March

மார்ச் 15

யாக்கோபு என்னும் சிறுபூச்சியே,…. பயப்படாதே…. நான் உன்னைப் புதிதும், கூர்மையுமான பற்களுள்ளயந்திரமாக்குகிறேன் (ஏசா.4:14-15).

பற்களுள்ள யந்திரம் புழு.இவ்விரண்டைப்போல் ஒன்றுக்கொன்று மாறுபட்டது ஏதும் உண்டோ. புழு வெகு மிருதுவான ஜந்து.கல்லால் காயப்படும். கடந்து செல்லும் சக்கரத்தின் கீழ் அகப்பட்டு நசுங்குண்டுபோகும்.பற்களுள்ள இயந்திரம் மற்றப் பொருள்களை உடைக்கும். அது உடைபடாது. பாறையிலும் அதுஅடையாளம் செய்யக்கூடும். வல்லமையுள்ள தேவன் ஒன்றை மற்றொன்றாக்கக் கூடியவர். ஆவியில்வல்லமையற்ற ஒரு மனிதனை, அல்லது ஒரு ஜாதியை எடுத்து, தன் ஆவியின் ஊக்குதலால்சரித்திரத்தில் மேன்மையான இடம் பெறும் வலிமை அளிக்கக்கூடியவர்.

ஆகையால் புழுபயப்படாதிருக்கலாம். வல்லமையுள்ள தேவன் நம்முடைய சந்தர்ப்பங்களைப் பார்க்கிலும் நம்மைபலமுள்ளவர்கள் ஆக்கலாம். நம்முடைய நன்மைக்கென்றே அவற்றை திருப்பலாம். கர்த்தரின்வல்லமையால் அவை யாவும் நம் ஆத்துமாவுக்கு கப்பங்கட்ட நாம் உதவலாம். இருண்ட ஏமாற்றம்ஒன்றை எடுத்து, அதை உடைத்துத் திறந்து, அதிலிருந்து கிருபை என்னும் ஆபரணத்தை எடுக்கலாம்.இரும்பையொத்த தீர்மானமான சித்தம் தேவன் நமக்கு அருளும்போது, இரும்புக் கலப்பை கடினமானபூமியை உடைத்துச் செல்லுவதுபோல் நாம் கஷ்டங்களினூடே செல்லலாம். நான் உன்னைஆக்குவேன் என்றார். அவர் அவ்வாறே செய்யமாட்டாரா?

கிறிஸ்து உலகிலுள்ளஉடைந்த பொருள்களால் தம் அரசாட்சியை ஏற்படுத்துகிறார். மனிதர் தங்கள் அரசாட்சியைநிலை நாட்டும்போது வெற்றியும் பலமும் உள்ளவர்களையே நாடித் தேடுகிறார். ஆனால் கர்த்தரோவாழ்க்கையில் வெற்றி பெறாதவர்களைத் தோல்வியுற்றவர்களை நாடுகிறார். மண்ணுலகில்தோல்வியடைந்தவர்களால் விண்ணுலகம் நிறைந்துகொண்டு வருகிறது. எந்த ஒரு முறிந்த நாணலையும்தூக்கியெடுத்தும் அழகு மகிமையும் உடையதாகச் செய்ய கிறிஸ்துவால் முடியும். துன்பத்தால்உடைந்த வாழ்க்கைகளை அவர் இன்னிசைமூலம் துதி செலுத்தும் வாத்தியங்களாக மாற்றமுடியும்.உலகில் மிக வருந்தத்தக்க தோல்வி எனத் தோன்றுவதை அவர் விண்ணில் சிறந்தமகிமையாக்குவார்.

என்னைப் பின்பற்று,நான் உன்னை மாற்றுவேன்

என் வார்த்தைகளைவல்லமையோடு பேசச் செய்வேன்.

என் இரக்கத்தின்கால்வாயாக்குவேன்.

ஒவ்வொரு வேளையும்உன்னை

உதவி செய்பவனாக்குவேன்.

என்னைப் பின்பற்று,நான் உன்னை மாற்றுவேன்.

நீ தானாக அடையமுடியாதநிலைக்கு

உன்னை உயர்த்துவேன்.

அன்பும் நம்பிக்கையும்பயபக்தியுமுள்ளவனாக்குவேன்.

என்னைப்போல்உன்னையும் ஆக்குவேன்.