June

யூன் 17

யூன் 17

அவைகள் நின்று தங்கள்செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்துஒரு சத்தம் பிறந்தது (எசேக்.1:25).

செட்டைகளைத் தளரவிடுவதுஎன்றால் என்ன? ஆண்டவருடைய சத்தத்தை எவ்வாறு கேட்டுத் தெரிந்து கொள்வது? என்று சிலர்கேட்கின்றனர். இதோ இரகசியம். அவர்கள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தபொழுது அந்த சத்தத்தைக் கேட்டனர்.

சிறகைஅடித்துக்கொண்டிருக்கும் பறவைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஒரே இடத்தில் நின்றாலும்அவைகளின் செட்டைகள் அடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இங்கே அவைகள் தங்கள்செட்டைகளைத் தரளவிட்டிருந்தபொழுது, அந்தச் சத்தத்தைக் கேட்டன என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டவருக்கு முன்னால்அமர்ந்திருக்கும்பொழுதோ, அல்லது முழந்தாளிட்டிருக்கும்பொழுதோ சில வேளைகளில் நமது ஆவிதன் செட்டைகளை அடித்துக்கொண்டிருப்பதை நாம் உணருகிறோமல்லவா? அவருடைய முன்னிலையில்நாம் மெய்யான அமைதியுடன் இருப்பதில்லை.

ஓர் அம்மையார் பலநாட்களுக்கு முன்னர் தான் ஜெபித்து வேண்டிக்கொண்ட ஒரு காரியத்தைப்பற்றி என்னிடம் கூறினார்.அந்த வேண்டுதலுக்குப் பதில் வருமளவும் தான் காத்திருக்கவில்லை என்று கூறினார். ஆண்டவர்பேசுவதைக் கேட்குமளவும் அவ்வம்மையார் அமைதியாயிருக்கவில்லை. அதை விட்டுத் தனது சுயஎண்ணங்களிலேயே ஆழ்ந்து விட்டார். விளைவு ஆபத்தாக முடிந்தது. தான் வந்த வழியிலேயே அவர்திரும்பிச்செல்ல வேண்டியவரானார்.

இதில் எவ்வளவு ஆற்றல்விரயமாகிவிட்டது. நமது ஆவியின் செட்டைகளைத் தளரவிட்டு, ஆண்டவர் முன்னால்அமைதியாயிராமல் நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்கி விடுகிறோம்! அவருடைய குரலை நாம்கேட்பதற்கு அவருடைய முன்னிலையில் அமர்ந்திருக்கும்பொழுது நமக்குக் கிடைக்கும் அமைதி,ஓய்வு சமாதானம்தான் என்னே! அவ்வாறாயின் நாம் மின்னலைப்போல முன் செல்லுவோம்.திரும்பிப்பாராது ஆவியானவர் செல்லுமிடத்திற்கே நேராகச் செல்லுவோம் (எசேக்.1:1-20).

அமர்ந்திரு, இப்போதேஅமர்ந்திரு

அலை கடல் விண்மீன்அறியாதது,

ஆன்மா என்றும் கேளாதது,

ஆசையாயிசை பாடும்பறவை அறியாதது.

தந்தை நாட்டினின்றுவரும் செய்தி,

தயங்கும் மகனின்ஆவிக்குயிரளிப்பது,

தனித்து அமைதியாய் இருந்திடில்,

தந்தையனுப்புவார்உனக்கும்.

அமர்ந்திரு, இப்போதேஅமர்ந்திரு,

அங்கோர் மென்மை இனியமுன்னிலை,

அவா தம் மிதியடிகள்மென்மையே

அமைதியாயது அவருடன்வருமே.

இயேசு அனுப்பிய ஆறுதலது.

இறைவன் சப்தம்நீயறிந்திட

இயேசுவின் ஆவி,காத்திருக்கும் உன்

இளைத்த ஆன்மாவை,நிரப்பிடும், காத்திரு.