June

யூன் 14

யூன் 14

நானோ உன் விசுவாசம்ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் (லூக். 22:32).

கிறிஸ்தவனே , உன்விசுவாசத்தைக் காத்துக்கொள்ள. ஏனென்றால், உனக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கக்கூடிய ஒரேவழி விசுவாசமே. விசுவாசிக்கும் ஒரு மனிதனின் ஜெபம் ஊக்கமாயிராவிட்டால், அதுஆண்டவரிடமிருந்து பதிலைக் கொண்டுவராது.

விசுவாசம் மண்ணுலகையும்,விண்ணுலகையும் இணைக்கும் தந்திக் கம்பி போன்றது. அதன்மூலம் ஆண்டவர் நாம் கேட்கும்முன்னரே நமது ஜெபங்களுக்கு மின் வேகமாகப் பதில் தருகிறார். நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்பொழுதே அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், விசவாசமாகிய தந்திக்கம்பி அறுந்து போனால், எவ்வாறு அவருடைய வாக்குத்தத்தங்களை நாம் பெற முடியும்?

நான்தொல்லையிலிருக்கிறேனா? எனது தொல்லைகளில் தேவையான உதவியை நான் எவ்வாறுவிசுவாசத்தின்மூலம் பெற முடியும்? என் எதிரியினால் நான் அடித்து அலைக்கழிக்கப்படுகிறேனா?அப்படியானால் என்னுடைய ஆன்மா அதனுடைய பாசமிகு பாதுகாப்பின்மீது விசுவாசத்தின் மூலம்சாய்ந்து கொள்ளமுடியும்.

என்னுடைய விசுவாசத்தைஅகற்றிவிடுவாயானால், நான் எவ்வளவுதான் ஆண்டவரிடம் வேண்டினாலும் யாது பயனுமிராது.விசுவாசத்தைத் தவிர என் ஆன்மாவுக்கும் மோட்சத்திற்குமிடையே வேறு எந்தப் பாதையும்கிடையாது. அப் பாதையை அடைத்துவிட்டால் எவ்வாறு நான் என் மன்னருடன் தொடர்புகொள்ளமுடியும்?

விசுவாசம் என்னைத்தெய்வத்துடன் இணைக்கிறது. யேகோவாவின் ஆற்றலினால் எனக்கு ஆடை அணிவிக்கிறது.ஆண்டவரின் ஆற்றல்கள் ஒவ்வொன்றையும், என் பாதுகாப்பிற்கென விசுவாசம் உறுதிசெய்கிறது.நரகத்தின் சக்திகளை நான் எதிர்த்து நிற்க அது எனக்கு உதவுகிறது. என் எதிரிகளின்கழுத்தில் கால் வைத்து, நான் றெவ்றி நடைபோடச் செய்வது என் விசுவாசமே. ஆனால்விசுவாசமில்லாமல், எவ்வாறு நான் எதையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடும்?

அவ்வாறானால்,கிறிஸ்தவனே, உன் விசுவாசத்தை நன்கு காத்துக்கொள். நீ விசுவாசிக்கக்: கூடுமானால் ஆகும்.விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.

நாம் செயலாற்றும்பாங்குள்ள மக்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆதலால், விசுவாசத்தைக்காட்டிலும் உதவியானதொரு காரியம் வேணடுமென விரும்புகிறோம். வாக்குத்தத்தம்விசுவாசத்தினால் வருகிறதினால், அது நிச்சயத்தை உடையதாயிருக்கிறது என்று பவுலடியார் கூறவில்லையோ?(ரோ.4:16)

விசுவாசம் ஆண்டவரைமகிமைப்படுத்துகிறது. ஆண்டவர் விசுவாசத்தை மதிக்கிறார்.