June

யூன் 15

யூன் 15

நான்சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் (ஆதி.41:52).

கோடைமழை பெய்ந்துகொண்டிருக்கிறது. கவிஞர் ஒரு பலகணியருகில் நின்று மழையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கொட்டுக் கொட்டென மழை நிலத்தைத் தாக்குகிறது. தன் கண்களுக்கு முன்தெரியும் மழை காட்சிக்கு அப்பால் கவிஞரின் மனக்கண்களை நோக்குகின்றன. நீர்வளம்பெற்ற நிலத்தினின்று எழுந்து வரவிருக்கும் ஆயிரக்கணக்கான அரும் மலர்களை அவை காண்கின்றன.அவரது மனக்கண்களின் முன்னர் அம்மலர்கள் மிக அழகாகக் காட்சி தருகின்றன. கவிஞரின்உள்ளம் கவிதை ஒன்றை இயற்றிப்பாட ஆரம்பிக்கிறது.

எனக்கென இம்மழைகளில்லை,

எழிலுடன் துலங்கும்மலர்களுக்கே

விழும் ஒவ்வொருதுளியிலும்,

வீறிட்டெழும் ஒரு மலரே.

கருமுகில் கதிரவனை மறைத்து,

கனமழையால் நகர் மறையினும்,

அம்மழை எனக்காகப்பெய்யவில்லை,

அது அழகிய ரோஜாக்கள்மலர்ந்திடவே.

ஒருவேளை ஆண்டவரால் கண்டித்துத் திருத்தப்பட்டமகள், இவ் வேளையில்தானே, அண்டவரே, என் வாழ்வில் கொடியதாய் மழை கொட்டுகிறதே எனஅங்கலாய்க்கலாம். என்னால் தாங்க முடியாச் சோதனைகள் என்மேல் வருகின்றனவே. மழைபோல்ஏமாற்றங்கள் என்மேல் கொட்டுகின்றனவே. என் திட்டங்களெல்லாம் பயனற்றுப்போகின்றனவே. இழப்புகளாகிய மழை என் இதயத்தையே துன்பத்தின் அகோரத்தில் நடுங்கிச்சுருங்கச் செய்து விடுகின்றதே. துன்பங்களாகிய அடிகள் என் ஆத்துமாவை அடித்துவீழ்த்துகின்றனவே என்று புலம்பக்கூடும்.

இருந்தாலும், நண்பனே, உன் எண்ணம் தவறானது. மழைஉனக்காகப் பெய்யவில்லை. ஆசீர்வாதமான மழை பெய்கிறது. நீ மட்டிலும் உனது தந்தையாகியஆண்டவரின் வார்த்தைகளை நம்புவாயானால், கண்டித்துத் திருத்தப்படாதிருந்த உனதுவாழ்க்கையில் ஒன்றும் மலராதிருந்த இடத்தில் நறுமணம் வீசும் நல்ல மலர்கள் எழுந்து வரக்காண்பாய்.

மழையை நீ காண்கிறாய், மலர்களையும் நீகாண்கிறாயா? உனது பல சோதனைகளால் நோவு அடைகிறாய். ஆனால், ஆண்டவர் இச்நோதனைகளின் பலனாக உனது வாழ்க்கையிலிருந்து வரும் அழகும் நறுமணமும் தரும் விசுவாசமலர்களைக் காண்கிறார்.

நீ உனது துன்பத்தைக் கண்டு நடுங்குகிறாய். ஆனால்,ஆண்டவர் பிறருடைய துன்பங்களைக் கண்டு, உனது இதயத்தில் உருவாகும் பரிவுணர்ச்சியைக்காண்கிறார். உனது வாழ்வில் எற்பட்ட பெரிய இழப்பினால், உன் இதயம் வேதனையால்துடிக்கிறது. ஆனால் அண்டவர் காண்பதோ ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தையே.

துன்பங்கள் உனக்காக மழைபோல் கொட்டுவதில்லை,அவை ஆவியின் கனிகளாகிய அன்பு, பரிதாபம், பொறுமை, மென்மையுணர்வு என்பவற்றை உன்வாழ்வில் உருவாக்குகின்றன. இவை உனது ஆன்மீக வாழ்க்கையை வளமுள்ளதாக்குகின்றன. இத்தகையவளத்தை உனது உலகச் செல்வங்களும், சௌகரியங்களும் உனது ஆத்துமாவுக்கு என்றும் தரமுடியாது.

புயலினூடே கீதங்கள்

ஆதவனொளி மலர்களை மிளிரச்செய்தது,

அங்கு காற்றேதுமின்றிஅமைதி நிலவியது.

காலை முதல் தொடர்ந்துநடந்த

சாலைப்பயணி ஒருவன்

அருகிலிருந்த வீணையிலிருந்து

அருங்கான ஒலியெழுப்பிடமுயன்றான்.

இசையொன்றும் அதிலிருந்து

இனிமையாயெழும்பிவிடவில்லை.

அப்பொழுதங்கு வீசியகடுங்காற்று

அவ்வீணையில் இசையெழுப்பியது.

புன்னகையுண்டாக்கும் புதிய இசை

புயலின்செயலாலேற்பட்டதேயாம்.

போராடும் வீரனுக்குப்போரெக்காளாம்

பொருந்தத் தந்திடும்வீரமதைப் போல்,

புயலின்கொடுரத்திலிருந்துதான்

புத்துயிர் தரும் ஆண்டவனின்அன்பு கீதம் வரும்.