April

தற்பரிசோதனை

April 21

“The disciple is not above his master: but every one that is perfect shall be as his master.” (Lu. 6:40)

In this passage the Lord Jesus was reminding the Twelve that when they went out to disciple others, they could not expect their disciples to progress further in the spiritual life than they themselves had attained. In other words, the extent of our positive influence on others is limited by what we ourselves are. Or as O. L. Clark said:

You cannot teach what you do not know;
You cannot lead where you do not go.

The Savior went on to reinforce the lesson by the story of the mote and the beam. A man is walking by a threshingfloor when a sudden gust of wind lands a tiny speck of chaff squarely in his eye. He rubs it, pulls the top lid down over the bottom one, and tries all the wellmeaning advice of his friends as to how to get the mote out of his eye. Then I come along with a telephone pole jutting out of my eye and say to him, “Here, my dear friend, let me help you get that atom out of your eye.” With his head at an angle, he looks up at me with his remaining good eye and says, “Don’t you think you ought to take the pole out of your own eye first?”

Of course! I can’t help someone who is struggling with a besetting sin if I am even more shackled by that particular sin. I can’t press on him obedience to some plain command of Scripture if I have not obeyed it myself. Any spiritual failure in my life seals my lips in that particular area.

When my disciple has become perfect, that is, when I have finished training him, I cannot expect him to be one centimeter above my own spiritual stature. He may progress up to my height, but I cannot lead him beyond it.

All of which emphasizes afresh that we must take heed to ourselves. Our ministry is to be a ministry of character. It’s what’s inside that counts. We may be eloquent, clever, and fast-talking but if there are blind-spots in our lives, areas of neglect and disobedience, then our discipling of others is a case of the blind leading the blind.

ஏப்ரல் 21

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப் போலிருப்பான். (லூக்.6:40)

தற்பரிசோதனை

மற்றவர்களுக்கு சீடத்துவப் பயிற்சி அளிக்கச் செய்யும் வேளையில், தாங்கள் அடைந்துள்ள ஆவிக்குரிய வளர்ச்சியைக் காட்டிலும், மேலானதொரு ஆவிக்குரிய நிலையைத் தங்களுடைய மாணாக்கர் அடையும்படிச் செய்ய இயலாது என்பதை இவ்வசனத்தின் வாயிலாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பன்னிரு சீடர்களுக்கு நினைவுறுத்தினார். அதாவது, நாம் எந்தநிலையில் இருக்கிறோமோ அதுவே, நமது சீடர்கள் வளர்வதற்கான அளவுகோலாக இருக்கிறது. இதனை O.L. கிளார்க் என்பார், ‘நீ அறியாவற்றை உன்னால் சொல்லித்தர முடியாது. உனக்குத் தெரியாத இடத்திற்கு உன்னால் வழிகாட்டவும் முடியாது.” என பொழிந்துள்ளார்.

துரும்பையும் உத்திரத்தையும் கொண்டு ஒரு உவமையைக்கூறி நமது இரட்சகர் இக்கருத்தை வெளிப்படுத்துகிறார். போரடிக்கும் களத்திலே ஒரு மனிதன் நடந்து செல்கிறபோது, சடுதியில் வேகமாக வீசிய காற்றினாலே ஒரு பதர் பறந்து வந்து அவனுடைய கண்ணில் விழுந்தது. கண்ணில் குத்திய பதர் உறுத்தவே அவன் கண்ணைத் தேய்த்தான். சூழநின்ற நண்பர்கள் கொடுத்த நல்லாலோசனையின்படி தனது கண்ணின் மேல் இமையைக் கீழ் இமைக்குக் கீழாக இழுத்துப் பார்த்து, அப்பதரை எப்படியாவது கண்ணிலிருந்து எடுக்க முயற்சிசெய்தான். எந்த முயற்சியும் பயன்தரவில்லை. தொலைபேசிக் கம்பம் ஒன்று கண்ணிலிருந்து துருத்திக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக நடந்து வந்த நான் பரிவுடன் சில ஆலோசனையைகளைக் கூறினேன். தனது இரத்தம் தோய்ந்த கண்களுடன் என்னை உற்றுப்பார்த்து, ‘எனக்கு ஆலோசனை கூறும் முன்னர், நீ உன் கண்ணிலிருக்கும் உத்திரத்தை எடுத்துப்போட வேண்டுமென்று நினைக்கவில்லையா? என அவன் வினவினான்.

உண்மையாகவே, ஒரு குறிப்பிட்ட பாவத்தினால் நான் விலங்கிடப்பட்டிருப்பேனாயின், அப்பாவத்தினால் அலைக்கழிக்கப்படும் வேறொருவருக்கு என்னால் உதவிசெய்ய இயலாது. வேதத்தில் சொல்லியிருக்கிற தெளிவான ஒரு கட்டளைக்கு ஒருவன் கீழ்படியவேண்டுமென்று, அதே கட்டளைக்குக் கீழ்படியாத என்னால், சற்றும் வற்புறுத்த முடியாது. ஒரு ஆவிக்குரிய காரியத்தில் வீழ்ச்சியுற்ற நான், அந்தக் காரியத்தில் ஆலோசனை தர முடியாதவனாக வாயடைத்தே நிற்கவேண்டும். என்னுடைய மாணாக்கன் நிறைவான வளர்ச்சியடைந்த பிறகு, அதாவது நான் அவனுக்கு அளிக்கவேண்டிய பயிற்சி முடிந்த பிறகு, என்னுடைய ஆவிக்குரிய நிலையைக் காட்டிலும் அம்மாணாக்கனுடைய நிலை சற்றேனும் கூடுதலாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. என்னுடைய உயரத்திற்கு அவன் வளர்ச்சி அடைவான், அதற்குமேலாக என்னால் அவனை வளரச்செய்ய முடியாது.

நாம் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று இவையாவும் நம்மை வலியுறுத்துகின்றன. குறைவற்றதும், சிறப்புவாய்ந்ததுமான ஊழியமாக நமது ஊழியம் இருக்க வேண்டும். உள்ளார்ந்த நிலையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நாம் சொல்லாற்றல் மிக்கவராக, அறிவுடையவராக, பேச்சுத்திறமை உடையவராக இருக்கலாம், ஆனால் நம்முடைய வாழ்க்கையில் காணும் கறைகள், நாம் அலட்சியப்படுத்தியவை, கீழ்படியாதவை, யாவும் மற்றவர்கள் ஒழுங்குபடவேண்டு என்று நாம் எடுக்கும் முயற்சிகளைத் தடை செய்கின்றன. அவ்வாறு செய்வோமனால் நாம் குருடருக்கு வழிகாட்டும் குருடனைப் போல இருப்போம்.

21. April

»Ein Jünger ist nicht über dem Lehrer; jeder aber, der vollendet ist, wird sein wie sein Lehrer.« Lukas 6,40

In dieser Stelle verdeutlicht der Herr Jesus den Zwölfen, die Er aussandte, um andere zu Jüngern zu machen, dass sie von ihren zukünftigen Jüngern nur so weit Wachstum im geistlichen Leben erwarten konnten, wie sie es selber verwirklicht hatten. Mit anderen Worten: Das Ausmaß unseres positiven Einflusses auf andere wird durch das begrenzt, was wir selbst sind. O.L. Clark sagte:

Du kannst nicht lehren, was du selbst nicht weißt;
Du kannst nicht führen, wo du selbst nicht gehst.

Der Herr betonte diese Belehrung noch durch die Geschichte mit dem Splitter und dem Balken. Ein Mann kommt gerade an einer Tenne vorbei, als ein plötzlicher Windstoß ihm ein winziges Spreufragment direkt ins Auge weht. Er reibt es, zieht das Ober- über das Unterlid herab und probiert all die gut gemeinten Ratschläge seiner Freunde aus, um den Splitter aus seinem Auge zu bekommen. Da komme ich des Weges mit einem Telefonmast, der aus meinem Auge ragt, und sage ihm: »Moment, mein Lieber, ich helfe dir mal eben, dieses Atom aus deinem Auge herauszubekommen. « Seinen Kopf leicht zur Seite geneigt, sieht er mich mit seinem gesunden Auge ungläubig an und sagt: »Meinst du nicht, es wäre vernünftiger, du würdest erst den
Mast aus deinem Auge herausnehmen?«

Natürlich? Ich kann nicht jemand helfen, der mit einer hartnäckigen Sünde kämpft, wenn ich noch mehr an diese sündige Gewohnheit gefesselt bin. Ich kann ihn nicht zum Gehorsam gegenüber einem ganz offensichtlichen Gebot der Schrift drängen, wenn ich in diesem Punkt selber noch ungehorsam bin. Jedes geistliche Versagen in meinem Leben verschließt meine Lippen auf dem betreffenden Gebiet.

Wenn mein Jünger »vollendet« ist, d.h. wenn mein Training abgeschlossen ist, dann kann ich nicht erwarten, dass er auch nur einen Zentimeter über meine geistliche Statur hinausragt. Er kann vielleicht bis zu meiner eigenen Größe heranwachsen, aber ich kann ihn nicht darüber hinausführen.

All das verdeutlicht uns aufs Neue, dass wir auf uns selbst Acht haben müssen. Unser Dienst ist vor allem ein vom Charakter geprägter. Das innere Wesen zählt. Wir sind vielleicht beredt, klug und schnell mit Argumenten bei der Hand, aber wenn es dunkle Punkte in unserem Leben gibt, Gebiete, die wir vernachlässigen oder wo wir ungehorsam sind, dann ist unser Training von Jüngern nichts anderes als ein Führen von Blinden durch einen Blinden.