March

மார்ச் 5

நாம் ஆரம்பத்திலேகொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில்,கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம் (எபி.3:14).

நாம் கடைசியாக எடுத்துவைக்கும் அடியே நமக்கு வெற்றியைக் கொடுக்கிறது. மோட்சப் பட்டண வாசலண்டைநெருங்குகையில்தான் அநேகத் தீமைகள் நெருங்கி வருவதாக மோட்சப் பயணம் என்னும் நூலில்எழுதப்பட்டிருக்கிறது. அங்கேதான் சந்தேகம் என்ற மாளிகையிலிருந்தது. களைத்த பிரயாணியைமயக்கி, சாவென்னும் நித்திரைக்குள்ளாகும்படியான மயக்க பூமியும் அங்கேதான் இருந்தது.மோட்ச வாசல் நாம் காணத்தக்கதாக இருக்கும்போதுதான், நரக வாசல் அதன் சகலகொடுரத்தோடும் நம்மைக் கிட்டிச் சேருகிறது. நாம் நன்மை செய்வதில்சோர்ந்துபோகாமலிருப்போமாக. சோர்ந்துபோகாமலிருந்தால் ஏற்ற வேளையில் பயனை அடைவோம்.நீங்கள் அதை அடையத்தக்கதாக ஓடுங்கள்.

துன்பக் கடலின் அலைகளினால்

நான்அலைக்கழிக்கப்படுகிறேன்.

சந்தேகம் என்னும்கரையினின்று

வீசும் காற்று என்மேல்மோதுகிறது.

விசுவாசம் என்னும்நங்கூரம்கூட

அக்காற்றினால்அசைக்கப்படுகிறது.

ஆனால், நானோஅமைதியாய்க்

கைவிடாத பொருள்களைப்பற்றிக்கொண்டிருக்கிறேன்.

பேய்கள் கோரமாய்ப்போரிட்டாலும்

தேவதூதர்கள் அதிகநேரம் மறைந்திருந்தாலும்

உண்மையும் நேர்மையும்உலகனைத்தையும்

வெல்லும் என்பதை நான்அறிவேன்.

விண்மீன்களுக்கும்அப்பால்

மேலான அன்பர் ஒருவர்உள்ளார்.

இரவின் கதவுகள்திறக்கும்பொழுது

அவரைக் காண்பேன்.

அதுவரைபொறுத்திருப்பேன்.

கடைசிவரை அரைமணி நேரம்சோர்ந்துபோகாமல் நிற்பதே தேவனிடமிருந்து மேலான காரியங்களைப் பெறுவதற்குரிய பெரும்பிரச்சனையாயிருக்கிறது.