May

மே 15

மே 15

காற்றடித்து மேகம் விலகிடவே உள்ளே தோன்றும் ஒளியை (மானிடர்) பார்க்கமுடியுமோ? (யோபு 37:21).

மேகங்கள்உலகிற்கு அழகூட்டுமளவு இத்தாலி நாட்டில் பொதுவாகக் காணப்படும் நீலநிறவானம் மேகங்களின்மாட்சிக்கு ஈடாகாது. மேகங்களின் சேவையில்லாவிட்டால் இவ்வுலகம் பாழ்நிலமாகிவிடும்.மனித வாழ்க்கையிலும் மேகங்கள் உண்டு. சில சமயங்கள் அவை நிழல் தந்துபுத்துயிரளிக்கின்றன. சில நேரங்களில் அவை அனைத்தையும் மூடி இருளாக்கிவிடுகின்றன. ஆனால்,எல்லா மேகங்களுக்கும் ஒளிதரும் ஒளி உண்டு. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்.

நாம்மேகங்களின் மேல்புறத்தைக் காணக்கூடுமானால், அலைகள் போலத்தோன்றும் அவற்றின் அழகைக்காணலாம். நமக்கு அவை மறைக்கும் கதிரவனொளியில் அவைகள் அழகிய மலைகள் போலத்தோன்றும்.அவைகளுடைய அழகின் உன்னதமாட்சியில் நாம் மயங்கிப்போவோம்.

நாம்அவற்றின் அடிப்பகுதியைத்தான் காண்கிறோம். நாம் அவற்றின் உச்சிகள் ஒளி வெள்ளத்தில்ஆழ்ந்திருக்கும் பொழுது அவை அவற்றின் பள்ளத்தாக்குகளுக்கும் ஒளி தருகிறது. அவற்றின்சிகரங்களினின்று பிரதிபலிக்கும் ஒளியின் அழகை எவராலும் வர்ணிக்கமுடியும்? மேகங்களின்ஒவ்வொரு அணுவும் உலகிற்கு நீரைத்தந்து உதவுமன்றோ?

தேவபிள்ளையே, நீ மட்டும் உனது துன்பங்களையும், தொல்லைகளையும் அடுத்த பக்கத்திலிருந்துபார்க்கக்கூடுமானால், அவற்றின் கருமைநிறமான அடிப்பாகத்தை நோக்காமல், ஆண்டவராகியகிறி ஸ்துவோடு உயர் இடங்களில் இருந்து அவைகளின் மறுபக்கத்தை நோக்குவாயானால், நீமட்டும், அவை எவ்வாறு மோட்சக் காட்சிக்கு முன்னால் தோன்றும் பல வண்ண ஒளிக்கதிர்களின்அழகைக் காணக்கூடுமானால், ஆண்டவரது முகத்தினின்று வீசும் அருள் ஒளியை நீ மட்டும்காணக்கூடுமானால், மலைகளின்மீது மேகங்களின் நிழல்களைப் பொருட்படுத்தவே மாட்டாய்.மேகங்கள் எப்பொழுதும் கடந்தே செல்பவை. ஆண்டவரின் தூய்மைப்படுத்தும் காற்றினால் அவைஅடிபட்டுப் போய்விடும்.

கொடுங்காற்று எனைச் சுற்றித் திடீரென்று

கொடுமையாய் வீசுவதேன் என்றறியேன்

என் பாதைதனை என்னாண்டவர் காக்கிறார்

என்பதை மட்டும் நான் நம்புவேன்.

என் வருங்காலம் மறைந்திருக்கும்

என்திரையதனை நான் விலக்கிடேன்,

எனக்கென காத்திருப்பது யாதோ

என்றாலும் நான் என்றும் நம்புவேன்.

ஆழிக்கப்பால் காணத் திறன் எனக்கில்லை,

ஆற்றின் அக்கரை நாட்டையும் அறியேன்,

ஆண்டவருடையவன் நானே என்றறிவேன்,

ஆதலால் என்றும் நம்புவேன்.