April

தேவ தயவின் ஐசுவரியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 33:18-23) “அப்பொழுது அவன், உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்” (வச. 18). ஒரு மத்தியஸ்தனாக முதலாவது, மோசே தேவனிடம், உம்முடைய மக்களை அழித்துவிட வேண்டாம் என்று வேண்டினான். அடுத்ததாக நீர் அவர்கள் நடுவில் பிரசன்னராயிருக்க வேண்டும் என்று கேட்டான். இப்பொழுது தேவனுடைய அன்பில் ஒரு படி இன்னும் நெருக்கமாக முன்னேறி, “உம்முடைய மகிமையைக் எனக்குக் காண்பித்தருளும்” என்றான். முதலிரண்டு விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் தம்முடைய கிருபையால் பதில் அளித்தார். இக்கேள்விக்கு, “என்னுடைய தயையை எல்லாம்…

April

கிருபையின் அளவற்ற ஐசுவரியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 33:12-17) “அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்” (வச. 14). நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட மத்தியஸ்தராம் கர்த்தருக்கு அடையாளமாகத் திகழ்கிற மோசேயின் பரிந்து பேசுதல், தேவனுடைய கோபம் மக்களின் மேல் ஊற்றப்படாமல் இருப்பது மட்டுமின்றி, அவர்களைப் பத்திரமாகப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதாக இருந்தது. பாவம் பெருகிற இஸ்ரயேல் மக்களிடத்தில் அவருடைய கிருபையும் அதிகமாகப் பெருகிற்று. நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், இந்த மக்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள் எனச்…

April

மன்னிப்பும் மறுசீரமைப்பும்

(வேதபகுதி: யாத்திராகமம் 33:1-11) “மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பெயரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளையத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்” (வச. 7). தேவன் தம்முடைய மக்களின் பாவங்களை மன்னித்துவிட்டார் என்று மோசே அறிந்தபோதிலும், “நான் உங்கள் நடுவில் வரமாட்டேன், அதற்குப் பதிலாக ஒரு தூதனை அனுப்புவேன்” என்று தேவன் சொன்ன காரியம் மோசேயின் இருதயத்தைப் பாதித்தது. தூதனின் துணையிருந்தால்கூட, இத்தனை பெரிய மக்கள்…

April

கிருபையும் சத்தியமும் நிறைந்த கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 32:15-35) “அவர்கள் உண்டுபண்ணின கன்றுக் குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்” (வச. 20). மிகுந்த சாந்தகுணமுள்ள மோசேயின் கோபத்தை இங்கே பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவர் அன்பானவராகவும் மட்டுமின்றி, நீதியுள்ளவராகவும் விளங்கினார். மோசேயைப் போல அவர் கையில் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகைகளைப் பிடித்துக்கொண்டு வரவில்லை. ஆயினும் நியாயப்பிரமாணம் அவருடைய உள்ளத்துக்குள் இருந்தது.…

April

மெய்யான மத்தியஸ்தராகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 32:11-14) “மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகாபலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெறிவதென்ன? … என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் ” (வச. 11,13). இஸ்ரயேல் மக்கள் பொன் கன்றுக் குட்டியை வணங்கி, தேவனுக்கு விரோதமான பாவச்செயல்களில் ஈடுபட்டார்கள். தேவன் தாமே கொடுத்த பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையை மீறினார்கள். தேவனுடைய கோபம் பற்றியெரிந்தது. இவர்களை அழித்துப்போடும்படி “என்னை விட்டுவிடு”, உன்னைப்…

April

விசுவாசத்தின் இலக்கு கிறிஸ்துவே

(வேதபகுதி: யாத்திராகமம் 32:1-10) “அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்” (வச. 4). இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில், இந்த நாள் ஆரோனின் செயலால் ஒரு மோசமான நாளாக மாறியது. மோசே மலையில் தேவனிடத்தில் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆரோன் மக்களை பல வழிகளில் தவறாக வழிநடத்தினான். இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி புறப்பட்டு…

April

கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளின் மகிழ்ச்சியும் ஆராதனையும்

(வேதபகுதி: யாத்திராகமம் 31:12-18) “ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்” (வச. 16). தேவன் இஸ்ரவேல் மக்களுக்கென சிறப்பான வகையில் அருளிய கட்டளையே பரிசுத்த ஓய்வுநாள் ஆசரிப்பாகும். “இது உங்கள் தலைமுறை தோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்” (வச. 13,17) எனத் தேவன் இதைக் குறித்துக் கூறினார். யாத்திராகமத்தின் பதினாறாம் அதிகாரத்தில் மன்னாவின் தொடர்பில் கொடுக்கப்பட்ட இக்கட்டளை, இருபதாம் அதிகாரத்தில் பத்துக் கற்பனையுடன் தொடர்பில் கொடுக்கப்பட்ட இக்கட்டளை, இப்பகுதியில்…

April

தேவ ஆவியால் நிரப்பப்பட்ட ஞான இருதயம்

(வேதபகுதி: யாத்திராகமம் 31:1-11) “… ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்” (வச. 6). தேவன் மோசேயிடம் கட்டளையிட்டபடியே ஆசரிப்புக்கூடாரம், அதிலுள்ள பொருட்கள், அதில் பயன்படுகிற திரைகள், ஆசாரியர்களின் ஆடைகள், அபிஷேக எண்ணெய், தூபவர்க்கம் ஆகிய அனைத்தையும் செய்வதற்காக அவர் பெசலேயேலையும், இவனுக்குத் துணையாக அகோலியாபையும், மற்றும் பல ஞான இருதயமுள்ளவர்களையும் அழைத்து அவர்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்பினார். தம்முடைய பணியைச் செய்யும்படி எப்பொழுதெல்லாம், எவர்களையெல்லாம் அழைக்கிறாரோ…

April

கிறிஸ்துவின் நறுமணமிக்க ஊழியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 30:34-38; 37:29) “… கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும், சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி … சாட்சி சந்நிதியில் வைப்பாயாக” (வச. 34-36). பொன் தூபபீடத்தில் தூபங்காட்டுகிறதற்கான தூபவர்க்கம் தயாரிக்கும் முறையையும் அதன் பயன்பாட்டையும் இப்பகுதி விவரிக்கிறது. வெள்ளைப்போளம், குங்கிலியம், அல்பான் பிசின், சாம்பிராணி ஆகிய நான்கு வாசனைப் பொருட்களால் இது ஆனது. ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள ஒவ்வொரு…

April

*கிறிஸ்துவின் நற்கந்தங்களாகிய விசுவாசிகள் *

(வேதபகுதி: யாத்திராகமம் 30:22-33) “… பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமள தலைமாகிய சுத்தமான பரிமள தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது” (வச.25). ஆசாரியர், ஆரிப்புக்கூடாரம், அதிலுள்ள பொருட்கள் ஆகியவற்றைப் பரிசுத்தமாக்குகிற பரிசுத்த அபிஷேக தைலத்தைச் செய்யும் முறை, பயன்படுத்தும் முறை, எவ்விதமாகப் பயன்படுத்தக்கூடாது போன்ற விவரங்களை இப்பகுதியில் படிக்கிறோம். இது வெள்ளைப்போளம், கருவாப்பட்டை (சந்தனக்கட்டை), வசம்பு, இலவங்கப்பட்டை ஆகிய நான்கு நறுமணப்பொருட்களை சுத்தமான ஒலிவ எண்ணெயில் கலந்து உருவாக்கப்படுகிறது. இதன் செய்முறையையும், அளவையும்…