எழுப்புவார் என்பது இதன் பொருளன்று. இந்த உண்மையை நாம் உணரவேண்டும்.

இறுதியாக ஒரு சொல்! ஏல்லா அற்புதங்களும் தெய்வீகமாவை அல்ல. பிசாசும் அவனுடைய தூதர்களும் அற்புதங்களைச் செய்யக்கூடியவர்களே. வெளிப்படுத்தின விசேஷம் 13ஆம் அதிகாரத்தில் இரண்டாவது மிருகம், தனது அற்புதச் செய்கைகளால் உலகில் வாழும் மக்களை ஏமாற்றுவான் என்றும் நாம் காண்கிறோம். இந்நாட்களில் அற்புதங்களை நிகழ்த்துகிறோம் என்று உரிமை கொண்டாடுகிற ஒவ்வொருவருடைய செயலையும் நாம் திருமறையைக் கொண்டும், அவ்வாறு கூறுகிறவர்கள் எவ்வாறு மக்களை வழிநடத்துகிறார்கள் என்பதைக் கொண்டும் சோதித்துக் கண்டறிய வேண்டும்.

10. August

»Die Volksmenge … sagte, es habe gedonnert.« Johannes 12,29

Gott hatte gerade vom Himmel in klar artikulierter Sprache geredet. Einige sagten, es habe gedonnert. Sie hatten eine natürliche Erklärung bereit für etwas, was göttlich und übernatürlich war.

Das ist eine Haltung, die wir heute gegenüber Wundern einnehmen können. Wir können versuchen, sie als bloße natürliche Vorkommnisse wegzuerklären.

Oder wir können einfach sagen, dass die Zeit der Wunder vorbei ist. Wir verstauen sie passend in einer heilsgeschichtlichen Schublade.

Eine dritte Haltung ist das andere Extrem, wenn wir behaupten, Wunder erfahren zu haben, die in Wirklichkeit nichts anderes als ein Produkt lebhafter Einbildung sind.

Die richtige Haltung ist die, dass wir anerkennen, dass Gott auch heute Wunder tun kann und tut. Als der souveräne Herr kann Er tun, was Ihm gefällt. Es gibt keinen schriftgemäßen Grund, warum Er Wunder als Mittel, sich zu offenbaren, aufgegeben haben sollte.

Ein Wunder geschieht jedes Mal, wenn jemand von neuem geboren wird. Es ist eine gewaltige Demonstration göttlicher Macht, wodurch ein Mensch aus der Gewalt der Finsternis errettet und in das Königreich des Sohnes der Liebe Gottes versetzt wird.

Es gibt Wunder der Heilung, wenn die ärztliche Kunst schon kapituliert hat und alle menschliche Hoffnung aufgegeben wurde. Dann gefällt es Gott manchmal, als Antwort auf glaubendes Gebet den Leib anzurühren und dem Betreffenden die Gesundheit wiederzuschenken.

Es gibt Wunder göttlicher Fürsorge, wenn der Geldbeutel leer ist. Und Wunder göttlicher Führung, wenn wir an einem Scheideweg stehen und nicht wissen, welche Richtung wir einschlagen sollen.

Es gibt Wunder göttlicher Bewahrung, wenn beispielsweise jemand ohne Kratzer aus einem Trümmerhaufen aus Blech und Glas aussteigt, der einmal ein Auto war. Ja, Gott wirkt heute noch Wunder, aber nicht unbedingt die gleichen. Er hat nie die zehn Plagen wiederholt, die Er über Ägypten kommen ließ. Obwohl Jesus Christus derselbe gestern, heute und in Ewigkeit ist, folgt daraus nicht, dass Seine Methoden notwendigerweise immer gleich bleiben. Die Tatsache, dass Er Tote auferweckte, als Er auf der Erde war, bedeutet nicht, dass Er auch heute Tote auferweckt.

Und noch ein letztes Wort! Nicht alle Wunder sind göttlichen Ursprungs. Der Teufel und seine Diener können ebenfalls Wunder vollbringen. In einer zukünftigen Zeit wird das zweite Tier von Offenbarung 13 durch die Wunder, die es vollbringt, diejenigen verführen, die auf der Erde wohnen. Auch heute müssen wir alle vorgeblichen Wunder anhand des Wortes Gottes prüfen und anhand der Richtung, in welche sie die Menschen führen.