March

மார்ச் 19

பிரியமானவர்களே,உங்களைச் சோதிக்கும்படி, உங்கள் நடுவில் பற்றி எரிகிற அக்கினியைக் குறித்து ஏதோபுதுமை என்று திகையாமல்… கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்(1.பேது.4:12-13).

தாவீது தன் யாழைகுறையின்றி இசைத்திட அவன் அநேக ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. இவ்வுலகத்தில்தயங்குகிறவர்களின் இருதயத்திற்கு ஊக்கம் அளிக்கவும், பரலோகப்பிதாவின் வீட்டில்சந்தோஷம் உண்டாக்கத்தக்கதாகவும், துதியும் இன்னிசையுமுள்ள சங்கீதத்தைப் பெற அநேகமணி நேரம் வனாந்தரத்தில் காத்திருத்தல் அவசியம்.

தாவீதைப்போல் அருமையானகீதம் யாரும் பாடவில்லை. அப்படிப்பட்ட சங்கீதம் பாட ஈசாயின் மகன் என்ன ஆயத்தம்செய்தான்?

தீமை செய்கிறவர்களைஎதிர்த்தபோது, கர்த்தரின் உதவிக்காகக் கெஞ்சினான். கர்த்தர் நல்லவர் என்ற சிறுநம்பிக்கை, அவருடைய இரட்சிப்பையும், பல்லாயிரம் இரக்கங்களையும் கண்டவுன் சந்தோஷகீதங்களாக வெளிப்பட்டது. ஒவ்வொரு துக்கமும் அவன் வீணைக்கு ஒரு நாணானது. ஒவ்வொருகிருபையும் துதிப்பாட்டுகளுக்குக் கருப்பொருளாயிற்று.

இன்றைய தினமும்கர்த்தருடைய ஐனங்கள் அச் சங்கீதங்களைத் தங்கள் துக்கம், துதி இவைகளை அறிக்கையிடஉபயோகிக்கிறார்கள். தாவீதுக்கு வந்த கஷ்டங்களில் ஒன்று வராதிருந்தாலும், அவன் பெற்றபாக்கியத்தை அவன் கவனியாது அல்லது மதியாது இருந்தாலும் சங்கீதங்கள் அத்தனைமதிப்புக்குரியவைகளாய் இருந்திருக்காது.

கர்த்தருக்கு காத்திருந்து,அவருடைய சித்தப்படி செய்வது, அவருடைய பாடுகளுக்குப் பங்காளிகளாகி அவரை அறிந்து அவர்குமாரனின் சாயலைப் பெறுவதாகும். ஆவிக்குரிய அறிவில் பெருகவேண்டுமென்றால்அதற்கென்றிருக்கும் அதிகப் பாடுகளை அனுபவிக்கப் பயப்படக்கூடாது. பட்சதாபப்படுதல் என்றதெய்வீக சக்திக்கு விரிவான இடம் தேவை. ஏனென்றால் பரிசுத்த ஆவியைப் பெறுதல், ஒருவனைஎல்லாம் வெறுத்தவனாக அல்ல, இதயப் பூர்வமான பட்சத்தை மேன்மையாகவும், உண்மையாகவும்உடையவனாகச் செய்கிறது.

இயேசு கிறிஸ்துவே என்னைஉண்மையுள்ளவனா என்று சோதித்தறிந்து இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினார்(1.தீமோ.1:12).