May

மே 7

மே 7

சோர்ந்து போகாமல்எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைக் குறித்து, அவர் அவர்களுக்கு ஒரு உவமையைச்சொன்னார் (லூக்.18:1).

பரிந்துரை ஜெபத்திற்கு பலசோதனைகள் ஏற்படுவதுண்டு. எவருக்கும் சாதாரணமாக இக்காரியத்தில் ஏற்படும் சோதனைதொடாந்து ஜெபிக்காமல் விட்டுவிடுதல். ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து நாம் ஜெபிக்கஆரம்பிக்கிறோம். ஒருநாள், ஒருவாரம், ஒரு மாத காலத்திற்கு நாம் தொடாந்து ஜெபித்தும்பலன் ஏதும் கிடைக்கவில்லை. நாம் சோர்வு அடைந்து விடுகிறொம். அக் காரியத்திற்காகஜெபிப் பதை நிறுத்திவிடுகிறோம்.

இது ஒரு பெருந்தவறாகும்.பலவற்றைத் தொடங்கியும், ஒன்றை முடிக்காத வலையில் நாம் விழுந்துவிடுகிறோம்.வாழக்கையின் எல்லாப் குதிகளிலும் இது கேடு விளiவிக்கும்.

துவங்கும் காரியத்தைமுடிக்காது விட்டுவிடும் பழக்கத்தையுடையவன், தோல்வியடைவதையும் பழக்கமாக்கிக்கொள்ளுகிறான். ஜெபம் செய்வதிலும் இந்நிலை ஏற்படும். ஒரு காரியத்திற்காக ஜெபி க்கஆரம்பித்து, அது வெற்றிகரமாக முடியும்வரை விடாது தொடர்ந்து ஜெபிக்காத மனிதன் ஜெப த்தில்தோல்விப் பழக்கத்தை அடைகிறான்.

சோர்வு அடைந்திடுதல்,தடைப்படுதல் அல்லது தோல்வியைப் பிறப்பிக்கும். தோல்வி மனமடிவை உண்டாக்கும்.ஜெபத்தின் வல்லமையின்மீது விசுவாசம் கொள்ளாதிருத்தல், எல்லா வெற்றிகளுக்கும் அழிவைத்தேடித்தரும்.

எத்தனை முறைதான் நான்ஜெபிப்பது? நமது ஜெபங்களை முடித்துக்கொண்டு, காரியத்தை ஆண்டவர் கைகளில் விட்டு விடும்நேரம் வர வேண்டாமா என்று சிலர் கேட்பதுண்டு.

நீ எதற்காகஜெபிக்கிறாயோ அக்காரியம் உனக்கு அருளப்படும் வரை நீ ஜெபிக்க வேண்டும். அல்லது உனதுமனதில் அருளப்பட்டுவிடும் என்ற நிச்சயம் ஏற்படும்வரை ஜெபி க்கவேண்டும்.

இந்த இரண்டு இடங்களில்ஒன்றில்தான் நமது விடாத்தொடர் ஜெபத்தை நிறுத்தவேண்டும். ஏனென்றால் அது ஆண்டவரிடம்விண்ணப்பித்தல் மாத்திரமல்ல, அது சாத்தானுடன் போரிடுதலுமாகும். நமது ஜெபத்தைஅப்போராட்டத்தில் சாத்தானுக்கெதிராகப் பயன்படுத்தும் ஒரு கருவியாக நாம்பயன்படுத்துவதானால், நாம் அல்ல, அண்டவர்தான் நமது விண்ணப்பங்களை, நாம்நிறுத்திக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கமுடியும். ஆகையால் ஜெபத்திற்கான பதில்வந்தவுடனோ, அல்லது வந்து விடும் என்னும் நிச்சயம் நமது மனதில் ஏற்பட்டவுடனேதான் நாம்ஜெபத்தை நிறுத்தத் துணிவு கொள்ளலாம்.

இவ்விரு நிலைகளில்முதலாவதில் நாம் காண்பதனால் நிறுத்திக் கொள்ளலாம். இரண்டாவதில் நாம் நம்புவதால்நிறுத்திக்கொள்ளலாம். நம் மனதின் விசுவாசம், நமது கண்களின் காட்சிக்கு இணையானதே.ஏனெனில் ஆண்டவர் மீது நமக்கு உள்ளிருந்து வரும் விசுவாசம் அதுவாகும்.

நம் ஜெபவாழ்க்கையில்மென்மேலும் நாம் முன்னேறுவோமானால், ஆண்டவர் ஜெபத்திற்குப் பதில் தரும் நிச்சயத்தைநமது அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளுவோம். அப்பொழுது, அந்த நிச்சயத்துடன் அமர்ந்துகாத்திருப்போம். அல்லது நாம் ஜெபிக்கும் காரியத்தைப் பெற்றுக்கொள்ளும் வரைதொடர்ந்து நாம் ஜெபிக்க வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

ஆண்டவர் உன்னைத் தமதுவாக்குத்தத்தில் சந்திக்கும் வரை அதிலேயே காத்திரு. அவர் எப்பொழுதும் தம்வாக்குதத்தத்தின் வழியேதான் திரும்ப வருவார்.