June

யூன் 23

யூன் 23

….அப்பொழுது, பேதுருபடகை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக, ஜலத்தின் மேல் நடந்தான். காற்றுபலமாயிருக்கின்றதைக் கண்டு பயந்து, அமிழ்ந்து போகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும்என்று கூப்பிட்டான் (மத்.14:29-30).

பேதுருவுக்கு அவனுடைய ஐயங்களின்மத்தியிலும் சிறிதளவு விசுவாசம் இருந்தது. ஆதலால் அவன் கதறியும் ஓடியும் இயேசுவண்டைசேர்ந்தான் என்று ஜான் பனியன் கூறுகிறார்.

காணும் காட்சி ஒரு தடையாக இருப்பதைஇங்கு காண்கிறோம். கடலில் இறங்கி இயேசுநாதரண்டை புறப்பட்டுப்போக அவன் புறப்பட்டபின்,அவன் அலைகளைப்பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை. அவனுக்கு இருந்திருக்கவேண்டியகவலையெல்லாம் கிறிஸ்துநாதர் நின்ற இடத்திலிருந்து இருளினூடே தெரிந்த ஒளிப்பாதையைப்பற்றித்தான். அதற்கப்பால் பத்து மடங்கு எகிப்தின் செல்வங்களிலிருந்தாலும், அவருடையகவனம் அதைப் பார்க்க அழைக்கப்படவில்லை.

வா என்று உனது ஆண்டவர்உன்னைத் தண்ணீர்கள் மீது வர அழைத்தால், மகிழ்ச்சியுடன் புறப்படு. அவரை விட்டு அப்பால்ஒரு கணமும் நோக்காதே.

அலைகளைக் கணக்கீடு செய்துநீ வெல்ல முடியாது. மேம்பாடடைய முடியாது, காற்றைக் கணித்துக் கனவலிமை பெற்றிடமாட்டாய்.ஆபத்தைக் கணக்கிட்டால் அதன் முன் வீழ்ந்திட நேரிடும். கஷ்டங்களைக்கண்டு மலைத்துநிற்பது, அவற்றை எடுத்து உன் தலைமேல் போட்டு மண்டையை உடைத்துக்கொள்வதாகும்.பர்வதங்களுக்கு நேராக உன் கண்களை ஏறெடு. நேரே செல். வேறு வழியே கிடையாது.

நீர்மேல் செயல் நீ தயங்குகிறாயோ?

நீரில்நீந்த விசுவாசம் அனுமதிக்கிறது.

நீரில்நீ அமிழ்ந்திட அவர் விடார்.

நீநம்பினால் பெறுவாய் அவருடன் ஐக்கியம்.