March

மார்ச் 14

மோசே தேவன் இருந்தகார்மேகத்திற்குச் சமீபமாய்ச் சேர்ந்தான் (யாத்.20:21).

ஞானவான்களுக்கும்,ஐhக்கிரதையுள்ளவர்களுக்கும் மறைவாக கர்த்தர் இரகசியங்களை இன்னும் வைத்திருக்கிறார். நீஅவைகளைக் குறித்துப் பயப்படாதே. நீ அறியக்கூடாத காரியங்களை ஏற்றுக்கொண்டுதிருப்தியாயிரு. பொறுமையாய்க் காத்திரு. இருளின் பொக்கிஷத்தையும், இரகசியத்தின்மகிமையான ஐசுவரியங்களையும் அவர் உனக்குப் படிப்படியாய் வெளிப்படுத்துவார். இரகசியம்கர்த்தருடைய முகத்தை மறைக்கும் திரையாகும்.

உன் ஜீவியத்தில் வந்துசேரும் மேகத்தினுள் பிரவேசிக்கப் பயப்படாதே. தேவன் அதிலிருக்கிறார். அதன் மறுபாகம்,அவருடைய மகத்துவத்தால் ஒளிவிடுகிறது. பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள்நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின்மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள்பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள் (1.பேது.4:12-13). நீ அதிகத் தனித்தவனாகவும்,கைவிடப்பட்டவனாயும் காணப்படுகையில் தேவன் சமீபத்திலிருக்கிறார். கார்மேகத்திற்குள்அவர் இருக்கிறார். நீ தயங்காமல் அதன் இருண்ட இருளுக்குள் பாய்ந்து செல். அவரை மூடியிருக்கும்கூடாரத்திற்குள் பாய்ந்து செல். அவரை மூடியிருக்கும் கூடாரத்திற்குள் தேவன் உனக்காகக்காத்திருக்கிறார்.

உன் வாழ்வில் ஒருமேகம் கவிழ்ந்திருக்கிறதா?

அது இருண்டு பயங்கரமாகத்தோன்றுகிறதா?

புயல் வருவதற்குஅடையாளம்போல் காணப்படுகிறதா?

அது ஆகாயத்தை மறைத்துவரவர

இருண்டு கொண்டே இருண்டநிழலை ஏற்படுத்துகிறதா?

அப்படியானால் தேவன்அதில் வருகிறார்

உன் மேல் மேகம்நிழலிட்டுள்ளதா?

உன் வாழ்வில் மேகம்கவிழ்ந்திருக்கிறதா?

அப்படியானால் அது கர்த்தரின்ரதமாகும்.

அதில் அவர் ஏறி வருகிறார்.

அவா புயலையே ஆடையாகஅணிந்துள்ளார்.

உன் கண்களினால் காணமுடியாத

ஒளியை மறைத்துக்கொள்கிறார்.

அந்த மேகத்தில் தேவன்வருகிறார்.

உன் வாழ்வில் ஒரு மேகம்உண்டா?

பயங்கர அஞ்சத்தக்கசோதனை உண்டா?

என்ன நடக்கப்போகிறதென்றுதெரியாமல்

பனி மூடியது போல் இருக்கிறதா?

அப்படியானால் தேவன் அதில்வருகிறார்.

உன்மேல் மேகம்நிழலிட்டுள்ளதா?

உன் வாழ்வில் மேகம்கவிழ்ந்திருக்கிறதா?

நோயோ முதுமையோ துன்பமோஉன்னைப் பீடித்துள்ளதா?

மரணம் சமீபித்திருக்கிறதா?

உன் கடைசி மூச்சுடன் இவையனைத்தும்அழியும்.

உன் படகின்மேல் குவியும் இந்தமேகங்களுக்கு அஞ்சாதே.

மரணம் என்ற மேகம் இருளும்குளிரும் நிறைந்தது.

ஆனால் அதனருகில்பொன்னொளி சேர அழகு பெறும்.

தேவன் அந்த மேகத்தில்வருகிறார்.

ராக்கி மலையின் ஓர் உயரமான சிகரத்தின்மீதுடாக்டர் சீ என்ற பெரியார் கீழே அடிக்கும் புயலைக் கவனித்துக் கொண்டுநின்றுகொண்டிருக்கையில், மேகத்தினூடே மேலே ஒரு கழுகு பறந்து வந்தது. அப்போது அதன்மேலுள்ள நீர்த்துளிகள் வைரங்கள்போல் ஒளிவிட்டன. அந்தப் புயல் அடியாவிட்டால், கழுகுஅப்பள்ளத்தாக்கிலேயே இருந்திருக்கும். அப்படியே ஜீவியத்தின் கஷ்டங்கள் நம்மைக்கர்த்தருக்கு நேரே எழும்பச் செய்கின்றன.