May

மே 19

மே 19

அவன்இப்படிச் சொல்லி முடிக்குமுன்னே…. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய கிருபையையும்,தம்முடைய உண்மையையும்… விட்டு நீக்கவில்லை என்றான் (ஆதி.24:15,27).

சரியான ஜெபம் ஒவ்வொன்றிற்கும் அதைச் சொல்லி முடிக்கு முன்னரே பதில் கிடைத்துவிடும்.இது ஏனென்றால் கிறிஸ்துநாதருக்கும் அவருடைய சித்தத்திற்கும் இசைந்து விசுவாசத்தோடு நாம்எதைக்கேட்டாலும், நமக்கு அதைத் தருவேனென்று ஆண்டவர் நமக்கு வாக்குத் தந்திருக்கிறார்.

ஆண்டவருடைய வார்த்தை என்றும் தவறாது. ஆகையால், இச் சிறு நிபந்தனைக்கு உட்பட்டு நாம்வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு ஜெபமும், நாம் ஜெபிக்கும்பொழுதே அவருடைய முன்னிலையில்நமக்கு அனுக்கிரகப்பட்டாயிற்று. ஒருவேளை அதன் பதில் உலகில் நம்மை வந்து அடைவதற்குத்தாமதம் ஆகலாம்.

ஆதலால்,நாம் செய்யும் ஒவ்வொரு ஜெபத்தையும், அதை நமக்கு அருளினதற்காக ஆண்டவருக்குத் துதிசெலுத்தி முடிப்பது நலமாகும். அவர் ஒருபொழுதும் தமது அன்பின் நேசத்தையும், உண்மையையும்விட்டுவிலகுவதே இல்லை. (தானி.9:20-27, 10:12 காண்க).

நமக்குஓர் ஆசீர்வாதம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை, நமக்கு வரும்பொழுது நாம்விசுவாசமுள்ளவர்களாயிருக்க வேண்டும். நமக்கு அவ்வாசீர்வாதம் கிடைத்துவிட்டது போலவே நாம்ஜெபித்து நடந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் நமக்கு நமது வேண்டுகோளை அனுக்கிரகித்துவிட்டாரெனவே நாம் நினைத்து அவரிடத்தில் நடந்து கொள்ளவேண்டும். அவர்மேல் நம்முடையபாரத்தை நமது வேண்டுதலுக்காக வைத்து அவர் நம்முடைய வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார்,நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார் என்னும் நம்பிக்கை நிலையில் நாம் இருப்பது அவசியம்.

ஒருபெண் ஒரு மனிதனைத் திருமணஞ் செய்து கொண்டவுடனே, ஒரு புதிய நிலையை ஏற்றுக்கொள்ளுகிறாள்.அதே போல நாம் கிறிஸ்து நாதரை நமது இரட்சகராக, நம்மைத் தூய்மைப் படுத்துவோராக, நமதுபரிகாரியாக, நம்மை விடுவிப்போராக ஏற்றுக்கொள்ளும்பொழுது, அவர் நாம் நமது புதியநிலைக்கு மாறிவிட வேண்டுமென்றும் அப்புதிய நிலைக்கு ஏற்றவராக நாம் அவரைக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். அவர் என்னென்னவாயிருக்க வேண்டுமென்றநம்பிக்கையுடன் எதிர்பார்த்தோமோ, அது அதுவாகவே அவர் இருக்கிறார் என்றும் நாம்நம்பவேண்டும்.

ஆண்டவர் நான் ஜெபிக்கவேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டால், நான் அவரிடம்வேண்டிக்கொள்ளுவது அப்பொழுதே என்னிடம் வந்த சேர்ந்துவிடும்.