August

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

August 9

“And he left all, rose up, and followed him.” (Lu. 5:28).

Picture Levi sitting at a table beside the highway, collecting taxes from those who passed by. If he was a typical tax-collector, he pocketed considerable sums of money instead of turning them in to the despised Roman government.

On this particular day Jesus passed by and said, “Follow me.” A tremendous spiritual awakening took place in Levi’s life. He saw his sins exposed. He realized the emptiness of his life. He heard the promise of better things. His response was immediate. “He left all, rose up, and followed him.” In doing so he anticipated Amy Carmichael’s pregnant lines: “I heard His call, ‘Come, follow!’/ That was all./ My earthly gold grew dim,/ My soul went after Him,/ I rose and followed:/ That was all./ Who would not follow/ If they heard Him call?”

But Levi, or Matthew as he is better known, little realized on that day when he answered the call of Christ the great things that would flow from his obedience.

First of all, of course, he experienced the priceless blessing of salvation. From then on he wore out his sandals on the toes instead of on the heels. From then on he had more joy even when he was sad than he formerly had when he was glad. From then on he could say in the words of George Wade Robinson, “something lives in every hue, Christless eyes have never seen.”

Then too, Matthew became one of the Twelve Apostles. He lived with the Lord Jesus, heard His incomparable teachings, became a witness of His resurrection, went forth with the message glorious, and finally laid down His life for the Savior.

To Matthew was given the unspeakable privilege of writing the first gospel. We said that he left all, but the Lord allowed him to keep his pen. That pen was used to portray the Lord Jesus as the true King of the Jews.

Yes, Matthew left all, but in doing so, he gained all, and found the real reason for his existence.

There is a sense in which the call of Christ comes to every man, woman, boy and girl. We can answer or we can refuse. If we respond, He blesses us beyond our wildest dreams. If we refuse, He finds others to follow Him. But we can never find a better Christ to follow.

ஆகஸ்டு 9

அவன் எல்லாவற்றையும் விட்டு அவருக்குப் பின் சென்றான். லூக்கா 5:28.

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

புறவழிச் சாலையில் தமது இருக்கையில் அமர்ந்து, அவ்வழியாச் செல்வோரிடம் வரி வசூலிக்கும் லேவியைச் சித்தரித்துப் பாருங்கள். அவன் வரி வசூலிக்கும் எல்லோரையும் போலவே இருந்த காரணத்தால் வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பங்கை தனது பையில் போட்டுக்கொண்டான். மக்களுடைய வெறுப்புக்கு ஆளான ரோமஅரசிற்கு எல்லாப் பணத்தையும் அவன் செலுத்தவில்லை.

குறிப்பிட்ட நாளொன்றில் இயேசு கிறிஸ்து அவ்வழியாகச் சென்றார். அவனைப் பார்த்து, ‘என்னைப் பின்பற்றி வா” என்று அழைத்தார். அதைக் கேட்ட லேவியின் வாழ்வினில் வியக்கத்தக்க ஆவிக்குரிய எழுச்சி உண்டாயிற்று. அவன் தனது பாவம் வெளியரங்கமானதைக் கண்டான். தனது வாழ்வின் வெறுமையை உணர்ந்தான். சிறப்பான பொருட்களின் வாக்குறுதியைக் கேட்டான். உடனடியாக அவன் செய்த பதிற்செய்கை யாதெனில், ‘அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து அவருக்குப் பின்சென்றான்” என்பதேயாகும். அவ்வாறு அவன் செய்த பதிற்செயல், ஏமி கார்மிகேல் அம்மையாரின் பொருள் செறிந்த வாசகத்தை எதிர் பார்த்தது போன்று காணப்பட்டது.

என்பின்னேவா, என்றழைக்கும் குரல்கேட்டேன்
தொனிகேட்ட என்னுள்ளம் அண்ணலைத் தொடர்தது
மினுக்கடும் பொன்னும் பொருளும் மங்கியே போயின
அழைப்பினைக் கேட்போர் செவிமடுக்காதிருப்பாரோ?

மத்தேயு என்று அனைவராலும் அறியப்பட்ட லேவி, கிறிஸ்துவின் அழைப்புக்குச் செவிமடுத்த அந்த நாளில், தன்னுடைய கீழ்படிதலைத் தொடர்ந்து வரப்பேகிற பெரிதான காரியங்கனை அவன் அறியாதிருந்தான்.

முதலாவதாக, விலைமதிக்க முடியாத இரட்சிப்பாகிய நற்பேற்றைப் பெற்றான். அதுமுதல் கர்த்தருடைய பணியைச் செய்வதற்கு ஆயத்தமுடையவனாக இருந்தான். முன்னர் உற்சாகமாக இருந்த நாட்களில் அவன் கொண்டிருந்த மனமகிழ்ச்சியைக் காட்டிலும், அன்றுமுதல் துன்பத்தின் ஊடாகவும் கூடுதலான மனமகிழ்ச்சி உடையவனாக இருந்தான். அன்றுமுதல் அவனுடைய சொற்கள், ஜார்ஜ்வேட் இராபின்சன் என்பாருடைய சொற்களைப் போலாயின. ‘ஒவ்வொரு வர்ணத்திலும் ஏதாவதொன்று உயிர் வாழ்கிறது, அதனைக் கிறிஸ்துவற்ற கண்கள் கண்டதில்லை”.

மேலும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவனாக அவன் ஆக்கப்பட்டான். இயேசுகிறிஸ்துவோடு அவன் வாழ்ந்தான், அவருடைய ஒப்பற்ற போதனைகளைக் கேட்டான், அவருடைய உயிர்த்தெழுதலைக் கண்ட சாட்சியானான், மகிமை நிறைந்த நற்செய்தியை ஏந்திச் சென்றான். கடைசியாக தனது உயிரையே இரட்சகருக்காகத் தியாகம் செய்தான்.

முதலாவது நற்செய்தி நூலை எழுதும் சொல்லிமுடியாத நற்பேற்றினை மத்தேயு பெற்றான். அவன் எல்லாவற்றையும் விட்டு அவரைப் பின்பற்றினான் என நாம் கூறுகிறோம். ஆனால், கர்த்தரோ அவனிடம் தனது எழுதுகோலை வைத்துக்கொள்ளும்படி அனுமதித்தார். இயேசு கிறிஸ்து உண்மையாகவே யூதர்களுடைய அரசர் என்பதை வெளிப்படுத்த அந்த எழுதுகோல் பயன்பட்டது. ஆம், எல்லாவற்றையும் மத்தேயு துறந்தான். அவ்வாறு செய்தபோது அவன் எல்லாவற்றையும் அடைந்தான். தனது வாழ்க்கையின் உண்மையான காரணத்தை அறிந்து கொண்டான்.

கிறிஸ்து யாரை அழைத்தாலும், ஒரு ஆணோ, பெண்ணோ, சிறுவனோ, சிறுமியோ, அதற்கு ஒரு நோக்கம் உண்டு. அந்த அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளலாம், அல்லது அதனை நிராகரிக்கலாம். ஏற்றுக்கொண்டோர், கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆசீர்வாதத்தைப் பெறுவர். மறுப்பவர்களை அவர் விட்டுவிட்டுத் தம்மை பின்பற்றுவதற்கென வேறு சிலரைக் கண்டுபிடிப்பார். ஆனால், நாம் அவ்வாறு பின்பற்றுவதற்கு வேறுறொரு கிறிஸ்து இல்லையே!

9. August

»Und alles verlassend, stand er auf und folgte ihm nach.« Lukas 5,28

Stellen wir uns vor, wie Levi an einem Tisch neben der Hauptstraße saß und Steuern und Zölle von den Vorübergehenden kassierte. Wenn er ein typischer Zöllner war, dann schob er beträchtliche Summen in die eigene Tasche, anstatt sie an die verachtete römische Besatzungsmacht weiterzuleiten.

An jenem bestimmten Tag kam Jesus vorbei und sagte: »Folge mir nach.« Ein gewaltiges geistliches Erwachen ereignete sich in Levis Leben. Er sah seine Sünden bloß und aufgedeckt vor sich. Er wurde sich der Hohlheit seines Lebens bewusst. Er hörte die Verheißung besserer Dinge. Seine Reaktion war unmittelbar. »Und alles verlassend, stand er auf und folgte ihm nach.« Damit nahm er Amy Carmichaels (1867-1951, englische Indienmissionarin und Dichterin) eindringliche Zeilen vorweg:

»Ich hörte Seinen Ruf: ›Komm, folge!‹
Das war alles.
Mein irdisches Gold verblasste,
Meine Seele ging Ihm nach,
Ich stand auf und folgte:
Das war alles.
Wer würde nicht folgen,
Wenn er Ihn rufen hörte?«

Aber Levi, oder Matthäus, wie sein bekannterer Name lautet, wusste an jenem Tag, als er auf den Ruf Christi reagierte, noch wenig von den großen Dingen, die sich aus seinem Gehorsam ergeben sollten.

Zuerst natürlich erfuhr er den unschätzbaren Segen der Errettung. Von da an »nutzte er seine Sandalen an der Spitze ab statt an der Ferse«. Von da an hatte er mehr Freude, selbst wenn er traurig war, als vorher, wenn er glücklich war. Von da an konnte er mit den Worten von George Wade Robinson sagen: »In jedem kleinen Farbfleck dieser Welt lebt etwas, was christuslose Augen nie entdecken können.«

Dann wurde Matthäus auch einer der zwölf Apostel. Er lebte mit dem Herrn Jesus, hörte Seine unvergleichliche Belehrung, wurde Zeuge Seiner Auferstehung, ging mit der herrlichen Botschaft in die Welt hinaus und gab schließlich sein Leben für seinen Erlöser hin. Matthäus empfing auch das unaussprechliche Vorrecht, das erste Evangelium verfassen zu dürfen. Wir haben vorher gesagt, dass er alles verlassen hatte, aber der Herr erlaubte ihm, seine Feder zu behalten. Diese Feder wurde dazu benutzt, den Herrn Jesus als den wahren König der Juden zu schildern.

Ja, Matthäus verließ alles, aber dadurch gewann er auch alles und fand den wahren Grund und das Ziel seiner Existenz.

In gewissem Sinn ergeht der Ruf Christi an jeden Mann, jede Frau, jeden Jungen und jedes Mädchen. Wir können darauf antworten, oder wir können ihn ablehnen. Wenn wir Ihm antworten, segnet Er uns weit über unsere kühnsten Träume hinaus. Wenn wir ablehnen, findet Er andere, die Ihm nachfolgen. Aber wir werden niemals einen besseren Christus finden, dem wir folgen könnten.